@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Tuesday, October 11, 2005

பயம்

(ரோசாவசந்தின் பதவிற்கெழுதிய பின்னூட்டம், நீளங் கருதி இங்கே உள்ளிடுகிறென்).

ம்மிடையே மார்க்சியர்கள்/இடது/முற்போக்காளர்கள் என தம்மைக் குறிப்பிட்டுக்கொள்பவர்கள் பலரும் தாங்கள் அப்படி ஒரு பட்டத்தைத் தமக்கு தந்திருப்பதாலேயே பெண்களது பிரச்சினை குறித்து, பிற தம்மால் 'அனுபவித்தறிய' இயலாத மனிதர்களின் பிரச்சினைகுறித்து 'புரிந்துகொண்டேன் பேர்வழிகள்' என (ஒரு --ஐயும் புரியாமல்) இருப்பதைக் காணலாம். இது புதிய ஒன்று அல்ல.
இங்கே குஷ்பு சார்ந்த, பதிவுகள் படித்தபோது, "நாங்கள் இன்னஇன்ன இயர்களாக (மார்ச்சியர், பெரியாரிய, வட் எவர்!) இருப்பதால், படுபிற்போக்குத்தனமாக கருத்துக்களை காவுபவர்களாக இருக்கமாட்டோம்" எனகிற அசாத்திய நம்பிக்கையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இங்கே, ஒரு கட்சியாய் குறிப்பிட்ட கொள்கைகளின் கீழ் இணைந்திருக்கிறபோது, தனிநபர்களின் 'உயரிய' சிந்தனைகள் அடிபட்டுபோய்விடும்; ஆனா இங்க வந்து வலைப்பதியிற கட்சி சாராத அக் கொள்கைகள்சார் தனிநபர்கள், தான் இன்னஇயன் என என்ன யம்பிங் விட்டாலும், அது முடிய, என்ன சொல்கிறார்கள் என்பதே பொருட்டு என்பதை அடிக்கடி நினைவுபடுத்தவேண்டி இருக்கிறது.

திண்ணையில் படைக்கப்படுகிற
சின்னக்கருப்பன் போன்றவர்களது பிற்போக்குத்தனங்களைவிட ---அறிவியல்,நவீன இலக்கியம் என பரிச்சயமுடைய நபர்களின் மரபான பயத்தை (அதைத் தவிர வேறொன்றுமில்லை) த்தான் மிக ஆச்சரியமாகப் பார்க்க முடிகிறது.

குஷ்புவினது பேட்டியைப் பார்த்து 'இளம் யுவதிகள்' (இளைஞர்கள அல்ல!) , 'கெட்டு'ப்போய்விடுவார்கள் என்றும், குஸ்பு (திருமணத்திற்கு முன்பு வைத்திருக்கிறபோது) உரிய தற்காப்புகளுடன் உறவு வைத்துக்கொள்ள சொன்னதற்கு, 'செய்த (செக்ஸ்) தவறிற்கான பின்விளைவை' அனுபவிக்கத்தானே வேணும் என்கிறரீதியில் சொன்னது தனியே டோண்டு ராகவன் போன்றவர்கள் அல்ல. In fact, டோண்டு ராகவன் - அவர் நிச்சயம் அப்படிச் சொல்ல மாட்டார்! வேதங்களில் உள்ள பெண்ணடிமைத்தனத்தைப் பேச மாட்டாரே தவிர பெண்கள் குறித்து அவர் வைத்திருக்கிற கருத்துக்கள் இங்கே/எங்கேயும் எழுதுகிற பல 'சிவப்புக்கட்சி/பெரியார்' சார்பு அறிவியலாளர்களை விட உயர்ந்ததே. அதை 'அவர்' சொல்வதால் 'சந்தேகத்துடனும்' 'நேர்மையற்ற'தாகவும் 'சந்தர்ப்பவசமான'தாகவும் பார்க்க விழைகிற பலருக்கு தமது பின்னோக்கிய, மரபார்ந்த பயத்தை, ஒத்துக்கொள்ளும் நேர்மை கிடையாது.
பிற்போக்கான மற்றவர்களைப் பார்த்து 'சிரிப்பு வருகிறது' என்று அத்தகையவர்களது நகைச்சுவையுணர்வில் புளகாங்கிதமும் தவறாது அடைந்து போகிறவர்கள், தம்மை மறுபரிசீலனை செய்யத் தயராய் இருக்க வேண்டும். அது இல்லாதவர்கள் பலராகத்தான் அறிவுத்துறை ஆண்கள் எங்கயும் இருக்கிறார்கள்.
குஷ்பு வின் 'அதீதமான' கோபத்தையும் 'அதிகமாகக் கூவியதை'யும் இந்த 'அரசியல்'இற்கான காரணத்தைக்கூறி ''பெண்களே நீங்கள் இதை உங்களுக்கெதிரானதாக நினைக்கக்கூடாது'' என்பவர்கள், பயத்துடன் பதிவுகளிற்கு மேல பதிவும் -குஷ்பு சொன்னதைப் படிக்க முன்னரேயே- , பத்திரிகைகளில் பரப்புரையும் செய்பவர்கள் அவர்களை ஒத்த ஆட்களே. எதற்காக பெண்கள் இதை ஒரு அரசியலென புரிந்துகொள்ளவேண்டும். தம்மை அவமதிக்கிற, உள்ளடக்காத ஒரு சாமானை அவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும்?

இந்தியா டுடெயில், குஷ்பு சொன்னதில் எதில் எதில் முரண்படுகிறார்கள் எல்லாரும்? குஷ்பு சொன்ன என்ன விடயம் "பிரச்சினைக்குரியது" "முரண்பாடானது" என்பதை வெளிநாட்டிலிருக்கிற முற்போக்காளர்கள் -குஷ்புவின் அந்த ஒரு பக்கக் கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டி- விளக்கிக் கூறலாம். அந்த ஒருபக்க விளம்பலில் இருந்து எடுத்துப் போடுவது சிரமமான காரியங் கிடையாது. அதை செய்தால் உங்களது பயங்களின் நிலவரம் எந்த மட்டில இருக்கிறதென்பது தெரிய வரலாம்.

