@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Tuesday, September 06, 2005

சூடானிய டிங்கா பெட்டைகளில் ஒருத்தி



தொடர் விமான விபத்துகள் செய்திகளாகிக் கொண்டிருந்த சென்ற மாதங்களில் --அதற்கு மூன்று வாரங்கள் முன்தான் vice-president ஆக்கப்பட்டிருந்த-- சூடான் மக்கள் விடுதலை இயக்க/இராணுவத் (Sudan People’s Liberation Movement/Army) தலைமை, ஜோன் கறாங் உம் ஒரு ஹெலிகொப்ரர் விபத்திற்(?) கொல்லப்பட்டிருந்தார். கிழமைநாள் தினசரிகளில், கனடிய சூடானியர்களது இரங்கற் கூட்டங்கள் பற்றியும், கறாங்ஙின் மரணவீட்டுப் படங்களும் வெளியாகியிருந்தன. அதில், கணவர் கொல்லப்பட்டபின்னான, அழுகின்ற துணையினதும், அவரை அணைத்தாறுதல் கொடுக்கும் உறவுக்காரப் பெண்ணினதும் படமுமொன்று. கறாங்கின் மனைவி -Rebecca nyandeng- ஐ அப்போதுதான் பார்க்கையில்; ஊடகங்கள் காட்டுகிற 'கறுப்பர்கள்' இலிருந்து, பார்த்த, பார்க்கிற தலைவர்களின் மரண வீடுகளில், அவர்கள் துணைகள் அவ்வளவு காய்ந்திருந்ததாய், அவர்களில் யாரும் மண்ணுடன் அத்தனை நெருக்கமாய் தொடர்பாய் இருந்ததாய், மனப்பதிவு இல்லாதது வந்து போனது. அக் கறுப்புப் பெண், விவசாயிகளின் தோற்றத்தில், துணியைத் தலைக்கு கட்டியபடி...
அவளைப் பார்த்தபோது, 1995இல் -தனது பதினெட்டாவது வயதில்- ஃபாஷன் உலகிற்குள் நுழைந்தபோது - 'சுப்பர் மாடல் என்பதைவிட விவசாயியின் தோற்றமே அவளிடமிருக்கிறது' என்றெல்லாம்- சர்ச்சைகளுக்குள்ளான, பெட்டையொருத்தியே நினைவுக்கு வந்தாள் - நீங்களும் அவளைப் பார்த்திருக்கக் கூடும்.

அவள் அலெக் (உச்சரிப்பு: Uh Lek); காக்கைச் சிறகின் நிறத்தில், தார்க் கறுப்பு நிறத்தில் பிரபல ஃபாஷன் நகர்களான நியூ யோர்க், மிலான், பாரிஸ், லண்டன் runway க்களில் Versace நடை a va-va-voom, shake-it-like-you-might-break-it walk -அதான் அந்த பூனை நடை - நடந்து, மிக மெல்லிய மிக நெடிய பெண்களில் ஒருத்தியாய் அவள் வரக் காணுகிறபோதில், என்ன நினைத்திருப்பீர்கள்?

முக்கியமாக, ஆபிரிக்க ஃபாஷன் உலகினரால் மிக மோசமாகக் கேலிசெய்யப்பட்டார் ஆலெக் மெக். அவளது பெரிய உதடுகள், மூக்கு என்பன விவாதப் பொருளாகின. "நான் அவளருகில பிணமாய்க் காணப்படுவதைக்கூட விரும்பமாட்டேன்; அவள் ஒரு சுப்பர் மாடலென்பதைவிட ஒரு விவசாயி போலவே தெரிகிறாள்" என்றார் தெற்காபிரிக்க ஃபாஷன் நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளரொருவர்.

