@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Saturday, December 25, 2004

"Christmas in America"

ரொறன்ரோ மார்கழி 25, 2004.

இது பண்டிகைக் காலம்- இந்த வருட இறுதிவரையில் (இன்னும் ஆறு நாட்கள்!) விடுமுறை; கரீபியன் தீவுகளில் சில கிழமைகளிற்குப் பிறகு, இப்போ குடும்பத்தினருடன் ரொறன்ரோவில்... வன்கூவர் போன்றதொரு, யப்பானியர்களின் பழைய வீடுகளும் மரங்களும் சூழ்ந்த, இந்த மாதம் லேசான மழைக் குளிர் மட்டுமே அடிக்கிற அந்த நகரத்தில பாரமற்ற ஆடைகளுடன் திரிந்துவிட்டு, விடுமுறைக்கென்று, இந்தக் குளிர்காலத்தில் ரொறனோவில் வந்து மாட்டிய ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன். என்றாலும் என்ன?! விழாக்கோலம் பூண்ட நகரம், அலங்கார விளக்குகள், கடந்த கிறிஸ்மஸ் போலல்லாமல் வஞ்சகமில்லாமல் கொட்டிக்கொண்டே இருக்கிற ஸ்நோ... திறக்கிற வானொலி நிலையங்கள் எல்லாம் Christmas carols களையே ஒலிபரப்பிய வண்ணம்.
கடந்தவருடங்களில் ‘இந்த முறை white christmas வராதா’ போன்ற ‘பெரும்’ கவலைகளில் ஊடகங்கள் ஆழ்ந்திருந்த நினைவு; இந்த முறை அந்தக் கவலைக்கு வேலையில்லை.

இந்தக் கனவு பூமிக்கு நானும் வந்து என் வயதில் பாதிக்கு மேலாகிறது. இந்தப் பூமியில் ஏலவே இருந்த கனவுகளை அழித்துத்தான் இதை உருவாக்கினார்கள். இந்த நாட்டின் நிலங்களடியில் நோய் பரப்பியும் துவக்குகளாலும் கொன்றழிக்கப்பட்ட பூர்விகக் குடிகளின் வரலாறு கிடக்கிறது. பின்னர், தாம் அபகரித்து, ‘எடுத்த’ நிலத்திலிருந்து, நுனவிற் (Nunavut) என்றொரு சிறு பகுதியை, ‘பாவம் பார்த்து’ ‘சரி வைத்துக் கொள்ளுங்கள்’ என்று, இந் நாட்டின் பூர்விகக் குடிகளுக்காகத் “தரப்பட்டாலும்” உயர்பாடசாலை புத்தகங்கள் அவர்களுடைய அந்த அழிக்கப்பட்ட வரலாறை சொல்லுவதில்லை. அவர்களுடைய அற்புதமான பாடல்கள், வழிபாட்டு முறைகள், கொண்டாட்டங்கள் தீண்டப்படவில்லை. வந்தேறுகுடிகளான இங்குள்ள இனங்களும் நாமும் வெள்ளையர்களின் கிறிஸ்தவ மத விழாவை, மதமற்ற ஒரு கொண்டாட்டமாய்க் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
ஈழத்தின் குக்கிராமங்களில் எல்லாம் போரற்ற காலத்தே ‘நத்தார் பாப்பா’வாய் யாரோ ஒருவர் அலங்கரித்து இனிப்புகள் கொண்டுவருவார். வீட்டு வாசலில் நள்ளிரவில் சிறு பிள்ளைகள் எல்லாம் கனவுபோல ஒழுப்பப்பட்டு கையில் அவிச்ச சோளங்கள்(!!) திணிக்கப்பட்டு... வெள்ளைத் தாடியில் பெரிய வயிற்றில் நத்தார் பாப்பாவின் ஆட்டத்தை கண்டு களித்து, பின் உறக்கத்திற்கு அனுப்பப்படுவர். சிறு வயது நினைவுகளில் அது ஒரு மதக் கொண்டாட்டம் அல்ல!
மேற்கு நாடுகளில், சிறுவர் கதைகளில் புகைக்கூடு (Chimney) வழியே உள்ளே வருகிற சான்ரா வீட்டு கணப்படுப்புக்கு அருகில் தொங்க விட்டிருக்கிற பெரிய சிவத்தக் காலுறையுள் பிள்ளைகளுக்கான பரிசுகளைப் போட்டுவிட்டுச் செல்வார். கூடவே குழந்தைகள் அவருக்காய் வைத்திருக்கிற பாலையும் பிஸ்கட்களையும் உண்டுவிட்டும் செல்வார்! சில அப்பாவிப் பிள்ளைகள் தரம் 6, 7 வருமட்டுக்குங்கூட ‘சான்ரா என்றொருவர் வருவதில்லை’ என்பதை அறிவதில்லை (தம் வீடுகளிற்குப் புகைக்கூடு இல்லாவிட்டாலுங்கூட)!