குஷ்பு சொன்னதைப் படிக்காமலே ஒவ்வருவரும் எழுதிய கருத்துக்கள் + குஷ்புவினது அந்த சிறு கட்டுரையில், பாலியல் சுதந்திரம் போன்றன எங்கே பேசப்பட்டன என்பதையும் யோசிக்கிறேன்.
"இந்தியா டுடெயில் இப்படிச் சொல்லுகிறவர் தன்னை விபச்சாரி என்றதற்கு முதல் ஏன் கூவினார்" என்றும் சிலர் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள். 'விழுந்தடித்துக்கொண்டு' பதிவதில் என்ன சொல்கிறார்கள் என்று அவர்களுக்கு புரிகிறதா என்ன?!

குஸ்பு என்ன பெண்ணிலைவாதியா, அவர் ஏதும் செய்திருக்கிறாரா, என்கிறரீதியில் கேடகிறாகள்.

செக்ஸ் பற்றிக் கருத்து சொல்ல குஸ்பு ஏன் பெண்ணிலைவாதியாய் இருக்கவேண்டும்? அவர் குங்குமம், தாலி, மெட்டி போட்டிருந்தா என்ன? - தெரியவில்லை.

//படித்தவர்கள் தாங்கள் திருமணம் செய்யப் போகும் பெண்ணின் ‘கன்னித்தன்மை’ பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்//

கட்டுரையிலிருந்து இந்த வரி (கட்டுரையிலில்லாத பல வரிகளைப்போலவே)நிறைய அர்த்தங்களைப் பலருக்கும் தந்துவிட்டது, நியோ என்பவர் எழுதிறார்:

1. * படித்தவர்கள் தாங்கள் திருமணம் செய்யப் போகும் பெண்ணின் ‘கன்னித்தன்மை’ பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்
HUHHHHH!!!!!! இந்த வாசகத்திலே இருக்கிற sweeping nature எத்தனை விசயங்களை பிறழ முன்மொழிகிறது என்று சொல்லத் தேவையில்லை!
2. * இப்பொதெல்லாம் pre-marital sex கொள்லாத பெண்கள் இருக்கிறார்களா என்ன?
jeez! What the *%%&%^

யார் இவருக்கு இந்த அதிகாரமளித்தது - சமூகம் பற்றிய தன் கருத்தை இத்தனை பொறுப்பில்லாமல் சொல்வதற்கு?
இதுதான் என்னுடைய எதிர்வினை! அதாவது இந்த வார்த்தைகளை குஷ்பூ இதே விதமாகச் சொல்லியிருக்கும் பட்சத்தில்.

--------------------------------------------------------------------------
இதில பொறுப்பில்லாத தனம் என்ன இருக்கு? குஸ்பு எதே விதமாய் சொன்னார் என்பதே படிக்காமல், அப்படிக் கேள்விப்பட்ட உடனேயே ஒரு ஆண் பதறிப்போய் (அந்தத் தனது பதறலை ஒத்துக்கொள்ளாமல், அதை 'சமூகம்' பற்றிய கூற்றாக திரித்து), தன் பெண்களைப் பற்றி பயம் கொள்கிற ஒரு சமூகம் இல்லாதுபோனால் அத்தகைய வாசகங்களில் இருக்கிற sweeping nature இற்கு என்ன ஆகும்?
"திருமணத்திற்கு முன்னால் உறவு கொள்ளாத பெண்கள் இருக்கிறார்களா என்ன" என்கிற கேள்வி குறித்த மேற்குறிப்பிட்ட எதிர்வினை, கற்பு என்கிற கருத்துருவாக்கத்தை இழக்க விரும்பாத ஒரு சமூக ஆண் தனிநபர(ர்கள)து குரலன்றி வேறென்ன? இங்கே இந்த விசயத்திற்கு துள்ள வேண்டிய அவசியம் என்ன? பெண்கள் pre-marital sex கொள்லாதவர்கள், இருக்கலாம், இல்லாமலிருக்கலாம், குஸ்பு, அதை இப்படிச் சொன்னால், அதனால் என்ன அழிந்துவிடும்?
உண்மையில் இவர் தனது கவலை சமூகத்தைப் பற்றி குஸ்பு சொல்கிற கருத்தென நம்புகிறார்.


தொடர்ந்தும் சப்பைக்கட்டுக்கட்டிக்கொண்டிருக்க இவர்களுக்கு, -பயம் போன்றே-ஆண் என்கிற தனது இன/சாதி என்கிற அரசியற் காரணங்கள் இருக்கலாம். இங்கே குஷ்புவை அழ அழ மன்னிப்புக்கேட்கச் செய்த ஆதிக்க செயலை தங்கர்பச்சன் மன்னிப்புக் கேட்டதுபோல ஒன்று என நினைப்வர்கள் அதைத்தான் தெரிவிக்கிறார்கள்.. (இதில் 'குஸ்பு மன்னிப்புக்கேட்டது தப்பு'; தன்ர கருத்தில ஸ்றோங்கா நின்றிருக்கணும் எனவெழுதுகிறவர்களையும் குறிப்பிடவேண்டும்.).

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எல்லாம் நவீன 'அறிவூட்டப்பட்ட' மூளையையுடையவர்களது பிற்போக்கு வாதங்களை சகித்துக்கொள்ளும்தன்மையை வளர்த்துகொள்ள முயலவேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால் பெண்களை தாம் இழிவாக்கி வைத்திருக்கிற சொல்லாடல்களால், தமது இழிவெண்ணங்களைக் கொட்டித் திட்டுபவர்களிடம் எல்லாம் 'அரசியல் ரீதியாக' மிகச் சரியாகவும், பொறுப்புடனும் பேசும் தன்மையை வளர்த்துக்கொள்ள இயலாது. (இது குறித்து குழலி ஒரு பதிவு போடலாம்; முற்போக்கான பெண்கள் எவ்வளவு கூவலாம், சாதாரண பெண்கள், 'குடும்ப' பெண்கள், நடிகைகள், இதர தொழில் வர்க்கப்பெண்கள் எவ்வளவு இத்தியாதி என ) ...


