@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Sunday, February 06, 2005

குடும்பம் I - Desperate housewives


இடமிருந்து வலமாக, நடிகைகள், Nicolette Sheridan, Felicity Huffman,
Marcia Cross, Eva Longoria & Teri Hatcherபுதிதாக ஒரு தொலைக்காட்சித் தொடர் வந்திருக்கிறது Desperate housewives
என்று. முதல் எபிசோட்தான் பார்த்தேன். அதில்:
தொலைக்காட்சி விளம்பரங்களில் வருவதுபோல, ஒரு ideal ஆன வெள்ளை-இன குடும்பப் பெண் வெளியில வருவா, தோட்டத்துக்கு தண்ணியூற்றுவா, அழகிய தனது குடியிருப்பை பார்வையிடுவா, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவா, அப்புறம்... அறைக்குள்ள வந்த துப்பாக்கி எடுத்து தலையில வைத்து...
...
அவட செத்த வீடு. துயர்முகம் போட்ட கணவன், பிள்ளைகள், வீட்டுக்கு வருகிற குடியிருப்பின் பிற பெண்கள், அவர்கள் கணவன்கள், பிள்ளைகள்...

அது கொலையா? தற்கொலையா? வீட்டுக்குப் பின்னால் அவட கணவன் ஏன் ஒவ்வொருமுறையும் இரவில் கிடங்கு கிண்டிறார்? நீச்சல்தடாகத்திற்குக் கீழ் உண்மையில் ஏதேனும் ரகசியம் உள்ளதா?
இத்தனை மர்மங்களும் அவிழ்க்கப்படுவதற்காய்த் தொடரப்போகிறது. அதற்குமுன் அக்குடியிருப்பில் இருக்கிற, இறந்த பெண்ணின் தோழிகளான, பிற பெண்களை அறிமுகம் செய்கிறார்கள்; அவர்கள் தம் சக தோழியான அந்தப் பெண்ணின் கொலையை அல்லது ரகசியத்தைக் கண்டுபிடிப்பார்களா?

இவர்களில் ஒருத்தி (Eva Longoria) businessman இன் ‘மொடல்’ மனைவி (வழமைபோல ஒரு லற்றினோ (latino)!). அவன் அவளை தனது வியாபார ரீதியான ஒன்றுகூடல்கள், விருந்து விழாக்கள் எல்லாத்துக்கும் ஒரு பொம்மை போல கூட்டியண்டு போவான், முக்கிய புள்ளிகள் ‘கண்டபடி’ தொடுவதை எல்லாம் அவள் கண்டுகொள்ளக்கூடாதென்றும் கேட்டுக்கொள்வான், பரிசாய் அவளுக்கு நெக்லஸ்களும் விலை உயர்ந்த கார்களும் கொடுப்பான். அவள் வீட்டின் தோட்டக்காரனுடன் ‘தொடுப்பு’ வைத்துக்கொள்கிறாள் (இந்தத் தொடரில் பையனின் வயது 17). அவர்களுக்கு இடையேயான உரையாடல் ஒன்று இவ்வாறு அமைகிறது:
அவன்: நீ உன்ர கணவனை நேசிக்கிறியா?
அவள்: ம்
அவன்: "So, why are we here? Why are we doing this?"
அவள்: "Becuase I don't wanna wake up one morning with the sudden urge to blow my brains out."

இன்னொருத்தி (Marcia Cross) Martha Stewart வகையறா. பூக்கன்றுகளிற்கு பசளையிடுகிறாள், கடையில் வாங்குவதற்குப் பதில் வீட்டிலேயே bபண்ணுகள் செய்கிறாள். perfectionist ஆய் குடும்பத்தினரை வீட்டுணவை உண்ணவைப்பதிலும், மேசைப் பழக்கவழக்கங்களின்படி உண்ண வைப்பதிலும் ஈடுபடுபவளாக இருக்கிறாள், மேலும் அவளது வீட்டில் மௌனமாக இருந்தே அனைவரும் சாப்பிடுகிறார்கள் (சாப்பிடும்போது பேசக்கூடாது), குளியலறையில் ஒரு ஒழுங்கில் துவாய்கள் தொங்குகிறது (ஒழுங்கு குலையக்கூடாது). பூக்கன்றுகள் கதிரைவிரிப்புகள் எல்லாம் ‘ஒழுங்கில்’. அவளது தலைமுடிகூட ஒரு கட்டுக்கோப்புடன் ஒழுங்காய் நிற்கிறது, அசையாமல். அவளது கணவன் ‘கல்லூரியில் பார்த்த துடியாட்டமான அந்தப் பெண் இல்லை நீ! உன்குறித்த எல்லாமே எனக்குப் பயமாயிருக்கிறது, முக்கியமான உன் தலைமுடி கலையாம, ஆடாம அசையாம நிக்கிற விதம்! இந்த 'தொலைக்காட்சி விளம்பர'பாணி வாழ்க்கை எனக்குத் தேவையில்லை!’ என்றெல்லாம்சொல்லி, அவளிடம் விவாவகரத்துக் கேட்கிறான். அவனுக்கு சிரித்து ‘ஓ! சரி சேர்ந்து முடிவெடுப்போம்’ என சம்பிரதாயப்பதில் கூறிவிட்டு, குளியலறைக்குள் போய்ப் பைப்பைத் திறந்துவிட்டு உடைந்துபோய் அழுகிறாள்.


