@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Friday, November 12, 2004

அமெரிக்காவுக்குச் சவால் விடுதல்

(2)

நிறையப் பேர் நினைக்கினம், பேச்செண்டிறது ஒரு மைக் கிடைச்சோண்ண நிகழ்ற எண்டு. இங்ஙனேக்க சொற்பொழிவுகள் வெகு அபூர்வம்தான் என்றாலும் அப்பேர்ப்பட்ட அவஸ்தைகள அனுபவிச்சதுண்டு (ரொறன்ரோ வரும்போது நிச்சயமாக அனுபவிக்காமல் போனதில்லை). நீட்டி முழக்கி அப்பா, அப்பப்பா, சுரத்தே இல்லாமல் எப்படித்தான் பேசுகிறார்களோ.
முதுகு நோவு, தலையிடி, கால் விறைப்பு, பைத்தியம் பிடிக்கிறதிற்கு முதல் படி என்று இடையில எழுந்து போகிற வெளிப்படைத்தன்மை இல்லாததால் (அவர்கள் மனம் நோகுமாம்) நிறையவே சிரமம்தான்.

பேச்சு ஒரு மைக்குக்கு முன்னால நிகழ்ற விபத்து எண்டிறத ரொறன்ரோச் சூழல்ல தொடர்ந்து நிரூபிச்சு வாறவர் திரு. சாமி அப்பாத்துரை. அப்படியே சாஷ்டாங்கமா அவர்முன் விழத் தயார், ஒரே ஒரு சொற்-பொழிவு, போதும், சென்ம சாபல்யம் அடைய, அவரை விஞ்ச யாரும் இல்லை! சற்றே மிகையோ தெரியாது. ஆனால் திரு. துருவசங்கரி அவர்களின் என் மொழியின் கதை என்ற நூலுக்கான விமர்சனக் கூட்டத்தில் நூலைத் தவிர மிச்ச எல்லாவிடயங்களையும் பேசினாரே, ஐயோ, என்ர குரவாயூரப்பா, அதுவரை நான் பார்த்தேயில்லை இப்படியொரு அ! கோரத்தை! அவர் நு}லின் துறை சார்ந்தவராக (மொழித்துறை) இல்லாதிருக்கலாம், ஆனால் அவரது வாயில் சரஸ்வதி நிரந்தரமாக குடிகொண்டுவிட்டாள், சொற்கள் அவர் வாயில் களிநடனம் புரிவதென்ன, அல்லது அவர் சொற்கள் ஆலே களிநடனம் புரிவதென்ன, கடவுளே தொடர்ந்து பல நிமிடங்கள் மூச்சுவிடாமல் பேசினால் (அந்த நேரத்தையும் ஏன் விட வேண்டுமாம்) ஒன்றுமே ஆகாதா! எவ்வளவு மணிநேரம், ‘விசயத்துக்காகக்’ காத்திருப்பது? விசயம் -அது- வருமா வராதா?
போதாக்குறைக்கு ஒரே சொல்லை அவர் விதம்விதமானய் சொன்ன அழகிருக்கே, ஐயகோ ஐயகோ, ‘நிட்சயமா சொல்லுவேன், நிட்சயமாக, நிச்சயமாய, நிட்-சயமாக...” அம்மா! அவ்வளவுதான் எழுந்து ஓடி வந்துவிட்டோம். (அந்தக் கடுப்பில எழுதினதுதான் முதல் வரிகள்). தன்பாட்டில், அவர் எதையாவது சொல்லட்டும், ஆனால் மைக் முன் வேண்டாமே! பலருக்கு இந்த அவை நாகரீகம் இருப்பதாய்த் தெரியவில்லை.

மிகச் சின்னவயசில பெட்டையிட தகப்பனார் மரக் கதிரையின் கரைப் படிகள் இரண்டிலும் பெட்டை சக புத்திரரை இருத்திவைத்து, எத்தகைய போராட்டக் கவிதைகளாக இருந்தாலும், கையைக் காலை உயர்த்தி அழிச்சாட்டியம் பண்ணாமல் (அப்படி அவர் செய்திருந்தால் அப்பருக்கு ஏதோ வருத்தம் என்று பெட்டையும் பெட்டை சக புத்திரரும் அயர்த்துப்போயிருப்பார்கள், செய்வதறியாமல்!), கவிதைகள் சொன்ன விதம், இதமாக இருந்தது. அதனால் மட்டுமே அந்தக் கவிதைகளை இன்றும்கூட மறக்க முடியவில்லை என்று தோன்றுகிறது.