கற்பு பற்றி 'வெளிப்படையாய்' பயப்படுகிற பிற்போக்குவாதிகளையும்
மறைமுகமாய் அதை வைத்திருக்க விரும்பிற முற்போக்குஇயங்களைக் காவுகிற பிற்போக்குவாதிகளுமான ஆண்கள்,
அவர்களது அரசியல் தலைவர்கள், கொண்ட ஒரு சமூகத்தில் "காலாவதியாகும் கற்பு" என்றொரு தலைப்பில்,
அவங்ககளைப் போன்ற ஒரு ஆளை,
அவங்களுடைய அரசியல் கட்சியை/ அவங்களுடைய சாதியைச் சேர்ந்த ஆணை
நாலுபேருக்கு முன்னால மன்னிப்புக் கேட்கச் செய்தவள், "விபச்சாரி" என்று உன்ர அம்மாட்ட போய் சொல்லு என்றவள், பெண், அதுவும் (இயக்குநர்கள் டிஸ்கஸன் என்ற பெயரில் நடப்பது உலகிற்கே தெரியும் என்கிற 'புரிதலுக்குரிய')
ஒரு 'நடிகை' எழுதினது பெரும் பிரச்சினையே.. (என்ன எழுதினார் என்பதை முழுமையாப் படிக்காவிட்டாலுங் கூட!!!!!!)

25 Comments:

Blogger dondu(#11168674346665545885) said...

உங்கள் கருத்துடன் முழுக்கவே ஒத்து போகிறேன். ஆண் பெண் கற்புநிலையை பற்றி நானும் பதிவு வரிசை ஆரம்பித்துள்ளேன். அதன் முதல் பதிவின் உரல் இதோ: http://dondu.blogspot.com/2005/10/1_11.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

10/11/2005 11:13:00 p.m.  
Blogger மு. மயூரன் said...

இந்த URL என்பதற்கு என்ன தமிழ்?
காசி தமிழ் மணத்தில் உரல் என்று பயன்படுத்தி சிரிப்பூட்டினார்.

நான் தொடுப்பு என்றவாறு பயன்படுத்துகிறேன். (இணைப்பை விட தொடுப்பு அர்த்தம் பொதிந்தது.)

முகவரி என்று பயன்படுத்தலாமோ என்னவோ....

10/11/2005 11:53:00 p.m.  
Blogger குழலி / Kuzhali said...

இந்தியாடுடேவில் வந்த குஷ்புவின் பேட்டியை அந்த சமயத்தில் படிக்கவில்லையென்றாலும் தமிழ்முரசின் இணையதளத்தில் பேட்டி குறித்து வந்ததை படித்து தான் பதிவிட்டேன், பொதுவாக எந்த பத்திரிக்கையாக இருந்தாலும் வாசகர் கடிதங்கள் பகுதியில் வெளியிடப்படுபவைகளை ஆதாரமாக வைத்து எதுவும் எழுதுவதில்லை, ஏனெனில் வாசகர் கடிதங்களுக்கு பத்திரிக்கை பொறுப்பாகாது, ஓரிரு வார்த்தை மிகைப்படுத்துதல் இருந்தாலும் குஷ்புவின் இந்தியாடுடே பேட்டியில் வேறுபாடு எதுவும் எனக்கு காணக்கிடைக்கவில்லை, இதையும் குறிப்பிட்டுள்ளேன், இருந்தாலும் சாட்டையை சுழற்றியுள்ளீர்.

நான் எப்போதும் நானாகவே இருக்கின்றேன், இணையத்தில் (மட்டும்) புரட்சி முகமூடி அணிந்து கொண்டு என்னை நானே ஏமாற்றிக் கொள்ள தயாராக இல்லை, என் கருத்துகள் தவறு என கருதும் வாக்கில் திருத்திக் கொள்ளவும் தயங்கியதில்லை, இப்போதும் எனக்கு குஷ்புவின் பேட்டியில் பல இடங்களில் ஒப்புமை இல்லை, இந்தியாடுடேவில் வந்த குஷ்புவின் பேட்டியை யும் எங்கெங்கே முரண்படுகின்றேன் என்றும் விரைவில் பதிவிடுகின்றேன்.

பல இடங்களில் கூறியது தான், கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே என்று வலியுறுத்தப்படுவதாக (குஷ்புவின் கருத்தை எதிர்ப்பவர்களின் மீது அழுத்தமாக வைக்கப்படும் குற்றசாட்டு)சத்தமாக அழுத்தி சொல்வதால் அது உண்மையாகாது, இராமதாசு, திருமாவளவன் மற்ற தலைவர்களும் கற்பு பெண்களுக்கு மட்டும் தான் என்று கூறவில்லை, ஆனால் மீண்டும் மீண்டும் கற்பு என்பதை பெண்களுக்கு மட்டுமே வைக்கும் அளவுகோலாக குஷ்புவை எதிர்ப்பவர்கள் கூறுவதாக அளவிடுவது அவர்களின் மீது சேறு தெளிக்கும் முயற்சியாகவும் திரிப்பாகவுமே கருதுகின்றேன்.

நன்றி

10/12/2005 01:00:00 a.m.  
Anonymous Anonymous said...

தமிழக பார்ப்பனர்களின் நிலை என்பது உங்களுக்குத் தெரியாததா என்ன? திருமாவளவன், ராமதாஸ், கருணாநிதி ஆகியோர் எந்தப்பக்கம் இருக்கிறார்களோ அதற்கு நேர் எதிர்ப் பக்கத்தில் நாங்கள்(பார்ப்பனர்கள்) இருப்போம். உண்மையில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எல்லாம் எங்களுக்குக் கவலை இல்லை. எனவே இந்த விஷயத்தில் எங்களின் தார்மீக ஆதரவு குஸ்பூவிற்கு உண்டு. எங்கள் தலைவர் சோவும் அதனைத்தான் எங்களிடம் சொன்னார். நேசகுமார் என்ற பெயரில் எழுதிவரும் ஜெயமோகன் அவர்களும் எங்கள் சென்னை இலக்கிய பார்ப்பன வட்டத்தினரும் அவ்வாறுதான் சொன்னார்கள்.

10/12/2005 01:10:00 a.m.  
Blogger வானம்பாடி said...

//காசி தமிழ் மணத்தில் உரல் என்று பயன்படுத்தி சிரிப்பூட்டினார்.//

இதில் சிரிக்க என்ன இருக்கிறது?