இவர்கள் -கணவர்களின் உழைப்பில் வாழக்கூடிய- உயர்மத்தியதரவர்க்கப் பெண்கள். குழந்தைகளை மற்றும் வீட்டைப் பராமரிக்கும்பொருட்டு வீட்டில் தங்கியிருப்பவர்கள். –வெளியே தாம் ஓர் அற்புதமான வாழ்வை வாழ்வதாய் காட்டிக்கொண்டிருக்கிற (யாருக்கு?!)- இப் பெண்டிரைக் கொண்டு, செக்ஸ், திறில், அப்புறம் டிராமா இவைமூன்றும் கலந்த இது தற்போதைய முன்னணித் தொடராய் ஆகிவிட்டதில் ஆச்சரியமில்லை.
இதுவும் வழமையான, தொ.தொடர்களுக்குரிய போர்முலாக்கள் அடங்கிய ஒரு வியாபாரத் தொடரே. இருப்பினும் இந்தத் தொடரைப் பற்றி எழுதக் காரணம், ‘குடும்பம்’ என picture perfect ஆய்ப் பல தொடர்கள் காட்டி வருகிற சமாச்சாரங்களிலிருந்து விலகியதாக, முக்கியமாகக் குழந்தைகள், உடலுறவு பற்றிய புனைவுகளிலிருந்து இது ‘சற்றே வித்தியாசமாய்’ உள்ளது என்பதால். இதன் நகைச்சுவையான கதைசொல்லல் முறை காரணமாக, இம்முறை கோல்டின் குளோப் விருது BEST TELEVISION SERIES - MUSICAL OR COMEDY என்கிற வகைப்பிரிப்புக்குள் இதற்குத்தான் கிடைத்துள்ளது.

அந்த நிகழ்ச்சியிலும், இந்த தொடர் liberal ஆ conservative ஆ என்ன வகைப்பிரிவுக்கள் அடங்குமென கேள்வி கேட்கப்பட்டபோது, தனக்குத் தெரியவில்லை என்று இதன் தயாரிப்பாளரோ இயக்குநரோ கூறிக்கொண்டிருந்தார். கட்டுப்பட்டியான குடும்பங்கள் குறித்த liberal ஆன பார்வையாகவே எனக்குப் படுகிறது.
முதல் எபிசோட் மட்டுமே பார்த்திருந்தாலும் - ஆணால் எழுதப்பட்டிருக்கிற- இந்த தொடரின் இப் பெண்கள் பிடித்துப் போய்விட்டனர். காலகாலமாக, மிகவும் சீரியஸாகவும், இயந்திரகதியிலும் பெண்கள் தொடர்ந்துகொண்டிக்கிற பாத்திரங்களை ஆண் தனதுபார்வையில், அங்கதத்துடன் சொல்கையில் அத்தகு பெண்களது வாழ்வின் வரட்சி வெளிப்பட்டிருக்கிறது, சிறிதளவிலேனும்!