… In articles in newspapers and women's magazines last week, Wek's "Negroid" lips, nose and figure were hotly debated by African fashion editors, who claimed she represented an outdated notion of Black beauty. They condemned the white-dominated fashion industry for promoting what was said to be a view of Black women drawn from colonial literature, depicting them as thick-set. Africans believe lighter-skinned women with delicate features are in vogue.
… Paola Devito, director of Boss Models in South Africa, agreed. "I don't personally think she is beautiful," she said. "The fashion industry is not looking for beauty but rather to shock and be noticed - and Alek has done that." Some Black men were also dismissive. "I would not be seen dead next to her," said Romeo Khumalo, a South African presenter of fashion programs. "She looks more like a peasant than a supermodel."
.... Cassie Naido, fashion editor of the South African edition of Elle, which featured her on a recent cover, said: "It was surprising to find that most Blacks were against this model whereas a number of Whites found her interesting and different."
//"Africa's
fashion set sneers at 'Negroid' supermodel
." 1998, Mar. 1., The Times of London. //

மேலுள்ளதுபோலவே, அப்போது ரொறன்ரோ ஸ்ரார் இலும் இது தொடர்பாய் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது; அலைக் மெக் பற்றி மட்டுமல்ல, அனேக கறுப்பு மாடல்களை திரையில் காணுகிறபோது தோன்றுகின்றவற்றை மறுபரிசீலனை செய்ய அக் கட்டுரை வெகுவாய் உதவியது.
கட்டுரையில், ஒரு புகைப்படபக் கலைஞர், அவளது ஒட்டவெட்டிய முடியும், உணர்ச்சியோ 'சொல்லப்பட்ட' பெண்மையின் நளினங்களோ அற்ற முகத்தை, அட்டைப் படமாக போட முடிவெடுத்தபோது அதற்குக் கறுத்தப் பெண்களிடமிருந்து வந்த எதிர்வினை மிகக் கடுமையாக இருந்ததைக் குறிப்பிட்டு, அப் பெண்கள் சிலர் சொன்னதையும் கூறியிருந்தார்: "எம்மிடையே நயோமி காம்பெல் முதற்கொண்டு பல 'உண்மையான' கறுப்பு அழகிகளுக்கான பாரம்பரியமிக்க இடமிருக்கிறது; ஆனால் அப் பேரழகிகளின் வரிசையில் வீற்றிருக்கிற 'தகுதி' அலேக் இற்கு இல்லை."

அக் கட்டுரை படித்தபோது, அத்தகைய மதிப்பிடுகிற மனோபாவம் குறித்து பயங்கரக் குற்ற உணர்ச்சிக்குள்ளானபோதும், அந்தக் கறுத்தப் பெண்கள் அவளை வெறுத்திருப்பார்கள் என்று தோன்றவில்லை; அவர்கள் 'தங்களை' அவளில் காண்பதைத்தான் வெறுக்கிறார்கள்...

ஏனெனில் ஒரு பாஷன் ஷோவில் ஆலெக்கை பார்த்தபோது, எனக்கொரு மோசமான practical joke போலவே இருந்தது. வெள்ளையர்கள் மத்தியில் அவளை ஒரு 'வியித்திர ஐந்து'வாக தமது ஃபாஷன் 'பரிசோதனை'யொன்றாக, ஐரோப்பியர்களின் 'நாங்கள் வித்தியாசங்களை முனைகிறோம்' என்கிறவகை பிரகடனங்களிற்கான 'புதுமை'அறிமுகமாகவே - தோன்றினாள் அவள் (= ஒருத்தியை உன் புதிய பரிசோதனையாகவும், 'வித்தியாசமான தோற்றத்தையுடை' ஐந்துவாகவும், 'அறிமுகம்' செய்கிற உரிமை, உனக்கு யாரு தந்தது?); வெள்ளைக்கார மாடல்கள் அணிகிற ஆடைகள் சிறப்பானதாகவும், இவளுடைய ஆடைகளும் முக அலங்காரங்களும் பளீர் பளீர் நிறங்களில், பொருத்தமற்றும் இருப்பதாகவும், அவர்கள் 'வேண்டுமென்றே' அதைச் செய்கிறார்கள் என்றும் தோன்றியது; அத்துடன், இவளைப் பார்த்து 'ஆண்கள்' என்ன நினைப்பார்கள் என்பதோடு, அவளுடன், கூட பூனை நடை நடக்கிறவள்கள் என்ன கரைச்சற் படுத்துவார்களோ, அவர்களுக்கிடையேயான போட்டியில், குழுக்களாய்ப் பிரிந்து, குரூரமான, சொல் வதைகளால், தாம் பேர்போன பூனைச் சண்டைகள் (cat fights!!) போடுவார்களோ என்றெல்லாம் எண்ணிக் கொண்டதும்...