10/12/2005 02:02:00 a.m.  
Anonymous Anonymous said...

உந்த உரல் பிரச்சினையைக் கண்டுபிடித்துவிட்டால் குஸ்பு, பெண்ணியம், ஆணாதிக்கப் பிரச்சினைகள் எல்லாத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்திடலாம். சரியான இடத்தில் அருமையான கேள்வியைக் கேட்டுள்ளார் மயூரன்.
யாரும் சிரிக்காதீர்கள்;-)

10/12/2005 04:02:00 a.m.  
Blogger dondu(#11168674346665545885) said...

பெட்டை அவர்களே தயவு செய்து "அதர்" ஆப்ஷன மற்றும் அனானி ஆப்ஷனை செயலிழக்கச் செய்யுங்கள். அந்த போலி டோண்டு மறுபடியும் வந்து விட்டான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/12/2005 05:38:00 a.m.  
Anonymous Anonymous said...

முதல்ல குஷ்பு எப்ப கலியாணம் பண்ணிகிட்டா ன்னு பாரு? வயித்துல 6 மாசம் லோடு. அவளே காண்டம் use பண்ணல அப்புறம் அடுத்தவளுக்கு என்ன advise.

10/12/2005 07:40:00 a.m.  
Anonymous Anonymous said...

திருமா, பா.ம.க. கும்பல் செய்த அட்டகாசத்தை கண்டிக்க வேண்டும்.

குஷ்பு ஏன் அழ வேண்டும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை.
யாரோ இப்படி அட்வைஸ் குடுத்திருக்காங்க. ஏற்கெனவே பெண்கள்
பலவீனமானவர்கள் நு ஒரு பிரச்சாரம் பண்ணறாங்க. நம்ம அமெரிக்க வலதுசாரிகூட
இப்படி சொல்லுது. பொண்ணுங்க பலவீனமானவங்க. போர் நேரத்தில
ஆண்கள்தான் ஜனாதிபதி ஆவணும்னு. ஆனா அதே வலது சாரி ஜனாதிபதியே ஒரு பொண்ணு
கிட்ட கேட்டுதான் பாத்ரூம் போறார். அவருக்கு பேச தெரியாம முழிக்கறப்ப இந்தம்மா
வந்து பேசுது.

இப்படி அழறதுக்கு அந்தம்மா போங்கடான்னு சொல்லிட்டு பம்பாய் போயிருக்கலாம்.
இல்லே, இங்கெயே எதித்து நின்னிருக்கலாம்.

இந்தம்மா பெண்ணீயவாதியும் இல்லை. சோசியாலஜிச்டுமில்லை. எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில்
கருத்து சொல்றாங்கன்னு புரியல. அவங்க படிச்ச புஸ்தகத்துலேருந்து எடுத்து விட்டிருக்கலாம்.
கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் பண்ணலாம். ஆனா கர்ப்பமாயிடக்கூடாது. ஏன்?
சில பொண்ணுங்க தைரியமா இப்படி குழந்தைகளை வளத்தறாங்க. அதுல ஒரு நேர்மை இருக்கு.
இவங்க சொல்றது என்னன்னு புரியல. திருமணத்துக்கு அப்புறமும் இப்படி செய்யலாமா?
எதுக்கு திருமணம் செஞ்சுக்கணும்? எல்லா ஆம்பிளைங்களும் இப்படிதான்னு எந்த புள்ளி
விவரத்த வெச்சு சொல்றாங்க. ஏதோ ஆட்டு மந்தை மென் டாலிடியில் சொல்வதாகத்தான்
தெரிகிறதே ஒழிய இதில் தெளிவிருப்பதாக தெரியவில்லை.

பொண்ணுங்கெல்லாம் குழந்தை பெறுவதற்குதான் லாயக்கு என்ற ரீதியில் ஒரு துக்ளக் வரலாறு
எழுதுபவர்கள் உங்களுக்கு ஆணாதிக்கவாதியாக தெரியவில்லை.

-நானும் ஒரு பெண்

10/12/2005 07:40:00 a.m.  
Blogger மு. மயூரன் said...

//இதில் சிரிக்க என்ன இருக்கிறது?//

என்னடாப்பா இது?

அதில்லை ஏற்கனவே தமிழில் உரல் என்று ஒரு சொல்( கலைச்சொல்?) இருக்க, அதை பயன்படுத்துவது நன்றாக இல்லையோ என யோசித்தேன்.

10/12/2005 11:26:00 a.m.  
Anonymous Anonymous said...

//கற்பு பற்றி 'வெளிப்படையாய்' பயப்படுகிற பிற்போக்குவாதிகளையும்
மறைமுகமாய் அதை வைத்திருக்க விரும்பிற முற்போக்குஇயங்களைக் காவுகிற பிற்போக்குவாதிகளுமான ஆண்கள்// இதுதான் நடக்கிறது. பிற்போக்கு ஆண்கள் நேர்மையாக-வெளிப்படையாகவே தெரிவித்து அதற்கான அடிகளையும் வாங்கிக் கொள்கிறார்கள். முற்போக்கு ஆண்களோ இதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் - தங்கள் ஆண்தனம் தெரிந்துவிடக் கூடாதென்பதில். ஒன்றில் இவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். (ஏதாவது சொல்ல/எழுதப் போனால்தானே அடையாளம் காட்டவேண்டி வரும்!) அல்லது தங்கள் ஆணியத்திற்கு முற்போக்கு/புத்திசீவிய முலாம் பூசிக் கொள்கிறார்கள்.

எமக்கென்று நாடு கிடைத்தவுடன் சகல பிரச்சினைகளும் நீங்கிவிடும் என்ற சர்வரோகநிவாரணங்களின் விளம்பரங்கள் பெண்களுக்கெதிரான யுத்தத்தை மறைத்துவிடவே முயலுகின்றன.

10/13/2005 07:34:00 p.m.  
Anonymous Anonymous said...