அந்த பழக்கம் பின்னர் இங்கு வானொலிகளில் வருகிற நபர்கள் குரல் உயர்த்தி முழங்கி, ‘ஒரு மாதிரி’ கவிதைகள் சொல்லுகையில் நமட்டுச் சிரிப்புடன் அதை ரசிக்கவிடாதிருந்திருக்கின்றது.

பேச்சு ஒரு வசீகரமான விசயம், மொழியை தமது இசைப்பில் வளைத்து, அதூடாக கேட்போரை வசீகரித்தல் அத்தனை எளிதல்ல. தனியே கத்துதலும் குரல் உயர்த்துதலும் அல்ல பேச்சு. உண்மையான பேச்சாளிகள் ஒரு வசீகரம்.
எந்த ஊடகங்களிலோ மேடையிலோ, யாரேனும், தமிழ் தமிழ் என்று கத்தினால் அவள் கொட்டாவி விட்டுட்டு நித்திரைக்குத்தான் போவாள். மாறா, உணர்ச்சிகரமாக அதையே ‘தமிழுக்கு உயிரென்று பேர்’ என்றால் ஆள் காலி. (இப்படி எல்லாருக்கும் தோதா ‘பிரச்சாரம்’ நடந்தெண்டுதானே இருக்கு.)
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சென்சிற்றிவ் ஆன விசயங்கள் இருக்கும். அத மோந்துபிடிக்கிறவர்கள் சிறந்த பேச்சாளிகளா இருப்பார்கள். இப்படி என்னைக் கவர்ந்த ஒராளப் பற்றித்தான் எழுதப் போறன்: அந்தக் காலத்தில பெட்டையிட பெரியப்பா காறன் ஒருத்தர் துபாயில இருந்து வந்திருந்தார். அவர் அங்கிருந்து உடுப்புகள், வீடியோக்கள், தமிழ் சினிமாக்கள், இசை நிகழ்ச்சிகள், கார்ட்டூன்கள், சென்ற்ருப் போத்தில்கள் -அதுவும் சின்னச் சின்ன குப்பிகளில்- எதச் சொல்வது எத விடுவது? அந்த றேஞ்சில நிறைய சாமான்கள் கொணர்ந்திருந்தார்.
அதில ஒன்று ஒரு பென். அத அண்ணாக்காரங்கள் இரண்டுபேரும் பாக்க விடுகினம் இல்ல. அதென்னெண்டா அந்தப் பென்ன நிமித்தி வச்சிருக்கேக்க ஒரு பெரிய பெட்டை ஒருத்தி நீச்சல் உடை போட்டென்று அதுக்குள்ள நிக்கிறா, அவையள் அந்தப் பென்ன கீழ சரிச்சா அந்தச் உடையும் கொஞ்சம் கொஞ்சமா மேல மேல போய் கடைசியில ஒண்டாக் காணமப் போயிருது. இத காட்டினா சின்னப் பெட்டை (நான்தான்) கெட்டிருவாளாம். அண்ணைமார் கூத்தில வெறுத்துப்போய் எப்பிடியோ அந்தக் கண்ணறாவியைக் கண்டபடியாத்தான் இப்பிடி இண்டைக்கு விலாவாரியா எழுத முடிஞ்சுது. (இத யோசிச்சானுகளா அவன்கள்) இல்லாட்டி அதொரு பெரிய மர்மமா என்ர வாழ்க்கையில கிடந்திருக்கும். நல்லதாப் போச்சு.