Iman, Naomi Campbell போன்றவர்களின் முகத்தில் வழிகிற 'பெண்மை' இல்லாத, இறுக்கமான, உணர்ச்சியற்ற முகம் அவளுடையது. அவளை 'அழகில்லை' என்று நினைத்ததைவிட, 'மற்றவர்கள்' அப்படி நினைப்பது நியாயமில்லை, ஆனால், எப்படியோ அவர்கள் அப்படித்தான் நினைக்கப் போகிறார்கள் என்கிற எண்ணமே பிரதானமாக இருந்தது.

இங்கே, ஆலெக்கை முன்வைத்துப் பேசுகிறபோது, ஐரோப்பியர்களின் கீழைத்தேயப் பெண்கள் குறித்த பார்வை 'தன்னுடையவை' குறித்த மேலெண்ணங்களுடன் திரிகிற மரபுக் கண்களின் இயல்புடையவனவாய் இருப்பதால், அதன் பாரபட்சத்தன்மை குறித்த எச்சரிக்கையின்றி எதையும் பார்க்க முடிவதில்லை என்பதைக் குறிப்பிடவேண்டும். ஐரோப்பியன் எப்போதுமே ஒரு அந்நியன்/வெளியாள்: ஏலவே சொன்னதுபோல, அவனோட 'புதுமை முயற்சிகள்' -எத்தகு அற்பமானதோ பாரதூரமானதோ- அது எப்படியாயிருந்தாலும், சகல துறைகளிலும், அவற்றின் பரிசோதனைக்களமாக கீழைத்தேயங்களே இருக்கின்றன.

எனினும், இன்னொருவகையில், -அப்படியான பரிசோதனையாக ஏனும்- ஆலெக் போன்ற பெண்ணின் அபூர்வமான வருகை தன் அடையாளம் தேடியும், கறுப்பை வெறுத்தும் வளர்கிற தலைமுறைகளிற்கு சிறிய மாற்றீடே. அதேபோல, மேலே, "நான் அவளருகில் பிணமாய்க் காணப்படுவதைக்கூட விரும்பமாட்டேன்" என்று சொன்னது ஒரு கறுப்பு ஆண்மகன்தான் (ஒரு வெள்ளை ஆண் ஆலெக்கை வெறுத்தலோ 'வித்தியாசம்' என விரும்புதலோ ஒரு கறுத்த ஆண் அவளது இருப்பை 'ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிற' தன்மைக்குமுன் பொருட்டானதல்ல).

