இன்னுமொரு வெளி - ஆம்பிளைகளின் எழுத்து -3-
இன்னுமொரு வெளி
அவர்களுடைய புத்தகமான சனதருமபோதினியை நான் எங்கோ தொலைவில், பசுமையான மரங்களும் அழகான வீடுகளும் நிறைந்த வன்கூவர் நகரில், -தமிழ் கடைகள், பத்திரிகைகள், கோயில் குளங்கள் திருவிழாக்கள் அற்று- நிம்மதியாக, இப்போதுதான் ஆற அமர வாசிக்கக் கிடைத்தது. எல்லோராலும் பிரஸ்தாபிக்கப்ட்ட அல்லது அர்ச்சிக்கபட்ட ~உன்னத சங்கீதம்~ மே முதல் வாசிப்பு. தாமிரபரணிப் படுகொலைகள் பற்றிய முதல் கட்டுரையை எல்லோரும் போலவே நானும் தொடவில்லை. சேனனை அவரது குறியைப் பிடித்தபடி படிக்கும் பாக்கியமும் கிடைத்தது.
குண்டிக்குப் பின்னால் சிரித்தும், படித்தும் முடித்துவிட்டு இத் தொகுப்பில் அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டிய -இதுவரை பேசவே படாத- இரு கட்டுரைகளான தாமிரபரணிப் படுகொலைகள் மற்றும் எழுத்தின் வன்முறை ஆகியனவையை விடுத்து நானும், சனதருமபோதினிக்கு பப்ளிசிட்டி கொடுத்த ஒரு கதையை எடுத்து விளாச விரும்புவதற்குக் காரணம், இல்லாவிட்டால், என் ஆத்மா சாந்தியடையாது என்பதே!!!
ஏனெனில் இந்த மாதிரி எழுத்துக்கள் ஏற்கனவே நொந்துபோன எமது புண்-களில் கொட்டானைப் பாய்ச்சுகின்றன...
கொட்டானின் கொட்டம் என எழுதப்பட்டிருக்க வேண்டிய சிறுகதை இன்னமும் உள்ளே எரிந்துகொண்டிருக்கிறது. இதற்கான எதிர்வினை என்று வந்தவைகளில் '13 வயது சிறமி முதிர்ச்சியானவளாய் இருந்தால் இப்படியான உறவுகளில் ஒன்றும் சொல்ல முடியாது' என்று பொருள்பட யாரோ எழுதியது ஞாபத்தில் அழுத்தியது.
...........
இதுவரை எழுதப்பட்ட/டு பிரபலமான சிறுவர் ஒடுக்குமறை எழுத்துக்கள் யாவும் ஆண்களாலேயே எழுதப்பட்டன என்பது ஒரு ஆர்வம் தருகிற விசயம் (அதாவது (2001) பெண்கள் சந்திப்பு மலரில் உமா (ஜேர்மனி) குறிப்பிட்டதுபோல ஒடுக்குமுறையாளரின் இடத்திலிருந்து எழுதப்பட்டவைகள்). நற்போக்கு சிங்கர் எஸ்.போ எழுதிய தரமான இலக்கியம் 'தீ.' அதைப்போலவே போர்னோகிராபி யாய் ஆகக் கூடிய கருவில் விளாமிடிர் நபக்கோவ் எழுதிய நாவல் 'லோலைரா' (Lolita). (வரிசைப் படுத்துவதற்கு வேறு நாவல்கள் தெரியாததால் இத்துடன் விட்டுவிடுகிறேன்!)
எஸ். போ 'தீ' யில் பெண் குறியை 'வெட்கம்' என்று எழுதுகிறார். பெண் உறுப்பை அப்போதுதூன் முதன்முதலாய் கண்டுவிட்ட சிறுவன் போல் குதுா கலிக்கிறார்: "அவளுடைய வெட்கத்தை நான் பார்த்துவிட்டேன்." அவரிடம் இன்னொரு சமயம் வருகிறேன். இப்போது நபக்கோவையையும் நம்ம பையன்களையும் பார்ப்போம்.