முக்கியமான இதில் வருகிற மற்ற மூன்று பெண்களில் (ஒருவள் (Teri Hatcher) இதில் கதாநாயகிபோல, விவாகரத்தானவள், பதின்மப்பருவ மகளையுடைய கவர்ச்சியான 30களில் உள்ள பெண்மணி; மற்றவள் (Nicolette Sheridan): ஹோலிவூட்வகை கவர்ச்சியான 40களிலுள்ள தொடர்-விவாகரத்துகளால் அறியப்பட்டவள்! இவளுடைய பாலியல் தொடர்புகள் குறித்து குடியிருப்பில் கதைகள் உலாவும்!) எனக்குப்பிடித்தது நாலோ என்னமோ குழந்தைகளை மேய்க்கிற ஒரு வலு சுவாரசியமான பெண்தான். பிள்ளைகளைப் பராமரிக்கும் பொருட்டு அவள் தனது அலுவலக வேலையை விட்டுவிட்டு நிற்கிறாள். இந்த நடிகை (Felicity Huffman) யோட முகமும் களைப்பு, சலிப்பு வெளிக்காட்டிற உடல்மொழியும் யதார்த்தம். மீதி நான்கு பெண்களிலும் அவ்வளவாய் கிளாமர் இல்லாத தோற்றம் இவருக்கு - அதுவும் பிடித்திருந்தது. அவளது கணவன் வியாபார tour கள் போகிற ஓய்வற்ற ஒருத்தன். இந்த முதலாவது எபிசோட்டில் ஒருக்கால் வீடு வருவான், இவள் பிள்ளைகளுடன் அலுப்புற்றுக்கொண்டிருந்தபோது... அவன் அவர்களை விளையாட அனுப்புவான். பிறகு அவளுடன் உடலுறவு கொள்ள முனைகையில், இவள் தான் கருத்தடை மாத்திரை உட்கொள்வதில் பிரச்சினை என்று சொல்லி அவனை ஆணுறை போடச் சொல்லுவாள் அவன் ‘என்ன பெரிய விசயம், றிஸ்க் எடுப்பம்’ என்றுவான். அவள், 'றிஸ்க் எடுப்போமோவோ?' என்றவிட்டு அவனத் தள்ளிவிட்டு, சீற்றத்துடன், அவன்ட முகத்தில ஒரு குத்து விடுவாளே....

சோப் ஒப்பறாக்களில் எல்லாம், குழந்தைகள் அழகே உருவாய், சத்தமே போடாதவர்களாய், வந்து போறதும், அவர்களை வீட்டின் அடுக்குகளைக் குலைக்காத கடவுளின் பரிசுகள்போல காட்டுவதும், செல்லமொழி பயிலுவதும், அதுகளை பாவித்து தங்களது ஆண்நண்பன்களை தங்களுடன் தக்க வைத்துக் கொள்ள பெண்கள் முனைவதாயும் காட்டிக் காட்டி பைத்தியமடிக்கும் தொலைக்காட்சி உலகம். அப்படிக் குழந்தைகள், பாலியல், மனிதஉடம்பு குறித்து ஆயிரம் புனைவுகளை உண்டாக்கித் தள்ளுவார்கள்.
அவற்றிலிருந்து மாறுபட்டு, இதில் இந்தப் பிள்ளைகள் தட்டிற ஒழுங்குகள், போடுற குப்பைகள், கணமும் தர்ற எதிர்பாராத ஆக்கினைகளும் என ஒரே களேபரம்.. தத்ரூபம்!
இப்படிப் பாக்கிறபோது அமெரிக்காவில் ஏன் ஒரு(பல!) பெண் தனது குழந்தையை பாத் ரப்புக்கள் நீரில் அமிழ்த்திக் கொன்றாள், ஏன் பெண்கள் மாடியிலிருந்து குழந்தைகளைக் கீழே போடுகிறார்கள், எதற்காக தமது மகவுகளைக் கொலைசெய்யத் துணிகிறார்கள் என்பதற்கெல்லாம் ஒரு காரணமும் நியாயமும் கிடைக்கிறது. குடும்பம் அமைப்பு, அதற்குள், பிள்ளைகள், கருத்தரிப்பு பற்றிய அச்சத்தில் மனங்கொள்ள இயலாத உடலுறவு, சுய அழிவு என பெண்ணிற்கு எவ்வளவு சுமை, எவ்வளவு சக்தி இழப்பு என்பன குறித்தெல்லாம் கவனம் குவிகிறது. மேலும் அவர்களது தனிமை, ஆற்றாமை, மனஉளைச்சல், boredom!