//கற்பு பற்றி 'வெளிப்படையாய்' பயப்படுகிற பிற்போக்குவாதிகளையும் மறைமுகமாய் அதை வைத்திருக்க விரும்பிற முற்போக்குஇயங்களைக் காவுகிற பிற்போக்குவாதிகளுமான ஆண்கள்// இதுதான் நடக்கிறது. பிற்போக்கு ஆண்கள் நேர்மையாக-வெளிப்படையாகவே தெரிவித்து அதற்கான அடிகளையும் வாங்கிக் கொள்கிறார்கள். முற்போக்கு ஆண்களோ இதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் - தங்கள் ஆண்தனம் தெரிந்துவிடக் கூடாதென்பதில். ஒன்றில் இவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். (ஏதாவது சொல்ல/எழுதப் போனால்தானே அடையாளம் காட்டவேண்டி வரும்!) அல்லது தங்கள் ஆணியத்திற்கு முற்போக்கு/புத்திசீவிய முலாம் பூசிக் கொள்கிறார்கள்.

எமக்கென்று நாடு கிடைத்தவுடன் சகல பிரச்சினைகளும் நீங்கிவிடும் என்ற சர்வரோகநிவாரணங்களின் விளம்பரங்கள் பெண்களுக்கெதிரான யுத்தத்தை மறைத்துவிடவே முயலுகின்றன.

10/13/2005 07:36:00 p.m.  
Anonymous Anonymous said...

nalla vivaatham

10/14/2005 08:11:00 a.m.  
Blogger Vaa.Manikandan said...

This comment has been removed by a blog administrator.

10/14/2005 08:11:00 a.m.  
Blogger குழலி / Kuzhali said...

This comment has been removed by a blog administrator.

10/14/2005 08:30:00 a.m.  
Blogger குழலி / Kuzhali said...

This comment has been removed by a blog administrator.

10/14/2005 08:33:00 a.m.  
Blogger Vaa.Manikandan said...

என் பெயரில் யாரோ செய்யும் அநாகரீகச் cஎயல்....இதனை எவ்வாறு நீக்குவது? மிக வேதனையாக இருக்கிறது.

10/14/2005 08:44:00 a.m.  
Blogger Vaa.Manikandan said...

இப்போது தெளிவாக எழுதுகிறேன்.சற்று முன்பு என் நண்பர்(வலைப்பதிவு வாசகர் தான்) என்னுடன் தொடர்பு கொண்டார்."பெட்டை"யின் வலைப்பதிவில் மிக அநாகரீகமான பின்னூட்டம் ஒன்றினை ஏன் பதிவிட்டாய் என வினவினார்.

இந்த தளத்திற்கு வந்து பார்த்த போது புரிந்தது.எனக்கே தெரியாமல் என் பெயரில் எப்படி உள்நுழைய முடியும் எனத் தெரியவில்லை.இவ்வளவு கீழ்த்தரமான சொற்களை என் பெயரில் படிக்க மிக வேதனையாகவும்,வருத்தமாகவும் இருந்தது.

ஏன் இப்படி செயல்படுகிறார்கள் என்பதும் புரியவில்லை.நான் யாரையும் நேரிடையாகவோ,மறைமுகமாகவோ தாக்கி பின்னூட்டம் கூட எழுதுவதில்லை.

நான் பொதுக்கணினியில் இருந்து வலிப்பதிவுகளில் உலவுவது கூட காரணமாக இருக்கக்கூடும்.சரி படுத்திக்கொள்கிறேன்.யாராவது வழி இருந்தால் தெரியப்படுத்தவும்.

குழலி மனம் புண்பட்டிருக்கக்கூடும் என வருந்துகிறேன்.

10/14/2005 08:54:00 a.m.  
Blogger சுடரகன்: சிவா முருகையா said...

குஸ்பு சொன்னதில் ஒரு சிறு தவறும் இல்லை. ஆனால் இப்போது இவர் ‘வாங்கிக் கட்டிக் கொள்ள’ தாராளமாக ‘அள்ளிக்கொடுக்கிற’ (வசை) சமூகத்தினை உருவாக்கியதில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏனக்கு குஸ்பு உடன் ஏற்பட்ட அனுபவம் ஒன்றையே எனது மேற்கூறிய கருத்துக்கு ஆதாரமாய் இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். அமெரிக்காவில் நடைபெறும் பாற்நா (அமெரிக்காவில் இருக்கும் இந்திய தமிழர்களின் அமைப்பு) மகாநாட்டுக்கு சில வருடங்களுக்குமுன் குஸ்பு வும் வந்திருந்தார், நானும் சென்றிருந்தேன். அப்போது அவரை ஒரு நேர்காணலில் (பேட்டீ) சந்தித்தேன். அப்போது அவரிடம் கேட்டேன் “நீங்கள் சின்னத்திரையில் பெயர்குறிப்பிடும் படியிருக்கிறீர்கள் ஆகவே தமிழ் நாட்டில் வீட்டுக்குள் இருக்கும் பெண்களுக்கு பெண்ணிய சிந்தனையின் அடிப்படைகளை ஏன் மெது மெது வாக சொல்ல முயலக் கூடாது? ” என்று. அதற்கு அவர் சொன்ன பதில் “அதெல்லாம் முடியாது. நமக்கு தேவையில்லாத வேலை நாங்க அவங்க போக்கிலே போய்தான் நம்ம பிஸ்நசை பண்ணிக்க முடியும்”. (இந்த சம்பவம் தமிழ்நாட்டு மக்கள் உள்ள சபையாக இல்லாமல் நாங்கள் ஒரு சிலரே நின்ற போது நடந்ததால் அவர் இவ்வாறு துணிந்து சொன்னாரோ தெரியவில்லை) ஆகவே பெண்ணிய சிந்தனையில் சரியான படிமுறை வளர்சியில் வராத ஒரு சமூகத்திடம் எடுத்த எடுப்பிலேயே நிறை கூடிய கருத்தை முன்வைத்ததின் விளைவைத்தான் குஸ்பு தற்போது அனுபவிக்கிறார்.

இன்னுமொரு பிறகாரணி இந்த இடத்தில் சம்மந்தப் படுகிறது அதுதான் அரசியல். சந்தர்பம் கிடைத்தபோது தக்கரின் மீது குஸ்பு பாய. தக்கர் கூட்டணி தற்போதைய சந்தர்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டது. இந்த இடத்தில் பார்பனர்கள் செய்வதும் ஒரு அரசியல் தான். பொதுவாக கற்பு மற்றும் இன்ன பிற பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கு ஆண்டவனின் பேரால் அத்திவாரம் இட்டவர்கள் இன்று குஸ்புவுக்கு ஆதரவளிப்பது திருமாவளவன் கூட்டணியை எதிர்கவே. மேலே உள்ள பின்னூட்டல்களில் அசல் டோண்டு வுக்கு நகல் டோண்டு எழுதிய நகைச்சுவை சரியானதே.