வெள்ளையர்களைப் பொறுத்தவரையில் ஆசியாவின் எல்லாத்திற்குமே அவர்கள் பார்வையாளர்களே. 'கற்பழிக்ககப்ட்ட' அவர்களது பெண் கதறுவததைவிட 'கற்பழிபட்ட' கறுப்பு, ஆசியப் பெண்கள் கதறுவது அவர்களுக்கு வித்தியாசமாக இருந்திருக்கிறது/இருக்கிறது. அவர்கள் தமது ஆதிக்கத்தினால் நொந்துபோய் ஒரு பெண் மண் எடுத்து துாற்றும்போதும் அதை படம் எடுத்துக் கொள்வார்கள் ''அது ஒரு கலைத்துவமான காட்சி'' என (இப்படி ஒரு காட்சி இமையத்தின் ~ஆறுமுகம்~ நாவலிலும் வருகிறது). சுற்றுலாப் பயணிகளான அவர்களுக்கு தமது வெள்ளைத்தோல் பெண்களைத்தவிர மீதி ஆபிரிக்க ஆசியா (மற்றும் செவ்விந்தியர்கள்) எல்லாம் படம்பிடிப்புக்கான களங்கள்தான். இவர்களே அத்தகைய படங்களையும் எடுத்தபடி, இலங்கை இந்தியா போன்ற ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளாய் செல்லுகையில் எதிர்க்கும் பொருளாதார வலுவற்ற சிறு பாலகர்கள்/பாலகிகளை கொட்டான்களால் குத்திவிட்டு வருவார்கள்.
இதில் நபக்கோவ் 13 வயதுவரையான பெண்களின் மீதான தனது ஆர்வத்தைக் கூறிக்கொண்டே போகையில் சொல்கிறான்:
...வரலாற்றில் எத்தனை மன்னர்கள் குழந்தைகளை மணந்துள்ளனர். இன்றைக்கும் இந்தியாவில் பெண்கள் பூப்படைய முதலே கலியாணம் செய்து கொள்கிறார்கள். அவர்களது தெய்வம் ராமன் சீதையை மணந்து கொண்டபொழுது சீதைக்கு வயது ஐந்து. (மொ-பெயர்பு- சேனன்)
நபக்கோவ் என்கிற கள்ளன் அல்லது நபக்கோவின் பாத்திரம் என்கிற கதைசொல்லி என்பவன் போய்ப் பார்த்தானா இந்தியாவில் கிழவன்களுக்குக் கட்டிக்கொடுக்கப்பட்ட சிறு குழந்தைகள் இவரைப் போல குதூகலித்ததை? ஆனால் தூரத்தில் இருந்து குழந்தைகள்மீது காதல்வசப்பட்டிருக்கும் அவருக்கு அந்த/அத்தகைய ஏற்பாடு(கள்) தூரத்துப் பச்சையாய் ஏக்கம் தருவதாய் உள்ளது.
இதை சேனன் தனது எழுத்தில்் எடுத்தாள்கிறார். அந்த பந்தி அவரால் மொழி பெயர்க்கப்பட்டும் இருக்கிறது. பிறப்பால் ஓரு கீழைத்தேயனான இவரிற்கு தோன்றியிருக்க வேண்டிய இந்த முரண்பாடு அவருக்குத் தோன்றவில்லை. (அவ் எழுத்தின்் பேசுபொருள் அது பற்றியதல்லாமல் இருக்கலாம்).
அதன்் பேசுபொருளுக்குள்ளேயே அதை நகர்த்தவேண்டுமென்கிற பிரச்சினை எனக்கில்லாததால், (சேனன்) பூபிக் கெயர் ஏ வளராத எட்டொன்பது வயதுப் பிள்ளையின் மெதுமையான விரியாத குறிக்குள் ஒரு மிகப்பெரிய கொட்டானைத் குத்துவது எந்தக் கலைத்துவமான படைப்பில் வெளிக்கொணரப்பட்டாலும் அது வக்கிரம், வக்கிரம், கலைத்துவமான வக்கிரம் என எழுத்தைக் குத்துகிறேன்.
அது எஸ்.போ வோ, நபக்கோவோ எந்தக் கொம்பனோ எவன் எழுதினாலும் அது அதுதான். மின்கம்பங்களில் கொல்லப்பட்டவர்கள், மனநோயர்கள் பற்றிக் கவலையுறுகிற நண்பர்கள், ஆண்களால் இந்தப் புத்தகம் என்னிடம் தரப்பட்டிருக்குமாயின் கொண்டான்களால் தாக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கே சமர்ப்பித்திருப்பேன்.