விசயத்துக்கு வாறன், அப்படி அந்த பெரியப்பாக் காறன் கொண்டந்த சாமான்களுக்குள்ள தமிழ்நாட்டுத் தலைவர்களோட ஈழப்போராட்ட ஆதரவு மேடைப் பேச்சு ஒலிநாடாக்களும் அடக்கம். அப்ப கொழும்பில இதுவள எல்லாம் காணுறது பெரிய விசயம் (இப்பவும் அப்பிடி இப்பிடித்தானே?). புலிப்படம் போட்ட கலண்டர வச்சிருக்கவே என்ர சித்தப்பாக்காரன் ஒருத்தர் பயங்கரமாய் பயப்பிட்டவர் (பிறகு அத ரகசியமா கிழிஞ்செறிஞ்சாச்சு).

இப்பப்போல இந்த சக்தி hPவி இத்தியாதிகள் வர இல்ல.
அப்பிடி ஒரு பின்னணியில, சனி ஞாயிறுகள்ல ரூபவாஹினி மனசுவச்சுப் போடுற தமிழ் நிகழ்ச்சியளான -பொன்மாலைப்பொழுது, முத்துச் சரம்- போன்றனவையைப் பாத்தெண்டு போன அமைதியான வாழ்க்கை ஓட்டத்தில, ஒருநாள், பெட்டை பட அறைக்குள்ள இருந்து தானும் தன் பாடுமா புத்தகம் படிச்செண்டு இருந்தவள். அப்பத்தான் அது அவள்ட காதில விழுது. மெய்சிலிர்ந்து திக்குமுக்காடிப்போய் குந்தியண்டு இருந்தாள். அந்தக் குரல் பெலத்தண்டே இருந்துது: ‘எமது பெண்களை அங்கே கற்பழித்தபோது, நாங்கள் என்ன செய்தோம்~ ‘அங்கே எமது பெண்களை அவர்கள் கற்பழிக்கிறார்கள்~ ‘தமிழர்களே நீங்கள் என்ன செய்கிறீர்கள்’ அப்பா! பெட்டைக்கு அசைய முடியேல்ல. உணர்ச்சியெண்டா அப்பிடி ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பு... இல்லப் பிளம்பு! . இல்ல வேற ஏதாவது... என்ன உணர்ச்சியடாப்பா அது! பெட்டை அந்தக் கொழும்பு பக்கத்தில அப்பிடி எல்லாம் பேச்சுக்கள அவள்ட மொழியில கேட்டதே கிடையாது. அறவே இல்லை. கிராமத்தில இருந்து வந்து இரண்டு வரிசமோ என்னமோ ஆகிக்கொண்டு கிடக்கு அப்ப.
எனக்கு விதிர்விதிர்த்து(!)ப்போச்சு. யார் பேசிறது? ஏன் எங்கட பெண்கள ‘கற்பழிக்கினம்’?
பேசினது வைக்கோ எண்டு அண்ணன் சொன்னான். யாரா இருந்தா என்ன? பெட்டைக்கு சுரத்தை வந்திற்றுது. இல்லாட்டில் கொழும்பில பராக்குப் பாத்தெண்டு திரிஞ்சுகொண்டிருந்த நான், சும்மா கிடந்த தமிழர்கள -பகலிலும்கூட- ''எழுப்ப” வெளிக்கிட்டிருப்பனா? ஆம். வீறுகொண்டெழுந்த நான் அண்டைக்கே மறத் தமிழன்களுக்கு காலம் காலமா அவங்களுக்கேயுரிய கடமையை உணர்த்த ஒரு கவிதை (அப்படித்தான் நினைத்தேன்) எழுதினன். சுப்பர்க் கவிதை (இதுகளில எல்லாம் தன்னடக்கம் கூடாது).
‘தமிழா! எழுந்திரு.”
“உன்னினப் பெண்கள் - அங்கே
கற்பழிக்கப் படுகையில்
நீ தூங்கிக்கொண்டிருக்கிறாயே,
தமிழா எழுந்திரு’
இப்பிடிப் போன அந்தக் கவிதை(!) உச்சம் பெற்றது ஒரு காவிய ஒப்பீட்டில்தான்! உபயம்: மகாபாரதம்! அப்ப ரூபவாஹினியில் இரவு 9 மணிக்கோ என்னவே மகாபாரதம் போனது. தினமுரசு அதன் மொழிபெயர்ப்பை ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னமே பேப்பரில போட்டிரும். சின்னன்கள் எல்லாம் அதப் பாத்திட்டு றெடியா இருக்குங்கள். திரையில அவையள் வாயசைச்சா இவையளுக்குத் தெரியும் கிருஷ்ணர் என்ன சொல்றார், தர்மர் என்ன சொல்றார், என்ன நடக்கது, என்ன கதைக்கினம் எண்டு. இதோட இன்னொரு குசும்பென்னெண்டா எதாவது சந்தேகம் எண்டா பெட்டையிட்டத்தான் கேப்பினை (பெட்டைக்கு முழுதும் பாடமா இருக்கும் ஆக்கும்). ஆகா. ஞானம், ஞானம். புராணத்தில் நிபுணியாகிவிட்டவளாய், அந்த ஆகர்ஸத்தில முத்தாய்ப்பாய்ப் பெட்டை எழுதினாள் ஒரு வரி, அசத்தலா.
அது:
‘அன்று துச்சாதனன் திரௌபதியின் சேலையை உரிய
மானம் காத்தான் கிருஷ்ணன்
உங்கள் இனப் பெண்கள் மானம் காக்க
தமிழனே எழுந்திரு’
எண்டு.
அண்டைக்கு இவள் இரவிலதான் என்றில்லாமல், பகல்களிலும் அவங்களை எழுப்போ எழுப்பெண்டு எழுப்பியும் அவங்கள் எழும்பேல்ல. வெறுத்துப்போன இவள் அந்த கெசற்ற அண்ணா போடேக்குள்ள எல்லாம் கண்ணீர் மல்கிக்கொண்டு துயரத்துடன் திரிந்தாள்.