10/15/2005 07:11:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

இது ரோசாவசந்தின் பதிவிற்கான பின்னூட்டம்தான், நான் விரிவாகவோ தெளிவாகவோ ஒன்றை பேசிவிடவில்லை.
தொடர்ந்து இழுக்கவும் ஆர்வமில்லை.
குழலி உங்களது பின்னூட்டம் தொடர்பாக சிலது எழுத விருப்பம். இப்போதைக்கு இங்கே:
(1)
நான் யாரையும் மிக புரட்சிகரமானவர்கள் என எழுதவில்லை; எல்லாருமே உங்களையும் என்னையும் போலவே சாதாரணமானவர்கள்தான்.
பிற்போக்கு முற்போக்கு என்பது தனியே இன்னஇன்னகொள்கைவாதிகளின் சொத்துரிமை அல்ல, அது எதிர்பாராத, எதிர்க் கூடாரங்களிலும் சாத்தியமானதுதான்.
புத்திஜீவிகள், அறிவியலாளர்கள் எல்லாம் தமதறிவை பெற்ற மறுகணமே தாம் நன்கு பழகிக் குளிர்காய்ந்த ஆதிக்கக்குணங்களிலிருந்து விலக்கப்பட்டு விடுகிறார்களா?
இதையே குறிப்பிட விரும்பினேன்.
நான் எழுதியது தலித்துகள், சிறுபான்மை இனப் போராளிகள் போன்ற சிறுபான்மைக் குழுக்களுக்கு எதிரான 'கொள்கைகளை'க் கொண்டிருப்பவர்கள் பெண்கள் தொடர்பாக முன்னோக்கான, பெண்களது நலன்களை முன்னிறுத்திய கருத்துக்களை வைத்திருத்தல் சாத்தியமானது என்பதைத்தான். இதனால் இவர்கள் பெண்கள் நலன் நோக்கில் சொல்பவற்றைச் 'சந்தர்ப்பவாதம்' என முற்போக்கான (சிறுபான்மையிளருக்கு சார்பான) கொள்கைகளையுடையவர்கள் தடாலடியாகச் சொல்லுவதில் எனக்கு உடன்பாடில்லை (இதை தெளிவா சொல்கிறேனே தெரியவில்லை).
டோண்டு பல சந்தர்ப்பங்களில் இஸ்ரேல் ஆதரவு, ஈழத் தமிழ்ப் போராளிகள் (அவர்களை அவர் எதிர்க்கிற காரணம்), இந்தியா தேசியத்திற்கான அவரது ஆதரவு -- இவை எல்லாம் சிறுபான்மையினருக்கு எதிரானது— வாசிக்கும்போது மிக மிகத் தொந்தரவூட்டும். ஆனால் பெண்கள் சம்மந்தப்பட்ட உரையாடல்களில் பல இடங்களில, –அவரது தலைமுறைக்கு அதிகமான- அசாத்தியமான பல கருத்துக்கள் அவரிடம் இருக்கிறது. இது எனக்கு சந்தர்ப்பவாதமாய்ப் படவில்லை.. டோண்டு போன்றவர்களது இன்னொரு சிறுபான்மைக் குரலாக இருக்கிற பெண்கள்மீதான கருத்துக்களின் 'பண்பை' மதித்தபடியே, அதற்கெதிரான அவரது பிற கருத்துக்களுடன், அவரை அணுக முடிகிறது; இப்படி, சிறுபான்மைக் குழுக்களுக்கு எதிரான கொள்கைகளை உடைய ஒரு நபரிடம் இருக்கக்கூடிய பெண்கள் பற்றிய அபிப்பிராயம் தங்களிடம் இல்லை என்பதை முற்போக்காளர்கள் ஒத்துக்கொள்வதில்லை. அவர்கள் மெனக்கெடுவதெல்லாம் டோண்டு போன்றவர்களது சந்தர்ப்பவாதத்தை தோலுரியத்தான். என்னைப்பொறுத்தவரையில் இவற்றில் ஒரு கட்டத்திற்குமேல் எந்த அர்த்தமுமில்லை.


////பல இடங்களில் கூறியது தான், கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே என்று வலியுறுத்தப்படுவதாக (குஷ்புவின் கருத்தை எதிர்ப்பவர்களின் மீது அழுத்தமாக வைக்கப்படும் குற்றசாட்டு)சத்தமாக அழுத்தி சொல்வதால் அது உண்மையாகாது, இராமதாசு, திருமாவளவன் மற்ற தலைவர்களும் கற்பு பெண்களுக்கு மட்டும் தான் என்று கூறவில்லை, ஆனால் மீண்டும் மீண்டும் கற்பு என்பதை பெண்களுக்கு மட்டுமே வைக்கும் அளவுகோலாக குஷ்புவை எதிர்ப்பவர்கள் கூறுவதாக அளவிடுவது அவர்களின் மீது சேறு தெளிக்கும் முயற்சியாகவும் திரிப்பாகவுமே கருதுகின்றேன்.////

இப்படி நீங்கள் சொல்லுகிறீர்கள். இத் தலைவர்கள கூறுவதை விளங்காமல் கற்பை பெண்ணிற்கு மட்டுமானதாக அப்படி 'தவறாக' நினைப்பவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அப்படி இருபாலாருக்கும் பொது என சொன்னாலும் 'கற்பு' என்கிற சொல்லை அக் கருத்தாக்கத்தின் கேவல, அருவருப்பான அரசியலிற்காக எதிர்க்கிறேன்.
கற்பே ஒரு அசிங்கமான, மற்றவர்களது உடல் பற்றி யாரோ/சமூகம் அத்துமீறி கூறுகிற 'அபிப்பிராயம்' அதில் 'மனக் கற்புத்தான்' முக்கியம் என்றெல்லாம் வேறு படித்தபிறகு அருவருப்புத்தான் கூடுகிறது.