புலம்பெயர்ந்தபிறகும் சாதியைக் கடைப்பிடிப்பவராக ஐயரைப் பார்த்து குண்டியால் சிரித்தும், எஸ்.போவின் அரசியலுடன் அஞ்சுசோத்திற்கும் உடன்படவில்லை என்று முன்னுரையிலும் சொல்லிய நேர்மையாளர்களான சுகனும் ஸோபாவும் அடக்குமுறை வரிசையில் (குழந்தைகள் (வேண்டுமானால் உப பிரிவாக, முறையே, தலித், கறுப்பு, வெள்ளைக் குழந்தைகள்), சிறுவர்கள், தலித் பெண்கள், பெண்கள், தலித்துகள் ...) முதலாவதாக இருக்கிற உயிர்கள் மீதான அடக்குமறையை பிரதிபலிக்கிற ஒரு படைப்பிற்கான தமது எதிர்ப்பை பதியாதது அவர்களும் இதனை ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற அர்த்தத்தையே தருகிறது.
அதனாலோ என்னவோ இலக்கியத்தில் எல்லாக் கொம்பன்களையும் வெருட்டுகிறதாய்ச் சொல்கிற இவர்களும் அவர்கள்போலவே ஆம்பிளை எழுத்துக்களை கொண்டுவருகிறார்கள்.
சாநி யும் கூட இந்த கதையில் 13 வயது ஆண்குழந்தையை குறிப்பிடாமல் (குறிப்பிட்டிருந்தால் அவர் நினைக்கிற அதி அதி உன்னத இலக்கியப் பிரதி கிட்டியிருக்காதோ) பெண் குழந்தையைக் குறிப்பிடுவதுமூலம் மீண்டும் யோனி மையவாதத்திற்கே வருகிறார் 3(பார்க்க இவரது விவாதம் அடங்கிய அரசு- குடும்பம்- பெண்ணியம் (1994), விடியல் வெளியீடு பக்கம் 75). மச்சான் ஒரு பெரிய ஆணையும் குழந்தையையும் ஒரே கதையில ஒண்டடிமண்டடியா போட்டு ஒரு மிக்சிங் இல தன்ர புட்டம், வாய் ஆகியவற்றக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் அதையும் இணைக்கத்தான் பார்த்தார். ஆனால் யோனியின் புகழ்பாடி கதையை முடிப்பதுாடாகவும் அதனுாடாக தான் 'உன்னத' சங்கீதத்தைப் பெற்றதாகக் கூறுவதுாடாகவும் உன்னதமான அதி அதி (fresh) மரு அற்ற, ஒரு குழந்தையின் மிருதுவான, சுருங்காத தோலைப்போலவே இன்னமும் மாசடையாத செக்ஸ் சை ஒரு பெண்ணிடமிருந்து (அவள் எத்தகைய வயதெனினும்) ஒரு ஆணாக தான் பெற விரும்புவதையே அவர் தெரிவிக்கிறார். அது குழந்தையின் (வசதிப்படி, முதிர்ச்சியான குழந்தையின்) ஜோனியூடாகவே ஈடேறியிருக்கிறது.
இந்த கதாசிரியரின் எழுத்து எப்பொழுதும் முரண்பாடுகளின் பின்னணியிலேயே இயங்குகின்றது.
ஒரு பெட்டையாய், மிஸ்டர் சாரு வின் எழுத்தைப் பற்றிய எனது அதிர்ச்சி என்னவென்றால் -அதை யாரோ பிரசுரித்தது அல்ல- அதைப் பலரும் ஏற்றக்கொண்டதுதான். இலங்கை போன்ற நாடுகளில் இருக்கிற நண்பர்கள்கூட, 'அதை எழுதக் கூடாது என்றில்லைத்தானே, அது நல்ல புனைவு' என சொன்னபோது நான் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளானேன். இலங்கையில் கைதடி போன்ற சிறுவர் இல்லங்களில் எல்லாம் சிறு குழந்தைகள் இந்த வன்முறைக்கு வக்கிரத்துக்கு இரையாகிக்கொண்டிருக்கிறார்கள். எப்போதும்போல அவர்களுக்குப் பாதுகாப்பே இல்லை. “நம்பிக்கைக்குரிய” பெரியவர்களால் துஸ்பிரயோகம் செய்யப்படும் இந்தக் குழந்தைகள் பற்றிய ஒரு பிரசுரம் பொறுப்பின்றி (தமது அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்களால்) வெளியிடப்படுவது அவர்கள்சார் எல்லா நியாயங்களையும் கேள்விக்குட்படுத்துகிற ஒன்று.