அப்படி ஒரு வசீகரம் மிக்க பேச்சைப் பிறகு பெட்டை ஒருக்காலும் கேக்கேல்ல. அல்லது பின்னாளில் அப்படியொரு மயிர்க்கால்கள் புடைக்கும் வீறுகொண்டு எழும் உணர்வற்றுப் போய்விட்டது. எங்கையோ வேற தூரத்துக்கு வந்தாப்பிறகும், ரத்தம் சதை கொண்ட அவளைப்போன்ற பெட்டையளும் பெடியளும் சிதறி மடிவதை ‘நெருப்பாகி காற்றாகி” என்று கவிதை பாட முடியவில்லை. வெறுமனே கத்துகிற மனிதர்களோடு இணங்கவும் முடியவில்லை. அங்கையும் இல்லாம இங்கையும் இல்லாம, ஒத்தோடவும் ஏலாம, இறுதியில, பெட்டையோட கதை சோகக் கதையாப் போயிற்று.

22 Comments:

Blogger ana-avanna said...

ஹலோ பொடிச்சி,

உங்களது template ஐச் சற்றுச் செதுக்கினீர்களென்றால் படிக்க மிகவும் சுலபமாக இருக்கும்...தொடர்ந்து படிக்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று என்பதால், 'சுலபமாக' என்பதில் என் சுயநலமும் அடங்கியிருக்கிறது எனலாம்....நேரமிருந்தால் சற்றுச் சீராக்க முயலவும்....

11/13/2004 11:09:00 a.m.  
Blogger sudarakan said...

y.gobalachamy is my fevarat speakar. he can buatyfully and atractively co-ordinates his thoughts without any confuse(to him or to us) more than one hour. i got two chances to get a direct expriance in his 'speach rain'. one of these spechs is one of the imporatnt speches in his life because after that spech, when he retern from amrica to india he arrested in the air port.

11/13/2004 08:05:00 p.m.  
Blogger டிசே தமிழன் said...