அமெரிக்காவில், கறுப்பு மாணவிகளிடை தமது ஆண்களாலும் உருவாக்கப்படுகிற இந்த கறுப்பின் அரசியல் மிக ஆழமானது (இது மறத்தமிழன்களின் 'சிவப்புப் பெண்' மோகத்துடன் ஒத்திசைவதும்). இங்கே, சிலவருடங்களிற்கு முன்னம் வகுப்பறையில் கறுத்த மாணவி ஒருத்தியுடன் இடம்பெற்ற - உரையாடல் ஒன்றைக் கூறவேண்டும். பதின்மர்களின் பிடித்தமான பாடகர் குழுவாக அப்போது Destiny's child பிரபலமாகியிருந்தது; உரையாடிக்கொண்டிருந்தபோது, மேசையில் கிடந்த மெட்றோவில் பிரசுரித்திரிந்த அவர்களது படத்தைக் காட்டி, அந்த மாணவி, அந்தக் குழுவில் எந்தப் பாடகியை உனக்குப் பிடிக்குமென்று கேட்டாள். அவள் கறுப்பர்களில் கலப்புநிறத்தவளாய் குறிப்பிட்ட பாடகியின் நிறமாய் இருந்த ஒரே ஒரு காரணத்துக்காக –அவளை அது காயப்படுத்தாது என்கிற எண்ணத்தில்- Bபியான்ஷே என்று சொன்னேன். அவளோ, சட்டென, முகம் துணுக்குற்றுப்போய், "என்ன, அவள் கொஞ்சம் நிறமாய் இருப்பாள்.. வேற என்ன அவளிட்ட இருக்கு?" என்று, மிகவும் தனிப்பட எடுத்துக்கொண்டு கூறவும், மிகவும் குற்ற உணர்வாய்ப் போக, "ஐயோ எனக்கு ஹலியைத்தான் பிடிக்கும்; இவளை உனக்குப் பிடிக்குமென்று நினைத்தேன்" என அவசரமாய் சொன்னேன் (kelly rowland: குழுவின் மூன்று பெண்களிலும் அதிக கருமை நிறமானவள்). அவள், பிறகு, ஜமேக்காவில் (Jamaica) தனது தாயை ஏற்றுக்கொள்ளாத வெள்ளைக் கலப்பு வம்சாவழியினரான (mulatto) தந்தைவழியினர் பற்றிச் சொல்லி, தங்களிடையே நிறம் வகிக்கிற பிரதான பாத்திரத்தையும், தான் தந்தையின் நிறத்தை ஒத்திருப்பதையும், அப்பாவிடம் அம்மாவை கைவிட்டு வருமாறு அவர் உறவினர்கள் அழைப்பதாகவும் "இது ஒரு இழிவான காரியம்" "எனது அம்மா மிகவும் அழகானவள்" "என்னை இது மிகவும் பாதிக்கிறது" என்றெல்லாம் சொன்னாள். தனது ஆதி வேரின் அடையாளம் மதிக்கப்படாதபோது அவளால் தன் இருத்தலையும் தன்னையும் நேசிக்க முடியவில்லை என புரிந்துகொள்ள முடிந்தது.

அவளுடைய தாய்வழியினரை போன்றவளாய், "I look like any other Dinka girl from Sudan. என்னை யாரும் அழகாய் உணர்வார்கள் என நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை" என்கிற ஆலெக்கின் இருப்பு குறிப்பிட்ட அப் பெண்களது சிறிய அடையாளமாக ஏனும், ஃபாஷன் ஷோக்கள் –அவற்றின் அரசியல்- பற்றிய விமர்சனங்களிற்கு அப்பால், அது பல்வேறு கறுப்புப் பெண்களை இருத்துகிறது என்பதால், முக்கியப்படுகிறது.
1997 இல் Elle சஞ்சிகையில் முன் அட்டையில் ஆலெக்கின் உருவம் வந்தது தொடர்பாய், ஓப்றா வின்ஃபிறீ முதல் பல சராசரி கறுப்புப் பெண்களும், ஒரு ஃபாஷன் சஞ்சிகையின் முகப்பில் தம்மைப் போன்ற முகத்தை ஒருபோதும் எதிர்பார்த்திராததையே பகிர்ந்தனர்; ஓப்றா தனது வளரிளம் பருவத்தில் அப்படி நிகழ்ந்திருக்குமானால் அழகு பற்றிய (தன்னைப் பற்றிய) தனது மதிப்பீடுகள் மாறுபட்டிருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். மேற்கத்தைய 'ஊடக உலகை'ப் பொறுத்தமட்டில், அழகு பற்றிய மரபான புரிதலிற்கு ஆலெக்கின் தோற்றம் சவாலாக அமைகிறது. ஆனால் அதுதான் சூடானிலுள்ள ஒவ்வொரு டிங்கா இனக்குழுப் பெண்களதும் சாயல்.


ஆகவே, பலரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல,
அந்த வெள்ளை கறுப்புக் கலப்பில் பிறந்த, ஊடகங்களை அலங்கரித்த அழகிகள்
அந்த mulattos அல்ல கறுப்புப் பெண்கள்.
அவர்களைக் கறுப்பழகிகள் என்பதை, அவர்களைத்தான் கறுப்பழகிகளாக எதிர்பார்ப்பதை
நிறுத்துதல் நல்லது.