இவற்றை எழுதக்கூடாதென்பதோ எழுதுபவன் கைகளைத் துண்டிக்க வேண்டும் என்பதோ எனது முறைப்பாடு அல்ல. அவரது எழுதுகிற உரிமையையும் எனது எதிர்க்கிற உரிமையையும் (அவரது ஆண்குறியை வெட்டவேண்டும் என்று சொல்லிக்கூட) அதனை சிலபேர் பிரசுரிக்கிற உரிமையையும் நான் மதிக்கிறேன். ஆயினும், இதுவும் ஒரு அடக்குமுறை என்பது (புலிகளின் அரசியல் போலவே) தொகுப்பாளர்களால் சொல்லப்பட்டிருக்க வேண்டியது ஒடுக்கப்பட்ட ஜனங்களைப்பற்றிப் பேசுகின்றவர்களது நேர்மையை வெளிக்காட்டியிருக்கும். ஆகவே அதை அடக்குமுறை என அறியாத சில அப்பாவிக் கோயிந்தர்களும் அறிந்திருப்பார்கள்!
நாளைய உலகத்தைக் பார்க்கப் போகிற இந்தக் குழந்தைகள் பாலியல் சுதந்திரத்தை (அதைப் பேசுகிறவர்கள்போலவே) வளர்ந்த பிறகு பேசட்டும். இப்போது அவர்கள் தம் உலகத்தில், தம் வயதுக் குழந்தைகளைப் புணர்ந்து வாழ்வைத் தொடரட்டும். உங்களது வக்கிரமான fantasy களை அடைய கொட்டான்களைத் துாக்கிக்கொண்டு அலையாதீர்கள்.
சமீபத்தில் வன்கூவர் சிறுவர் காப்பகத்திலிருந்து வெளிவந்த ஒரு படம் பார்க்கக் கிடைத்தது. நான் கடைசி எழுத்தோட்டம் போகுமட்டும் அதொரு சிறுவர் துஸ்பிரயோக எதிர்ப்பு அமைப்பால் வெளியிடப்பட்ட படம் என்கிற தகவல் தரப் பெற்றிராதபடியால் இயல்பாக எந்த முன் கருத்துமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நீதிமன்றத்தில் ஆஜரான பதினொன்றோ பதின்மூன்றோ (சாருவின் கதாநாயகியின் வயது) வயது சிறுமி தன் அப்பா தன்னோடு செக்ஸ் செய்தார் என்று சொல்கிறாள். அதை எதிர்த்தரப்பு வாதியும், குழந்தையின் அம்மாவும், அப்பாவும் அவள் வளர்கிற பருவத்தில் முகங்கொடுக்கிற பிரச்சினையான தன்மீது எல்லோருடைய கவனமும் இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி சொலகிறாள் என சொல்கிறார்கள். கூடவே அவளது வகுப்பில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 'சிறுவர் துஸ்பிரயோக விழிப்புணர்வு' பற்றிய வகுப்பும் அவளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி சாதாரணமான (normal) அப்பாவின் கொஞ்சல்களை, குளிக்கவாட்டுதலை சந்தேகிக் வைத்திருக்கலாம் என்றும் எதிர் தரப்பினர் வாதாடுகிறார்கள். (இது மறைமுகமான அப் பாடத்திட்டத்திற்கான (பாலியல் கல்வி) எதிர்ப்பு வாதமுங் கூட!) பார்வையாளினியான நானும் அதையே நினைக்கிறேன். மிகவும் வாஞ்சையுள்ளவனாகவும் உருக்கமான கண்களை உடையவனாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தந்தையால் அப்படி தன் குழந்தைக்கு செய்ய முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
செக்ஸ் பெண் குறியினுாடாகச் செய்யப் படாததாலும் அவள் இன்னும் கன்னி என்பதாலும் அவளுக்காக வாதாடும் வழக்கறிஞருக்குக்கூட இறுதியில் அச் சந்தேகம் வந்துவிடுகிறது, இவள் பொய் சொல்கிறாளோ என்று... ஆனால் (இது தெரியவரக்கூடாதென்பதற்காக?) தன் குழந்தைகளின் புட்டம் வழி உறவுகொண்டிருக்கிறான் அந்த தகப்பன். (அவரது குழந்தைகளில் ஆறோ ஏழோ வயது ஆண் குழந்தையும் அடக்கம்)
இறுதிக் கட்டத்தில் ஏற்கனவே அத் தந்தையால் முன்பு இதே வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட இப்போது திருமணம் செய்து கொண்டு குழந்தையும் இருக்கிற மூத்த பெண் உண்மையை சொல்ல படம் முடிகிறது.