உண்மைதான். இங்கே கனபேருக்கு மைக்கை கண்டால் எல்லா மழையும் பேரிரைச்சலுடன் கொட்டும் (எச்சிலும் கூடத்தான்). ஒருக்கா இப்படித்தான் இந்த சாமி அப்பாத்துரை எங்கட Uni functionற்கு வந்தவர். ஐந்து நிமிசம் மேடையில் யாராவது பேசினாலே குழம்பத்தொடங்கிவிடும் எங்கட பெடியளுக்கு இவர் அறுவையைப்பற்றிச் சொல்லத்தான் வேண்டுமா? நாங்கள் நெளிந்து குழைந்தாலும் மனுசர் நிப்பாட்டுவதாய் காணோம். பிறகு கடைசியாய் நல்லாய் விசிலும், கரவொலியும் கொடுத்து தான் அவருடைய சண்டமாருத பேச்சை முடிவுக்கு கொண்டுவரவேண்டியதாயிற்று.

11/13/2004 08:31:00 p.m.  
Blogger சுந்தரவடிவேல் said...

நல்ல முசுப்பாத்தியாவும் எழுதுறநீங்கள்:)

11/14/2004 04:53:00 a.m.  
Anonymous Anonymous said...

மன்னிக்கவும். எனக்கு ஒரு சந்தேகம், உண்மையிலேயே தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்களா? அல்லது இது மிகைப்படுத்தப்பட்ட பேச்சா? - ரா. ராஜேஷ் ஜெப அன்பையா

11/14/2004 12:27:00 p.m.  
Anonymous Anonymous said...

Finally, I found why few of your texts are messed up in Firefox: it is because you used "text-align: justify;" for some texts. Please don't use "justify", better leave it to the default or set it to "left".

-R. Rajesh Jeba Anbiah

11/14/2004 12:38:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

This comment has been removed by a blog administrator.

11/14/2004 07:47:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

நன்றி ராஜேஸ்!
template ஐ செதுக்கமாறு ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். சும்மா சொன்னாலே புரியாது, இதில் 'செதுக்குவது' என்றால் என்னடா என நினைத்துக்கொண்டிருந்தேன். நீங்கள் சொன்ன மாற்றங்களைச் செய்யலாம். அந்த நண்பரும் படிக்க என்ன சிரமம் என எழுதினால் உதவியாய் இருக்கும். template ஐ முழுமையா மாற்றிறதெண்டா ரொம்ப சுலபம்! செதுக்குவது no clue ;-)
--
இனி உங்களுடைய கேள்விக்கு: இலங்கையில், இலங்கையின் இராணுவம், இந்திய இராணுவம் *'கற்பழித்ததை (பாலியல் வன்முறை)' - வீடியோப் படங்களில் சாட்சியாக எடுக்கவில்லை என்பதற்காக- இல்லை என்று சொல்லலாமா? யாபரும் அறிந்த ஒன்று இதற்கு சாட்சி என்ன தேவை. என்ன சார் இப்படிக் கேட்டிட்டிங்க? இத்தகைய விடயங்களில் 'மிகை' எங்கு வந்தது. அரசியல்வாதி பேசுவதை விடுங்கள். நடந்தவை யாபரும் அறிந்தவை. ஒரு இராணுவம் அந்நிய பிரதேசத்தில் நுழைகிறபோது கைவைக்கிற முதல் இடம் பெண்கள்தானே?
ஆனானப்பட்ட 'மனித உரிமைகள்' பேசிற அமெரிக்காவின் விடயங்களே தெரிய வர எவ்வளவு காலம் எடுக்கிறது- ஈராக் கைதிகளை நடத்திய விதம் இத்தியாதி. கேவலம் இலங்கையில், அதிலும் ஈழமென்று சிறுபான்மை இடத்தில் இடம்பெற்றதை/இடம்பெறுவதை இட்டு யாருக்கென்ன வந்தது?! 'மிகையா' என்றெல்லாம் கேட்டு நொந்துபோனவர்களை 'ரென்சன்' படுத்தாதீர்கள் :-(
நீங்கள் வம்புக்குத்தான் கேட்டீர்களோ தெரியவில்லை. ஆனால் இதிலெல்லாம் என்ன சார் மிகை இருக்கிறது. குஜராத்தில் தாயிற்கு முன் மகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தவில்லையா. 'அப்படி நடந்திருக்காது' 'சற்று மிகையா இருக்குமோ' என்று யாரும் சொல்வார்களோ. இராணுவம் = வன்முறை (எல்லவகையானதும்)

***கற்பழிப்பு என்ற பதமே தவறானது. கற்பே கற்பிதம். அதில் அதை எங்கு அழிப்பது? இணையத்திலும் இதைக் கவனிக்க வேண்டும்

11/14/2004 07:52:00 p.m.  
Anonymous Anonymous said...