பழம்பெரும் Dorothy Dandridge ஓ ஹலி Bபெரியோ, மன்னிக்கவும்! அவர்கள் அல்ல அந்தக் கறுப்பழகிகள். அப்புறம் தமிழ் சினிமாவில் யாராவது 'வெள்ளை'யல்லாத பெண்கள் வருகிறபோது 'கறுப்பு' என பத்திரிகைகள் விபரித்து எழுதினால் நம்பவேண்டாம்; அவள்கள் கறுப்பு இல்லை!

ஊடகங்கள் நீண்ட பாரம்பரியமாகவே கறுப்புக்கெதிரான தமது பங்களிப்புகளை செய்துவருகின்றன; தமிழ் சினிமா போலவே, தீவிர எழுத்தும் இதற்குச் சளைத்தது அல்ல. ஜானகிராமனது 'மரப்பசு' போன்ற நாவல்களில் வருகிற "அவள் கறுப்பென்றாலும் வடிவு" போன்ற விவரிப்புகள் தொடர்பாக, அம்பை, நிறம் பற்றிய அத்தகைய பார்வை, ஒரு 'பிராமண கருத்தாக்கம்' என கட்டுடைத்திருக்கிறார்.

Mulattos ஐயே முதன்மைப் படுத்திற ஹோலிவூட்டில், கறுப்பு நடிகன்களுடனேயே துணைக்கு நடிக்கிற பெண்கள் லற்றினோவோ, அல்லது இக் கலப்புக் கறுப்பு நாயகிகளாவோ இருக்கிற இன்றைநாள் வரையான யதார்த்தத்தில், ஒரு கறுப்புப் பெண் எழுத்தாளர் கூறியதுபோல, அமெரிக்காவில் வெள்ளைப் பெண்ணினது பாலியல்பை "sexually adventurous" என்றும், கறுப்புப் பெண்ணினதை "Ho" ("விபச்சாரி") என்பதுமே யதார்த்தம்.

ஆலெக்கை முன்வைத்து இந்த உரையாடல் - தமிழர்/கறுப்பர்களின் தாழ்வுச் சிக்கல்களும், இன்னமும் (வெள்ளை ஆதிக்கத்தின்) உளவியல் ஆதிக்கத்திலிருந்து விடுபடாத வெள்ளை மோகமும், அதேபோல ideal அழகு என்பது என்ன என்பதும்... குறித்தே தொடர விரும்புகிறது. வெள்ளை மேலாதிக்கத்தால் கறுப்பர்களுக்குள்ளாறவே ஆழப் புதைக்கப்பட்டிருக்கிற, இவ் வெறுக்கப்படும் கறுப்பு பற்றி உரையாட நிறைய இருக்கிறது; அழகு தொடர்பான கருத்தாடல்களோ மறுபரிசீலனைக்குரியன. காலகாலமான புனைவுகளை எம்மிடமிருந்து விலக்குதல் என்பது எளிதானதல்ல தான், ஆனால், சமகாலம் பெண்களின் புறத்தோற்றம் மீது வைக்கிற அழுத்தமும் சுரண்டலுமோ சகிக்க முடியாளவு ஊன்றி இருக்கிறது; ('சந்தை'யில் விற்கப்படுகிற) தோற்றம் பற்றிய பிரக்ஞையற்ற ஒரு பெண்/குழந்தை இனி எந்த தேசத்திலும் பிறந்திட முடியாது (காட்டுவாசிகளாய் இருந்தாலேயொழிய).
ஊடகங்கள் காட்டுகிற லற்றினோ, கலப்புத் தோல் அழகிகளில் இலயிக்கிற ஆபிரிக்க, ஆபிரிக்க அமெரிக்க ஆண்களிற்கும் -வெள்ளையர்களது ஊடகங்கள்போலவே- தம் பெண்களின் கறுப்புத் தோல் பிடிப்பதேயில்லை.
அவ் வகுப்பறையில், கலப்புக் கறுப்புத் தோலினை உடைய லிரோயா என்கிற பதின்பருவக்காரியின் துணுக்குற்ற அழகிய முகம் தனது தாயின் புறக்கணிப்பையே பிரதிபலிக்கிறது.
~0~