இந்தப் படத்தின்பின் கனடாவில் வந்த சிறுவர் துஸ்பிரயோக வழக்குகளை (படத்தின் பெயர் சரியாய் ஞாபகம் இல்லை) -Fallen angel - வழக்குகள் (cases) என்றுதான் குறிப்பிட்டார்களாம்...!
எங்களுடைய சமூகத்தில் இத்தகைய 'சம்பவங்கள்' இடம்பெறுகிறபோதும் அவை மறைக்கப்பட்டும் பேச மறுக்கப்பட்டும் வருவதை கேள்விப் படுகிறோம். இல்லாதவை பற்றியெல்லாம் கற்பனைகள் காவுகிற ஒரு சமூகம் நடப்பவை பற்றி எழுதத் தயங்குவது ஏன்? இந்த வகையில் மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் பெண் சஞ்சகை (சூர்யா பெண்கள் அபிவிருத்தி கழகத்தால் வெளியிடப்படுவது) அங்கு நடக்கும் இத்தகைய செயல்களை வெளிக்கொணர்வது மாத்திரமின்றி, அவைகள் குறித்த பெண்களின் எதிர்வினைகள், பதிவுகள், நாடகங்களையும் நிகழ்த்துகிறது.
குழந்தைகளின் யோனிகளிலிருந்து உன்னதமான சங்கீதத்தை பெறுவதாக எழுதுகிற உன்னதமான ஆண்களின் மனோபாவத்தை சற்றே மாறுபட்டு அடக்கப்படும் பெண்களின் பார்வையிலிருந்து தரும் ஆக்கங்கள் கீழே:
1நான்
உயர்ந்தவன், உன்னதமானவன்4
தனித்துவமானவன்
நான் ஆண்
ஆண் என்பதால்
ஆற்றல் உள்ளவன்
அனைத்தும் அறிபவன்
குற்றம் செய்ய முடியாதவன்
குற்றம் இருந்தாலும்
மன்னிக்கப்பட வேண்டியவன்
ஏனெனில்
நான் ஆண் குறியை உடையவன்
எனது ஆண்குறி
எப்போதும் எங்கு வேண்டுமானாலும்
யாரைக் கண்டாலும்
விறைக்கக் கூடியது
சகோதரியோ மகளோ
யாரும் விதிவிலக்கல்ல
எனது ஆண்குறி விறைக்கக் கூடியது
அது இயற்கை
பண்பாடு
எனக்கு நடிப்பிற்குரியது
நான் வேடம் போடக் கூடியவன்
சமுதாயத்திற்காக ...
இந்த விறைப்பை வளப்படுத்த
நீலப்படங்கள் உண்டு
புத்தகங்கள் உண்டு
அதனால் இது வளப்படுத்தப்பட வேண்டியது
நீ யார்?
வெறும் பெண்
இந்த விறைப்பைத் தீர்க்கப்
படைக்கப்பட்டவள்
நான்
உயர்வானவன்
உன்னதமானவன்
போற்றப்பட வேண்டியவன்
நான் ஆண்
கட்டுப்பாடுகள் அற்றவன்
சந்தோசமானவன்
எனது ஆண்குறி
விறைக்கக் கூடியது.
------------------------------------
2(நிசப்த இரைச்சல் என்ற நாடகப் பிரதியிலிருந்து இறுதிப் பகுதி)
...
{...நான் சொல்லப் போறது ஒரு சின்னப் பிள்ளையிடை கதை அவவையும், அவவிடை தங்கச்சியையும் அவையிடை அம்மம் மாவோட விட்டிட்டு தாய் வெளிநாட்டுக்குப் போய்ட்டா. தகப்பன் அம்மம்மா வீட்டுக்கு பக்கத்திலை தான் இருக்கிறார். அந்த மனுசன் இந்தக் குழந்தையோடை உடல் உறவு கொண்டிருந்திருக்குது.