"ஆணுக்கும் பெண்ணக்கும் கற்பினைப் பொதுவில் வைப்போம்" என்று சொன்ன புண்ணியவான் யார்? எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர், பிறகு வந்த எவனும் அச் சொல்லை அகற்ற கேட்க இல்லியா?

குழலி அப்படி நீங்கள் சொல்லுகிறபோது, "எல்லோரும் சமம்" "ஜாதிகள் இல்லை" "பிறகேன் ஜாதி வேறுபாடு கதைப்பது/ஜாதி கட்சி வைத்திருப்பது?" என்கிறவர்களுடைய வாதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
வேறுபாடுகள் அப்படியே சமூகத்தில் இருக்கறபோது, "எல்லோரும் ஓர் குலம்" என்பது எத்தனை வன்முறையான, தடிப்பான கருத்து?
சுசின்னஞ் சிறு பெண் குழந்தைகளே அவர்களது பாலியல் உறுப்பு தவறுதலாகவோ (அல்லது சிறுவயதில் பெரியவர்களால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாலோ) கிழிபடுகிறபோது அது அவர்களது தவறில்லை, அது ஒரு விபத்து என மருத்துவ அறிக்கை வேண்டி வைத்திருக்கும் தேவை இருக்கிற சமூக நிலை அருவருப்பானதில்லியா? பெண்கள் மீது வைக்கிற அருவருப்பிற்கின் பின்னாலுள்ள சொல்லை இரு பாலிற்கும் பொதுவாய் வைக்கிற 'பெரிய மனது' யாருக்கு வேணும்?

அடிப்படையில் எது என்றாலும் ஒரு சிறுபான்மையினரை எவ் வகையில் பாதிக்கும் என்பதில் ஆரம்பித்தே பேசத் தொடங்கவேண்டும்.
"ஜாதிகள் இல்லை" "எல்லாரும் ஓர் குலம்" போன்ற இந்த வசீகரமான வாசகங்களை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்தால், பெண்ணிற்கும் ஆணிற்கும் பொதுவில் வைக்கும் 'மேதகு' கற்புப் பற்றி பேசலாம். அதில் உபபிரிவாய் 'மனக்'கற்பைப்பற்றிப் வாதாடலாம்.


சுடரகன்-
குஷ்பு பெண்ணியம் சார்ந்த முன்னெடுப்புகளை வெகுசன சூழலில் செய்யலாம், செய்தால் நல்லது. ஆனால் அவர் ஏன் கட்டாயமாக செய்யவேண்டும்? நீங்கள் எடுத்த பேட்டிகளில் சமூக நலன்மிக்க திருமாவளவன் -நேரடியாய்த் தொடர்படைய-- இவர்கள் தவிர பிற நடிகர்களிடம் சமூகத்திற்கு என்ன செய்கிறீர்கள், செய்யலாமே எனச் suggestions சொல்வதுண்டா (ஒருவர் இருவரிடமல்ல, தனுஸ்,சிம்பு போல எல்லோரிடமும்)?

குஷ்பு ஒரு பெண்ணிலைவாதி கிடையா, இதன் அர்த்தத்தை குஷ்புவின் பெண்ணிலைவாதம் குறித்த சமூகத்தின் புரிதலோடும் பார்க்கவேண்டும் (எங்களில் எத்தனைபேருக்கும் பெண்ணிலைவாதம் குறித்த தெளிவிருக்கிறது?). குஷ்புவின் புரிதலின்படி அது அவரிற்கு முன்னெடுக்கவேண்டிய ஒன்றாக இல்லை. அவரது நலனிற்கு சார்பானதாக இல்லை. அப்பாடியாய் இருந்திற்றுப் போகட்டுமே!

(2) அவர் நடிகையாய் இருந்து, பெண்ணாக இருந்து, பட்ட 'கஸ்ரங்களின்' அடிப்படையில் அவரிடம் அப்படி ஒரு புரிதலை உங்களை ஒத்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இதுவும் வன்புணரப்பட்ட பெண் நாட்டிற்காகப் போராடவேண்டும் என்றோ, அன்னை தெரஸா போல ஆகி 'நல்லது' செய்யவேண்டும் என்றோ நினைப்பது போன்ற ஒன்றுதான்.

குஷ்புவிற்கும் மற்ற எல்லா நபர்களும் போலவே தனது நலன்களை கொண்டிருக்கிற/அதை முன்னெடுக்கிற/சுயநலமாய் இருக்கிற 'உரிமை' இருக்கிறது. தான் 'கஸ்ரப்பட்டதால்' அவருக்கு ஞானோதயம் வந்து, கட்டாயம் அவர் சமூக சேவை செய்ய வேண்டி ஒரு கடப்பாடும் இல்லை. உடலுறவு, திருமணத்திற்கு முந்தைய உறவு - இவற்றைப் பற்றிக் கருத்துக் கூற பெண்ணிலைவாதியாகத்தான் இருக்கவேண்டியதில்லை, உடலுறவு பெண்ணிலைவாதிகள் மட்டும் செய்கிற ஒன்று இல்லைத்தானே.



மணிகண்டன்-
"Blogger அங்கத்தவர்கள் *மட்டும்*தான் பின்னூட்டமிடலாம்"; "பின்னூட்டமிட வேண்டுமென்றால் நீயும் blogger அங்கத்தவராகு’’ என்பது –தமிழ்மண யாகூ வலைப்பதிவுகளில் போட்டிருப்பதுபோல- சர்வாதீகாரமாகத் தென்பட்டதால் அநாமதேய/பிற பின்னூட்டல் முறைகளை அகற்றத் தோன்றவில்லை.
உங்களது மனக்கஸ்ரத்திற்கு மன்னிக்கவும்.

இதை எழுதுகிறபோது தொலைபேசிகளில் கடிதங்களில் சுவர்களில் எத்தனை ஆணித்தரமாய் மறத் தமிழர்கள் குஸ்புவை "எதிர்த்திருப்பார்"கள், அது எத்தகைய ''மொழி''யாக இருக்கும் என்பனவை யோசிக்க முடிகிறதா?