ஆலெக் வெக் (Alek wek):
1977இல் தென் சூடானில், டிங்கா (Dinka) இனக் குழுவில் (tribe) பிறந்தவர்; உள்நாட்டு யுத்தங் காரணமாக 14ஆவது வயதில் இங்கிலாந்தில் அரசியல் அகதியானவர். இலண்டனில், கலைத்துறை மாணவியாக Fashion Technology and Business Management படித்துக் கொண்டிருந்தபோது, மொடல் முகவரொருவரால் 'கண்டுபிடிக்கப்பட்டு' ஃபாஷன் உலகிற்கு அறிமுகமானார்; பெயிண்டிங் இல் ஆர்வமுடைய ஆலெக், தனது தப்பனின் பிறந்த ஆண்டுடன் இணைத்து கைப்பைகள் Brand ஒன்றை Wek 1933 Ltd வடிவமைத்து நிறுவியிருக்கிறார் + US Committee For Refugees' Advisory Council இல் அங்கத்தவர்.
Photos: Vogue (DE) February 1998
Photography: Mark Abrahams



தொடர்புடையது:
கறுப்பு என்பது கறுப்புத்தானா? - பொறுக்கி

10 Comments:

Blogger Boston Bala said...

நன்றி

9/06/2005 11:02:00 a.m.  
Blogger சன்னாசி said...

Rabbit proof fence படத்திலே ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளை, தொடர்ந்து வெள்ளை இனத்தவருடன் உறவுகொள்ள வைப்பதன்மூலம் எப்படி genetic upgrade செய்து கிட்டத்தட்ட வெள்ளையாக்கி விடலாமென்று ஒரு பாதிரி படங்களைக் காட்டி விளக்குவார். உங்களது பதிவும், அதிலுள்ள சில கேள்விகளது நிதர்சனமும், ஆணென்றும் பெண்ணென்றும் வேறுபடுத்திப் பார்க்கமுடியாமல் ஆழப் பதிந்துவிட்ட ஒரு கருத்தாக்கத்தின் மேலானவையே. ப்ரிட்னி ஸ்பியர்ஸின் Toxic பாடலில் மோட்டார்சைக்கிள் போன்ற ஒரு கனத்த, virile வாகனத்தில் ஸ்பியர்ஸைத் தொற்றவைத்து ஓட்டிக்கொண்டு போக ஆஜானுபாகுவான, தசை புடைக்கும் ஒரு கறுப்பினத்தவனும், விமானத்தின் கழிவறையினுள்ளான நளின சரசத்தில் லேசாகத் தாடிவிட்ட வெள்ளையனும் இருப்பது, உளவியல் ரீதியாக, நிறவேறுபாடு என்றவற்றையும் தாண்டி, வெகுவாக வணிகமயமாக்கப்பட்ட ஒரு நிகழ்வின் நிதானமான, பதற்றமற்ற வெளிப்பாடாகத்தான் தெரிகிறது. உளவியலின் கூறுகளில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்து hip ஆக மாற்றிச் சந்தைப்படுத்துவதின் வெற்றிதான் இதென்று நினைக்கிறேன். வெற்றியடையும் கலாச்சாரத்தின் கூறுகள் அனைத்துத் திசைகளிலும் பரவும்போது, அது நிர்ணயிக்கும் கருத்தாக்கங்களும் உருவாக்கும் ஸ்டீரியோடைப்புகளும், தன்னுணர்வின்றியே பிறவற்றை இடம்பெயர்க்கின்றன. பின்பு default ஆகும் உணவு, உடை, ரசனை இந்த வரிசையில் நிறமும் இன்னொன்றாகச் சேர்ந்துவிடுகிறது.

நல்ல பதிவு, நன்றி.

9/06/2005 11:37:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

thanks bala & மாண்ட்ரீஸர்.