தொலைக்காட்சியில், ஓப்றா வின்பிறீ (Oprah Winfrey) இத் தொடரின் நடிகர்களை அழைத்து ஒரு நிகழ்ச்சி செய்திருந்தார். அதில் சாதாரண குடும்பப் பெண்களும் பங்குபற்றி அந்தத் தொலைக்காட்சித் தொடர் ஏன் தங்களுக்கு பிடித்திருந்தது, அதுடன் எப்படித் தாங்கள் தங்கள அடையாளங் காண்கிறார்கள் என்பன பகிர்ந்தார்கள்.
ஒரு வெள்ளைஇனப் பெண், வரண்டுபோன சுரத்தற்ற முகத்தோட பகிர்ந்தது இதை ஒத்த அனுபவம்:
“ஒவ்வொருநாளும் வீட்டக் கூட்டினன். அள்ளினன். பிள்ளையள சிரிச்ச முகத்தோட பள்ளிக்கு அனுப்பினன். குடும்பப் போட்டோகளில அதே சிரிப்போட போஸ் குடுத்தன். ஊருலகத்தில எல்லாரும் நினைச்சினம் ‘ஓ அவள் என்ன ஒரு முழுமையான வாழ்வை வாழ்றாள்!’ எண்டு. முழுமையான மனைவி, தாய், நல்ல நிர்வாகி. ஆனா எல்லாரும் போனாப்பிறகு, அந்த வெறுமையில, நான் தொலைஞ்சு போனன். அப்ப - என்ன செய்யிறது? எனக்குத் தெரியிறதே இல்ல. நான் என்ன எண்டிற கேள்வி விழேக்குள்ள, ஒருநாள்ள எத்தின தடவ தற்கொலையைப் பற்றி யோசிப்பனோ தெரியாது. குழந்தைகள நினைச்சு அது முடியிறதுமில்ல. கடவுளே! அந்த உணர்வில இருந்து விடுபடோணுமெண்டா நான் என்னவும் செய்யத் தயாரா இருந்தன். ஒரு இளம்பையனுடன் affair இருந்தது Desperate housewives தொடரில மாதிரியே! காரணமும்கூட அவளுடையதுதூன். சந்தோசமா இருந்திருப்பனா? தெரியேல்ல; ஆனா அடிப்படை அந்த இறுக்கத்தில இருந்ததான விடுதலை வேண்டியிருந்தது, சொட்டே நேரமெண்டாலும். அவ்வளவுதான்”
0


4 Comments:

Blogger Scoopy Dump said...

பொடிச்சிக்கு வணக்கம்,

உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கவுள்ளேன்....

நேரடியாகச் சொன்னால் ஒரு விடயம் சார்பாக ஒரு வலைக்குறிப்பை இடக் கேட்கப் போகிறேன்..நானென்ன உங்களைக் கேட்பது என நினைக்கிறீர்களா?

பரவாயில்லை.. உங்களுக்கு உரிமையுண்டு....நீங்கள் World Wrestling Entertainment பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.....

நானறிந்து இது USA இலும் Canada இலும் தான் நடக்கிறது....இதைப் பார்க்கும் போதெல்லாம் வன்முறையின் உச்சக்கட்டம் பொழுதுபோக்காக்கப் பட்டுள்ளமை வெளிப்படுகிறது....விளையாட்டுக்கள் எல்லாமே ஒவ்வொரு அளவுகளில் வன்முறைக்குக் கைகொடுப்பவை தான்.... :-((((

நீங்கள் ஒரு சமூக ஆர்வலர் என்ற முறையில் இது சார்பான psychology பற்றி ஒரு குறிப்பை இடு வேண்டும் எனக் கேட்கிறேன்..நானே எழுதிவிடுவேன்...

ஆனால் இவ்வினோதம் சார்பான செய்திகள் இங்கு கிடைப்பது அரிதாகவே இருக்கிறது...நீங்கள் ஒரு கனடா வாசி என்பதால் உங்களுக்கு இது சார்பான போதிய அறிவு இருக்கும் என நம்புகிறென்...உங்கள் முடிவை எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

உங்களால் முடியாவிட்டால் வேறு யாரைக் கேட்கலாம் என்றாவது தெரிவியுங்கள்..

எதிர்பார்த்து நிற்கும்

விகடன்

2/06/2005 09:25:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

விகடன்!
நீங்கள் குறிப்பிட்ட விடயம் சுவாரசியமாக தலைப்புத்தான். பிறகெப்போதாவது எழுத முடிந்தால் எழுதலாம். கனடாவில் இதற்கென பிரத்தியேக சானல்கள் வைத்திருக்கிறார்கள், இதற்கென்றே மகசின்களும் வருகின்றதென தெரியும். மற்றப்படி இப்போது பெண்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள் (இன்னமும் 'கவர்ச்சி' சேர்க்க).
இதுபற்றி எழுத -
பிற வலைக்குறிப்பர்களில் யாரு இங்கு வசிக்கிறார்களென்பது தெரியவில்லை.

நன்றி.

2/07/2005 12:47:00 a.m.  
Blogger Boston Bala said...

அட... இன்றுதான் படிக்கும் நேரம் கிடைத்தது. வழக்கம் போல் அருமை. எனக்குப் பிடித்த தொடரை எடுத்து எழுதியதற்காக நன்றிகள்.

3/03/2005 02:10:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

நன்றி பாலா!

3/07/2005 05:56:00 p.m.  

Post a Comment

<< Home