நத்தாரின் அந்த நள்ளிரவு இது. Christmas Eve. சில தினங்களில், புதிய வருடமும் வரப்போகிறது. வழமைபோல புதுவருடத்திற்கான திட்டங்களை போட்டபடி சிறு பிள்ளைகள்... அனேகமாக அவர்களிற்கு மட்டுமே இது குதூகலமும் பரிசுகளும் நிறைந்த விடுமுறை. தம் துணைகளைக் குழந்தைகளைப் பிரிந்திருக்கிற மனிதர்களிற்கு இந்த விடுமுறை நாட்கள் (தொழிற்சாலைகளின் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் அதிகப்பேருக்கு ஊதியம் வழங்கப்படாத ‘விடுமுறை’!) மதுவுடனும் தனிமையுடனும்கழிகிற அன்றாட தினங்கள்தான். உடலுக்குமட்டும் ஓய்வு.

CHUM FM இல் ஒருநாளில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல தடவைகள் நேயர் விருப்பமாகவும் அறிவிப்பாளர் தேர்வாகவும் ஒலிக்கிறது இந்தப் பாடல் (என் அற்புதமான மொழி 'பெயர்ப்பில்'!).

"Christmas in America" (length: 4:22)

Well, I picked out a tree
And I tied it to the car
There's a wreath upon our door
Eight tiny reindeer in the yard

...நான் ஒரு மரத்தை தேர்ந்தெடுத்தேன்
அதைக்காருடன் சேர்த்துக் கட்டினேன்
அலங்கார வளையம் எங்கள்வீட்டுக் கதவில்
எட்டுச் சின்ன கிறிஸ்மஸ் மான்கள் எங்கள் பின் தோட்டத்தில்

I drove under the downtown lights
Red and green and blue
The silver neon snowflakes
Only made me think of you

நான் டவுண்ரவுன் விளக்குகளுக்கு கீழே
வாகனமோட்டிச் சென்றேன்
சிவப்பும் பச்சையும் நீலமும்
சில்வர், நியோன் ஸ்நோ துளிகள்- எல்லாம்
என்னை
உன்னை மட்டுமே நினைக்கத் துர்ண்டின

It's Christmas all around me
You're in someone else's land
So I'm sending out my only wish
Hey, Santa, tell a man

Hey, Mister
Send my baby home
This December
I don't wanna be all alone

என்னைச் சூழவும் கிறிஸ்மஸ் கோலங்கள்
நீ, வேறுயாருடையவோ நிலத்தில்இருக்கிறாய்- ஆகவே
நான் என்னுடைய ஒரே அவாவை அனுப்புகிறேன்
ஹேய்ய்ய்ய் சான்ரா, ஒரு ஆணிடம் சொல்லுங்கள்:

ஹேய் மிஸ்ரர்
என் செல்லத்தை என்னிடம் அனுப்பு

இந்த டிசம்பர்
நான் மட்டுமான தனிமையில்
இருக்க விரும்பவில்லை

Oh, Christmas in America
I need you in my arms
Far away from home
Send my baby home

ஓ..!அமெரிக்காவில் கிறிஸ்மஸ்!
எனக்குஎன் கரங்களுக்குள் நீ வேண்டும்

வீட்டிலிருந்து தொலைவிருக்கும்
என் கண்மணியை இங்கனுப்பு


I hear someone singing "Jingle Bells"
No, wait, that's "Deck the Halls"
While the teenagers with candy canes
Ramble through the malls

The girls are down at Ruby's
Trying to find some Christmas cheer
There's not much to do
But drink too much
When every day's unclear

So here I am on Christmas Eve
This silent holy night
And I reach up to the stars for you
I pray that you're all right

பதின்மக்காரர்கள் கிறிஸ்மஸ்
இனிப்புகளுடன்
மோல்களுள் திரிகையில்
யாரோ '"Jingle Bells" பாடுவதைக் கேட்கிறேன்,
இல்ல, அது '
"Deck the Halls"

சிறு பெண்கள் உணவகங்களில்
கிறிஸ்மஸ் உற்சாத்தை பெற முயல்கின்றனர்
ஒவ்வொரு நாளும் தெளிவற்று இருக்கையில்
செய்வதற்கு ஒன்றுமில்லை
நிறையக் குடிப்பதைத் தவிர

ஆகவே இந்த Christmas Eve இல்
இந்த அமைதியான தெய்வீக இரவில்
நான் உனக்காய் நட்சத்திரங்களை நோக்கி
வேண்டுகிறேன்
‘நீ நலமாய் இருக்கவேண்டும்’