//ப்ரிட்னி ஸ்பியர்ஸின் Toxic பாடலில் மோட்டார்சைக்கிள் போன்ற ஒரு கனத்த, virile வாகனத்தில் ஸ்பியர்ஸைத் தொற்றவைத்து ஓட்டிக்கொண்டு போக ஆஜானுபாகுவான, தசை புடைக்கும் ஒரு கறுப்பினத்தவனும்,//

மாண்ட்ரீஸர், இதில் கறுப்பு பெண்கள் போல அல்லாது, க.ஆண்கள் பலசாலிகளாகவும் ஆஜானபாகுகளாகவும் காட்டப்படுகிற (தமிழிலும்) என்பதும் இருக்கிறது இல்லையா. விரிவாக எழுதினால், ஆண் Vs. பெண் எனத்தான் எழுதுவதாக வருமென்றதாலும் எழுதவில்லை. -தமிழில் சாருநிவேதா போன்ற- சர்ச்சைகளிற்கு (வெகுசனத்தளத்தில்) பேர்போன Kola Boof படித்தபோது அவரது நடவடிக்கைகள் weird—ஆய் :( தன்னை present பண்ணற விதங்கள் மரபான மனதிற்கு அதிர்ச்சி/சங்கடமாய் இருந்தபோதும், 'கறுப்பு ஆண்கள்' பற்றி அவர்கள் ஊடகங்களில் கொண்டாடப்படுவது பற்றி, ஆனால் அவர்களது துணைகள் எல்லோருமே mulattos ஆக இருப்பது பற்றி சாடி அவர் எழுதிய கவிதையை மிகவும் இரசிக்க முடிந்தது.
Kola Boof பற்றி எழுதும்போது (இப்போதைக்கு இல்லை) அந்த அரசியலையும் எழுத வேண்டுமென நினைத்தேன்.
அக் கவிதையை கறுப்புப் பெண் ஒருத்தி எழுதியதுதான் முக்கியமானதென தோணுகிறது.
மற்றது இவர் தன்னை பின் லாடன் பாலியல்வதைகள் செய்து சிறைவைத்திருந்ததாக, சொன்னது சர்ச்சையானபோது –-அது உண்மையா பொய்யா என்பதற்கு அப்பால்-- 'பின் லாடன் இப்படி ஒரு தோற்றமுடைய ஒருவருடன் இருந்திருப்பாரா' என ஒரு CNN (?) நிருபர் கேட்டதும் இந்த நிற/ஆபிரிக்க உருவ அரசியலுடன் சம்மந்தப்பட்டே இருக்கிறது (அதற்கு, "நான் அந்ந நிருபரைவிடவும் அழகுதான்" என இவர் பதிலளித்திருந்தார் :-).

இந்த மாதிரி விடயங்களை பல தளங்களிலிருந்தும் பேசலாம்.

9/08/2005 02:27:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

--------------------
"GOLDDIGGER"
--------------------
by Kola Boof

How many millions

did Kobe Bryant have to pay the White Man's mother?

and how much

...was the ring?

Ringing in our ears like the dick in a Cow Bell.

How much Mr. Simpson/Mr. Orenthal--did you have to pay IN CASH

and how many times

My brother...brother of Anna Nicole.

Which rhymes with Gold.

How beautiful is Michael Jordan next to his blond gold-digger?

How beautiful is he...next to his own mother's flesh?

How much does it cost to buy a White WOMB

to produce a High White Jackson baby?

...dear, dear...dear........Sweet Jesus....woooh, lawd

Tell us Golddiggers and Niggers.....How much?

To gain the whole world
but lose your soul...on Soul Train
bringing lies
against women you don't even know
women
you would never let yourself...KNOW.

Mr. Cornelius, Mr. Montel and Mr. Today Show

--how much sun tan lotion does a golddigger require?

Who is the Coon-Cracker...now...as you ride the Soul Train?
as you marry
the lynch rope

Mr. Big Dick
Mr. Biiiigggggg Dick
Mister
Mister...Big...Black...Dick
Mister
Mister...Acorns stuffed in chipmunk cheeks
Mister
Kanye West
you motherfuck'n TRICK

Somebody please/bring me my coat
I can't stand the sight
of my own son.

And tell me this:

Where is the song about Kobe Bryant's doo-doo Sauerkraut bitch?