இது எப்பிடித் தெரிய வந்ததெண்டா, அந்தப் பிள்ளை கக்காக்குப் போகப் பயப்பிடும், நிக்கரைக் கழட்டப் பயப்பிடும், அறையைப் பூட்டினா பயப்பிடுவா. அம்மம்மாக்காரி பிள்ளை தன்னோட செல்லம் கொட்டுதாக்கும் எண்டு நினைச்சு கூப்பிட்டு அடிபோட்டு கக்காக்கு இருக்கச் சொல்லி விட்டிருக்கிறா. பிள்ளை அழுதழுது இருக்கேக்குள்ளைதான் பார்த்தா அவவிடை குதம் விரிஞ்சு சிவந்து போய் இருந்தது தெரிஞ்சுது.
உனக்கு என்ன மகள் நடந்ததெண்டு கேக்க அவவுக்கு சொல்லக்கூடியதாயிருந்ததெல்லாம் ... அப்பாவிடை சாரத்துள்ளை ஒரு பொல்லிருந்தது அதாலை அவர் எனக்கு குத்திறவர்.
சமுதாயத்தின் நிசப்தமோ பயங்கர இரைச்சலாய்...
என் நிம்மதியைக் கெடுக்கிறது
வெளிச்சம் கூட வேண்டாம்
வெளியில் நான் தெரிவேன்
ஜன்னல் கூட வேண்டாம்
காற்று என்னைத் தொட்டு விடும்
அப்பா
அண்ணா
மாமா
தாத்தா
ஆண்
மூத்திரக் குழாய் தொங்கும்
யாரும் என் அருகில் வந்தால்
என் முடி முட்கம்பி
என் கண் நெருப்பு
என் வாய் வெட்டருவாள்
வெட்டி
வெட்டி
வெட்டி
வெட்டி
(ஒவ்வொரு வெட்டிக்கும் ஒவ்வொரு பெண்ணாக எழுந்து ஆண்குறியை எதிர்ப்பதான நிலையில் நிற்க- ஆண்களாக அவர்களைப் பிராண்டும் நிலையில் நிற்பவர்கள் மலைத்து நிற்றல்)
சமுதாயத்தின் நிசப்தமோ பயங்கர இரைச்சலாய்
என் நிம்மதியைக் கெடுக்கிறது
(மெல்லிய இரைச்சலாகத் தொடங்கி அலறலான இரைச்சலாக மாறும்)
----------------------------------------------------------------------------------
நன்றி:
1கல்யாணி
பெண் இதழ் இலக்கம் 2, 1999
2(நன்றி: பெண் இதழ் இலக்கம் 3, 1998)
3...பாலுறவு என்பது யோனி மைய வாதத்தை அடிப்படையாகக்கொண்டு தவறான புள்ளியிலிருந்து தொடங்குகிறது. ...
யோனி மைய வாதம் ஒதுக்கப்பட்டப் புட்ட உறவு, வாய் உறவு எனப் பாலுறவின் ஏனைய கூறுகள் முக்கியத்துவம் பெற வேண்டும். புட்டம், வாய் போன்றவற்றிற்குச் சமனான முக்கியத்துவமே யோனிக்கும் தரப்பட வேண்டும். (பக். 75) ... இறுதியாக யோனி என்பது இனப்பெருக்க மையமாக அமைந்து பெண்ணின் கார்ப்பம் குறித்த பயத்திற்கும் அடிப்படையாக உள்ளது."
எனப் பெண்களின் பயம் குறித்தெல்லாம் 'பெரிதாய்' அக்கறைப்படுகிறவர், இக் கதையில் வருகிற ஆணுடனான உறவையன்றி குழந்தையுடனான உறவையே 'உன்னத சங்கீதமாக' பகிர்கிறார். யோனியை -அதுவும் ஒரு சிறுமியினுடையது- ஒரு உறுப்பாக பார்க்க மறுத்து (glory) புகழ் பாடுகிறார். 'உன்னத சங்கீதம்' எனத் தலைப்பிட்டு அதனுாடாக எதிலும் (மாசுமறுவற்ற) 'உன்னதத்தைத்' (அதாவது இன்னும் சொல்வதானால் 'கன்னி' ப் பெண்களைத் தேடும்) தேடுகிற ஒரு ஆணை வெளிப்படுத்தி நிற்கிறார் (அந்த ஆணிற்கு எதற்கு பின்நவீனத்துவ முகம்?).