உச்சஸ்தாயியில் "என் கண்மணியை இங்கனுப்பு
என பாடுகிறபோது
தொலைதேசங்களில் காதலர்கள், பிள்ளைகள், நண்பர்கள், இருக்கிற அனைவருக்குமாக
குழந்தைகள் இராணுவத்தில் இருக்கிற முதிய பெற்றோருக்காக
ஒலிப்பதுபோல இருக்கிறது. தனிமையில், டவுண்ரவுணிலிருந்து வாகனத்தில் வருகையில், ஒளிரும் பண்டிகை விளக்குகளுடன், இந்தப் பாடல் துணையாகிறது.
தனிமை, ஏக்கம், தவிப்பு பாவிய காதல் உணர்ச்சிகளை இவ்வளவு உணர்ச்சிகரமாக, ஆன்மாவை தழுவிப் பாடிக்கொண்டிருப்பவர் மெலிஷா எத்திறிட்ஜ் (Melissa Etheridge). அமெரிக்க பாடகி. ஒரு பெண் ஓரினச்சேர்க்கையாளர் (Cruises இல்கூட இவரது பாடல்கள் Concert நடப்பதுண்டென சொன்னார்கள்) . தனது பெண் தோழியொருத்தியை நினைத்துப் பாடுவதுபோலமைந்த இந்தப் பாடல் வரிகளை இணையத்திலிருந்து இறக்கிவிட்டு கேட்டுக்கொண்டே இருக்கிறேன்...

அனைவருக்கும் -கிறிஸ்மஸ் மற்றும் புது வருட வாழ்த்துக்கள்!- முக்கியமாகத் தம் துணைகளைப் பிரிந்திருக்கிறவர்களுக்காய் இந்தப் பாடல்...

Hey, Mister
Send my baby home
This December
I don't wanna be all alone
Oh, Christmas in America
I need you in my arms
Far away from home
Mister, send my baby home

What happened to the peace on earth?
All that good will toward men
Oh, c'mon, oh you faithful
It's time to think again

Hey, Mister, send my baby home
This December
I don't wanna be all alone
Oh, c'mon, c'mon, c'mon


Hey, Mister
Send my baby home
Oh, this December
I don't wanna be all alone
Send my baby home
Send my baby home
Send my baby home
Send my baby home
C'mon
Send my baby home
Send my baby home
Send my baby home
Send my baby home

Yeah, yeah, yeah, yeah
Yeah, yeah, yeah
Yeah, yeah, yeah, yeah, oh
C'mon, c'mon
Yeah, yeah, oh
Yeah, yeah, yeah
Oh, oh, oh
Send my baby home
Send my baby home
C'mon, send my baby home
Send my baby home
0




5 Comments:

Blogger ROSAVASANTH said...

கேட்டேன், முன்னர் கேட்டதில்லை. பிடித்திருந்தது-பாடல் வரிகளை முன்னால் வைத்துகொண்டு கேட்க. நன்றி. (my babe is also away, no one to bring here for new year!)

12/25/2004 07:28:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்!

12/25/2004 10:13:00 a.m.  
Blogger சன்னாசி said...

//இந்த நாட்டின் நிலங்களடியில் நோய் பரப்பியும் துவக்குகளாலும் கொன்றழிக்கப்பட்ட பூர்விகக் குடிகளின் வரலாறு கிடக்கிறது. பின்னர், தாம் அபகரித்து, ‘எடுத்த’ நிலத்திலிருந்து//

Black Elk Speaks என்று ஒரு புத்தகம் உள்ளது. முடிந்தால் படித்துப் பார்க்கவும். கூகிளில் Black Elk என்று தேடிப்பார்க்கவும். முழுதாக online text கூட உள்ளது.

12/25/2004 11:03:00 a.m.  
Blogger இளங்கோ-டிசே said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நத்தார், புதுவருட வாழ்த்துக்கள். பாடலைத் தமிழ்ப்படுத்தியிருந்தது நன்றாகவிருந்தது. 2002 ஆண்டிற்குப்பிறகு இன்னும் ரொரண்டொவில் கிறிஸ்மஸ் நாளன்று வெள்ளைப்பனி வரவில்லை என்று பலரும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாளைக்கு boxing day யோடு அந்தக்கவலை பறந்துபோயிவிடும் என்று நினைக்கிறேன்.
....
ரோசாவசந்த், என்ன செய்வது? உங்களைப்போன்றவர்களை நினைத்துத்தான் இந்த பதிவு எழுதப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்த வருடத்திலாவது உங்கள் துணைக்கருகிலிருந்து புதுவருடத்தைக்கொண்டாட இப்போதே என் வாழ்த்துக்கள்.

12/25/2004 12:04:00 p.m.  
Blogger ROSAVASANTH said...

நன்றி டீஜே,பொடிச்சி! எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

"நல்லோர்கள் வாழ்வை காக்க. நமக்காக நம்மை காக்க ஹாப்பி நியூ இயர்! பா..பா..பா..பா.."
சிலோன் தமிழ் சேவை இரண்டின் ஞாயிறு மதிய டாப் டென் நிகழ்சி(யின் பெயர் நினைவிலில்லை)யில் பல மாதங்களுக்கு முதலிடத்தில் இருந்த பாடல்.

12/25/2004 08:38:00 p.m.  

Post a Comment

<< Home