Come Video Mulattoes, imitation black women of America---imitate for us

Come holy angels of Asian and Latina blood: Get these invitations to the financial lenders.
Watch Tiger bust a move/Sign up to go jogging
with a rich black lawyer.

It's free (for you).

Come by here, White Master Eminem...see what new niggers your daughter owns now.
See the bounty of your cracker-CRACKED-coal legacy--
O Superior White Christ of the Saint People's Church
of everlasting Mother-Killing
/but answer me this:

Where is the song about that no-talent, white boy
worshipping
fat brained Puerto Rican Jennifer bitch
with "good hair"--better hair than Kanye West's mother
The fly one
who made her fortune as a golddigger

play'n as puppets/ some powerfully stupid niggers

Where is her song--

And what real Black man watches BET anyway?





---------------------------------
இந்தக் கவிதையில் கலப்புவெள்ளைப் பெண்களை bitch என்பதுமுதல், black wannabes' ஐ சாடுகின்ற 'முறை' எனப் பல விமர்சனத்துக்குரிய விடயங்கள் இருக்கின்றனதான்.
ஆனால் அவையைப் புறந்தள்ளி முன் வருவது - இதிலிருக்கிற கோபம்.
M.jackson முதல் இன்றைய கறுப்புப் பிரபலங்களனைவரும் கேள்விக்குள்ளாகிறார்கள்.

---------------------------------

9/08/2005 02:44:00 p.m.  
Anonymous Anonymous said...

மிக அருமையான பதிவு கருப்பி. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

9/10/2005 12:49:00 p.m.  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

பொடிச்சி முதலில் தவறவிட்டு இப்போது வாசித்தேன்.நல்ல கட்டுரை

9/10/2005 06:37:00 p.m.  
Anonymous Anonymous said...

//அந்தக் கறுத்தப் பெண்கள்
அவளை
வெறுத்திருப்பார்கள்
என்று
தோன்றவில்லை; அவர்கள்
'தங்களை' அவளில்
காண்பதைத்தான்
வெறுக்கிறார்கள்//

//இது மறத்தமிழன்களின்
'சிவப்புப்
பெண்' மோகத்துடன்
ஒத்திசைவதும்//

// என்னை யாரும் அழகாய்
உணர்வார்கள் என
நான் ஒருபோதும் கற்பனை
செய்ததில்லை"
என்கிற ஆலெக்கின் இருப்பு//

பொடிச்சி, பல விடயங்களை ஒரே
பதிவில்
தொட்டுவிட்டீர்கள்.
கறுப்பர்களிடமுள்ள
கறுப்பு பற்றிய
தாழ்வுமனப்பான்மை,
கறுப்பல்லாதது
பற்றிய பிரமிப்பு என்பது
ஊடகங்கள்
மூலம் வந்ததா? சமச்சீரற்ற
பொருளாதாரத்தினால் வந்ததா?
சந்தைப்படுத்தலால் வந்ததா?
காலனித்துவமா? என்று
நிறையக்
கேள்விகள் எழுகின்றன.

9/14/2005 03:37:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

Ajoy: கறுப்பைப்பபற்றி எழுதினால் 'கருப்பி'யாக இருக்கவேண்டுமென்ற லாஜிக்கில் எழுதியிருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன் - 'கறுப்பி' என்கிற இன்னொரு வலைப்பதிவரென்று என்னை நினைக்கிறீர்கள் என்றால் - நான் அவர் இல்லை! :-)

நன்றி ஈழநாதன்...

பொறுக்கி: இது விரிவான தளங்களில் பேசப்படவேண்டிய விடயமே..

9/14/2005 04:02:00 p.m.  
Blogger தெருத்தொண்டன் said...

நல்ல பதிவு

9/22/2005 08:27:00 p.m.  
Blogger வன்னியன் said...

பலநாள் முயன்றும் இன்றுதான் இந்தப்பக்கம் என் கணிணியில் திறந்தது. உங்கள் பக்கம் சிலநேரங்களில் சிக்கலைக் கொடுக்கிறது. ஏனென்று தெரியவில்லை.
நல்ல பதிவு.

9/22/2005 10:21:00 p.m.  

Post a Comment

<< Home