4 தன்னை உன்னதமான ஆண் என எண்ணுகிற ஒருவனாலேயே 13 வயது சிறுமியுடனான உறவை உன்னத சங்கீதம் என போற்றிப் பாடிட முடியும் என்பதைச் சொல்லவும் வேணுமோ?
9 Comments:
ஷோபா சக்தி, சுகன் வெளியிட்டுள்ள தொகுதிகளைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இதுவரை படித்ததில்லை.
தமிழகச் சூழலில் பீடோபிலியா பற்றி பாதிக்கப்பட்டவர்கள் நிலையிலிருந்து எழுதப்பட்ட இலக்கியங்கள் குறைவு. உமா மகேசுவரியின் மரப்பாச்சி என்ற சிறுகதைத் தொகுப்பில் புத்தகத் தலைப்பிலான கதை ஒரு சிறு பெண்ணை, அவளது மாமா பாலியல் வன்புணர்வுத் தாக்குவது பற்றியும் அதனால் அந்தக் குழந்தையின் உலகமே மாறுவது பற்றியும் சொல்லும்.
மரத்தடி யாஹூ! குழுமத்தில் குளிர்காலக் கதைப்போட்டி 2004இல் முதல் பரிசு பெற்ற கதை வேப்பம் பழம் [பகுதி 1 | பகுதி 2] சமீப காலங்களில் நான் படித்த நல்ல கதைகளில் ஒன்று.
மற்றபடி ஆண்கள் எழுதுவன எல்லாமே ஒன்று சாரு நிவேதிதா போன்ற அபத்தங்கள் அல்லது இதுபோல ஒன்று நடப்பதையே கண்டுகொள்ளாதவை.
-/ ?
-/ ?
NO NO!!
பத்ரி, எதேச்சை என்றுதான் நினைக்கிறேன். ஆனால், வேப்பம்பழம் கதையிலே மீராநாயரின் Monsoon Wedding [http://www.imdb.com/title/tt0265343/] படத்தின் ஒரு கிளைக்கதையின் சாயல் அடிக்கின்றது.
அந்தக் கதையை இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு என் அபிப்பிராயம் சொல்கிறேன். கனடாவிலும் சுமதி ழூபன் என்கிற பெண் இயக்குநரின் படம் தொடர்பாக இப்படி ஒரு விமர்சனம் வந்தது. இப்படியான விடயங்கள் ஏதேச்சையாகவும் நடக்கக்கூடியவைதான். இந்த விடயம் பற்றி ஜேர்மனியைச்சேர்நத நிருபா ஒரு கதை எழுதியுள்ளா "...சுணைக்குது" எண்டு. என்னைப்பொறுத்தமட்டில பல கதைகள் இப்படி ஒரு விசயத்தை 'பதிஞ்சவை'. ஆனா படைப்பு கிடையாது. நிருபாட படைப்புத்தான் (புகலிடத்தில்)வந்தவைகளில் எனக்குப் பிடித்திருந்தது. அதில் அநாவசியமான பெரியவர்களின் மூக்குநுழைப்புகள் "பெண்நிலைச் சிந்தனைகள்" எல்லாம் கிடையாது. ஒரு சிறுமி, ஒரு அனுபவம், ஒரு நிகழ்வு. அதற்கப்பால் இல்லை. ஒரு சிறுமியோட உலகத்த மீள 'வளர்ந்த' ஒரு பெண் வாழ்றது எல்லாராலும் (எழுத்தில) முடியுறதில்லை. உமா மகேஸ்வரி யின்ர மரப்பாச்சியும் முக்கியமானது. அவரது கதைகள் எல்லாமே மிகவும் உயிர்ப்பானவை. கதைகளைக் கட்டுகிறவர்களில் ஒருவரல்ல அவர்.
சந்தேகம் தீர்த்தமைக்கு நன்றி ரமணி.
Very interesting. But, I have no idea, why few of your posts are totally messed up in Firefox.
I have no idea too :-)
-podichchi
'உன்னத சங்கீதம்' சிறுகதைக்கான றஞ்சி (சுவிஸ்) யின் இந்த விமர்சனமும், உமா (ஜேர்மனி) வினதும் முக்கியமானவைதான். இரண்டுமே பெண்கள் சந்திப்ப மலர் (2001?) இல் வந்திருந்தன
Post a Comment
<< Home