குசும்புக்காரன்கள்
என்னைப் பற்றி
இவங்களுக்கென்ன தெரியும்?
நினைத்தாலே சிரிப்புத்தான்
என்ர வாழ்க்கையே மிகப்பெரிய நகைச்சுவையாய் இருந்தது
A dance that's walked
A song that's spoke
நான் ‘இருந்த இடத்துக்கு’ இவங்க சொன்ன பேர் ஒண்டு
இருந்த எனக்குத் தெரியாதா, என் னெண்டு?
சன்னலுக்குள்ளால பாத்தண்டுதான் இருந்தன்
தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் எண்டாங்கள்!
அப்பிடி எண்டாங்கள் இப்பிடி எண்டாங்கள்
அதெண்டாங்கள் இதெண்டாங்கள்
அசந்தா
சடாரெண்டு இன்னொண்டக் காட்டினாங்கள்
அட! இவங்கள நினைச்சாலே சிரிப்போ சிரிப்புத்தான்!
என்னடா இப்ப வேற எண்டாலோ
அதுதான் இது எண்டாங்கள்!
விழுந்து கிடந்து சிரிப்பன்
வயிறு நோகச் சிரிப்பன்
ஒண்ட வெட்டினா இன்னொண்டத் தளைச்சு
வித்தியாசம் பார் எண்டாங்கள்
ஐயோ! கடவுளே! இவங்கள நினைச்சாலே சிரிப்போ சிரிப்புத்தான்!
நான் விழுந்து கிடந்து சிரிப்பன்
வயிறு வெடிக்கச் சிரிப்பன்
---என்ர வயிறுதானே...
ஆஹ்ஹாஹா அஹ்ஹாஹா!
0
Who? வை 'ஆரத்த்' தழுவி
7 Comments:
உங்களைப் பற்றி ஆரெண்டு எனக்குத் தெரியவேண்டிய அவசியமில்லாவிட்டாலும் இந்த வட்டார வழக்கு உதைப்பதைப் பற்றியாவது நான் கொஞ்சம் யோசிப்பன்.
சே சே அவரா இருக்காது
-ஒரு குசும்புக்காரன்-
ஈ.நா,
சே..சே இதென்ன பேச்சு.
பேசப்படாது. வச்சிருக்கிற பன்னெண்டு வலைப்பூ பத்தாதெண்டு இதுக வேறயா..
சே..சே /-,இருக்கவே இருக்காது. :-)
//ஒண்ட வெட்டினா இன்னொண்டத் தளைச்சு
வித்தியாசம் பார் எண்டாங்கள்//
;-(
ஆனா திருவையாத்துத் தமிழக் காணேலயே?
ஈழநாதன்,
ம்ம்ம்.........#@$%^&*!@#$(!??
மணியோசை வரும் முன்னே யா/பூனை (இப்படியெல்லாம் slash/சிலாஸ் போட்டெழுதினால் குழம்புவீர்களா?) வரும் பின்னே மாதிரி எதையும் எழுதமுதல் இப்பெல்லாம் கவிதையா வருது, அதிலும், வழமைபோல யாரோ 'மாதிரி"த்தான் வருகிது. பார்த்தால்! "அவர்" என்று இருவரும் குறிப்பிடுகிறீர்கள் அது ஆண்/பெண் இருபாலாருக்கும் பொருந்தும்என்றுதானே?! நல்லது நன்றி!
வசந்தன்!
நான் தீவு, வன்னி, அப்புறம் கிழக்குப் பகுதி என வேர்கள் உடையவர். இங்கு இரணைமடு மற்றும் திருவையாற்றில் பல விடுமுறைகள் கழித்திருக்கிறேன்... தமிழ்தான் அடித்தளமாக இருக்கிறது, பேச்சவழக்கு மாறும் :-(
மூக்கன்!
அந்தப் பன்னெண்டு வலைப்பூக்களையும் பார்க்க என்று உதவியாளரா உ/எங்கள 'அவர்' கூப்பிடாதபட்சத்தே அவுக வலைப்பூக்கள் பற்றி நமக்கென்ன வந்தது?!
இந்த மேலு இருக்கிற high jumping இற்குத் தொடர்புடைய விசாதம் இங்கே, மயிலாடுதுறை சிவாவின் தளத்தில் நடந்தது. சற்றே பழையது.
நேரம் இருந்தால்/மெனக்கெட முடிந்தால் இந்த விவாத்தில் பெண்கள் குறித்து 'ஆண்கள்' கொண்டிருக்கிற கருத்துக்களைப் பாருங்கள். ஆனால் சிந்தனை எப்போதும் இந்தப் போக்கில்தான், எல்லாத் தளங்களிலும். பெண்ணின் உடலைப்பற்றிய 'இவங்கள்' புரிதல் புல்லரிக்கிறது. இதுபற்றி ஆறதலாய் எழுதணும்..
பொடிச்சி சொன்னது:
//எதையும் எழுதமுதல் இப்பெல்லாம் கவிதையா வருது, அதிலும், வழமைபோல யாரோ 'மாதிரி"த்தான் வருகிது.//
அடடே!
அப்ப நான்தான் 'தலைமையை' நம்பி ஏமாந்த சோனகிரியா?
முடியாவிட்டால் 'இயக்கத்தை' விட்டு விலகுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
//அப்ப நான்தான் 'தலைமையை' நம்பி ஏமாந்த சோனகிரியா?///
அடடா இது இப்பவாவது உமக்கும் விளங்கிடுச்சே! தொடர்ந்து நீர், //'இயக்கத்தை' விட்டு விலகுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.// என்று எழுதினால், நானும் கண்டண ஏவுகணைகள் உம்மை நோக்கி அறிக்கைகளாக ஏவவேண்டி இருக்கும் என்று எச்சரிக்கின்றேன் :-).
'கவிதையியல்' என ஒரு அலசல் ஆரம்பமாகும். இது கவிதையின் 'தொழில்'நுட்பத்தை' அலசி ஆ...........ராயும்! அதன்பிறகு இயக்கத்தில் இருந்து நான் விலகுவதா வேண்டாமா என யோசிக்கலாம்!
அமைதி! கொஞ்சம் ரென்சனானா கவிதை 'மாதிரி' வரும். இது ------ இட தழுவல் (பேர் சொல்ல விரும்பவில்லை).
இவ்வளவுதான் இப்போதைக்குக் கூறமுடியும்.
இது parody இற்கே parody.
டீசே எழுதுவதை கண்கொடுக்காதீர்கள்!
உலக *அகவிஞர்களே உஷாராயிருங்கள்!!!
;-)
*antipoets என்பதன் தமிழ்
Post a Comment
<< Home