நானும் ஒரு பெண்:-
////"குஷ்பு ஏன் அழ வேண்டும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை."////
இது உங்களது கருத்து; உங்களால் 'புரிந்து கொள்ள' முடியவில்லை. நிறையப் பேரால் புரிந்துகொள்ள முடியவில்லை: அது தவறு கிடையாது. தற்கொலை செய்து கொண்ட பெண்ணைப்பற்றி "அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று எனக்கென்றால் புரியவில்லை" என எழுதுகிற மனிதர்கள் நிறைந்த உலகம் இது. உடல் வன்முறையையே ஆதரிக்கிற கூட்டத்திடம் உளவியல்/மனது சார்ந்த வன்முறைகள், வகைபாடல்கள் தருகிற உளைச்சல் குறித்தெல்லாம் 'புரிய' வைக்க முடியாது.
ஆனால் எனக்கு உங்களது பின்னூட்டத்தில் உறுத்துகிற விடயம்:
//நானும் ஒரு பெண்//
நீங்கள் ஒரு பெண் என்பதற்கும் புரிதலிற்கும் உள்ள தொடர்பை எனக்கு புரியவில்லை. ஒரு ஆணினுடைய ஆதிக்கக் கருத்திற்கும் பெண்ணுடைய கருத்திற்கும் ஒரு வித்தியாசமுங் கிடையாது. ஆண்களது அரசியலை, அரசியற் தலைவர்களை, ஆண்களது ஜாதியத்தை, ஜாதி விழுமியங்களை, ஆண்களது ஆதிக்கத்தை, ஆதிக்க செயற்பாடுகளை நியாயப்படுத்துகிறவர்களாகத்தான் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் 'கற்பு' என்பதைஎடுத்துவிட்டால் ''ஒழுங்கு குலையும்'' ''பெண்களை 'ஆண்கள்' உபயோகிப்பார்கள்'' என்கிற பயங்கள் உண்டே.
"கற்பு இல்லை" என்றால் அவிட்டுவிடப்பட்டவர்களாய் போயிரும் என்பதன் மறுபுறம் "கொஞ்சம் பாசாங்கு இருப்பது நல்லது" ''இல்லாவிட்டால் ஒழுங்கு/ஒழுக்கம் குலைந்திரும'' என்கிற தனம் தான் இருக்கிறது.
பாசாங்கைவிட ஆபத்தானது ஒன்றுமில்லை.




-------------------------------
சில தொடர்புடைய உரல் :-) கள்:
http://neyvelivichu.blogspot.com/2005/09/118.html
http://thamizhthendral.blogspot.com/2005/09/blog-post.html
http://josaph.blogspot.com/2005/10/blog-post.html
http://thoughtsintamil.blogspot.com/2005/10/blog-post_04.html
http://theruththondan.blogspot.com/2005/10/blog-post_16.html

10/17/2005 05:58:00 p.m.  
Anonymous Anonymous said...

Anonymous said...
முதல்ல குஷ்பு எப்ப கலியாணம் பண்ணிகிட்டா ன்னு பாரு? வயித்துல 6 மாசம் லோடு. அவளே காண்டம் use பண்ணல அப்புறம் அடுத்தவளுக்கு என்ன advise.

10/12/2005 07:40:23 AM

It is not 'advise'. It is 'advice'. Go back to school and learn your lessons before posting your stupid opinions in a public forum.

- Hard Critic

10/18/2005 09:12:00 p.m.  
Anonymous Anonymous said...

அனானிமஸ் லூசு அவர்களே, நீங்கள் சொன்ன மாதிரி குஷ்பு தப்பு செய்ததாகவே இருக்கட்டும். தப்பு செய்தவர்களுக்குதான் அறிவுரை சொல்ல அனுபவம் இருக்கிறது. மிஸ்டர் வீணாப்போனவன்! நைஸ் டு மீட் யூ அகெய்ன்! ஐவ் ரெட் சம் ஆஃப் யோர் பாரடீஸ் ஆன் தமிழ் மூவி சாங்ஸ். ஆர்ன்ட் யூ ரைட்டிங் தெம் எனி மோர்? மே பி யு காட் மேரீட் :)

10/20/2005 06:16:00 a.m.  
Anonymous Anonymous said...

It is not 'advise'. It is 'advice'. Go back to school and learn your lessons before posting your stupid opinions in a public forum.

- Hard Critic

10/18/2005 09:12:56 PM


அட வீணாப்போன நாய்ராஜா மூடிகிட்டு போறியா

10/20/2005 03:54:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

Hard Critic & following anonymous! Look like you guys already known each other! One of the Eelam poet well-known as N.Athma was writing about 'angels' before marriage, and then recently I read one of his poem, and it's about 'ghosts'!
;-)

11/04/2005 08:15:00 p.m.  
Blogger சுடரகன்: சிவா முருகையா said...

இப்போது சுகாசினி மூலமாக மீண்டும் இப்பிரச்சனை கிளம்பியுள்ளது என நினைக்கிறேன்.

இந்த நேரத்தில் நான் முன்பு இட்ட பின்ஊட்டலை சற்றே திருத்திக் கொள்ள விரும்புகிறேன். அந்த நேரத்தில் எனக்கு கிடைத்த செய்திகளின் படி குஸ்பு பத்திரிகை ஒன்றுக்கு கற்பு பற்றி வளங்கிய நேர்காணல் ஒன்றுதான் பிரச்சனை என்று நினைத்தே “அவர் சொன்னது சரி” என்று பின்ஊட்டல் இட்டிருந்தேன். ஆனால் பிறகுதான் தெரியவந்தது பத்திரிகை நேர்காணலுக்கு பின்னால் தமிழ்நாட்டு பெண்களின் நடத்தை பற்றியும் குஸ்பு பேசியிருக்கிறார் என்பது.

மற்றவர்களின் நடத்தையைப் பற்றிக் கதைக்க முற்படுதல் அல்லது வம்பளத்தல் தான் பெண்களின் சுதந்திரத்துக்கான மாபெரும் தடையாக உள்ளது. அதாவது குஸ்பு இந்த விடயத்தில் தமிழ் நாட்டுப் பெண்களின் உரிமையில் அத்துமீறுயிருக்கிறார் என்றே கொள்ள வேண்டும்.

11/10/2005 08:14:00 a.m.  

Post a Comment

<< Home