First of all, thanks a lot for answering my question. Apologies, if my question hurts you in anyway. I asked about it as I'd thought that you might be knowing the real "truth". I was aware of the cruelty towards Tamils, but I also had the idea that some people are been politically benefited out of such talks.

Regarding the template, few text blocks overlap in Firefox (http://www.mozilla.org/products/firefox/ my favorite browser, it is fast and safer than Internet Explorer). You may want to set a better stylesheet for your blog (with small font size, bordering, etc). I never used blogspot, but I hope there must be a way to do that (perhaps readymade templates?).

Incidentally, your language--Ceylon Tamil is interesting; especially, "rension" for tension(?) Also, seems to miss "sha" so often in விஷயம் ராஜேஷ்…

Peace to you. - R. Rajesh Jeba Anbiah

11/15/2004 12:14:00 a.m.  
Blogger சன்னாசி said...

This comment has been removed by a blog administrator.

11/15/2004 05:23:00 a.m.  
Blogger sudarakan said...

this message to R.Rajes Jeba Anbaia
y.kopalachami(yaico)is not the person(politician) as you think. he never ever hesitates to give his support and voice to tamils(eelam). whether it makes negative benefits to his politics or not. some time, it gave him negative effects too. you suppose to know that he arrested by tamilnadu police because of his support to tamils. however, he didn't stop talking.

11/16/2004 12:39:00 p.m.  
Blogger மு.மயூரன் said...

பொடிச்சி,
இப்போது உங்கள் தளம் பார்க்க நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

அனால் mozillaa fire fox உலாவிமூலம் பார்க்கும்போது எழுத்துக்கள் குழப்பமாக இருக்கின்றன.
இதற்கு ஏதாவது செய்யுங்களேன்.

11/17/2004 09:01:00 a.m.  
Anonymous Anonymous said...

sudarakan, AFAIK, வைகோ is actually வை.கோபால்சாமி (initials combined); but many people seem to use Y. Gopalsamy mistakenly. I'm not against to Vaiko--I must say that I also like his speeches and politics. At the same time, I understand that he is quite extremist and dogmatic. I have a strong opinion that no one needs gun to gain powers.

By the way, why asked such question is that, many orators used to handle exceptional metaphors. So, the question was: was it a physical rape or not. Greetings. -- R. Rajesh Jeba Anbiah

11/17/2004 10:40:00 a.m.  
Anonymous Anonymous said...

மு.மயூரன், it seems to be a bug in Firefox. I have reported this bug https://bugzilla.mozilla.org/show_bug.cgi?id=270012 The quick solution is to avoid "text-align: justify" - R. Rajesh Jeba Anbiah

11/17/2004 10:45:00 a.m.  
Blogger sudarakan said...

This message to Rajes Jefa Anbaya
You wrote that "I have a strong opinion that no one needs gun to gain powers"
If anyone deliberately controls you police also support him, there are no other ways but take the gun to over come from their controls. Eelam people had enough tolerances since lanka’s independent, more than 40 years. At the time, we just talked to the government without any violence. In contrast, government treats us as an enemy. They used violence (use gun) first on unarmed civilians to control people's demand for the rights. We can't tolerate anymore. Do you think a rap can happen by accidentally? 1000s of girls, women and children are raped by government troops. At this point, what is your idea to stop all their barbaric actions and get our rights?
Can I say one thing? If Tamil Nade and tamils want to get a good position, choose Gopalachamy as next CM. He will be a best CM than Karunanide, Jeyalalithaand etc.

11/17/2004 06:03:00 p.m.  
Anonymous Anonymous said...

sudarakan, I really understand your points and I really feel sorry for such situation. But, being a kind of Secular humanist (http://en.wikipedia.org/wiki/Secular_humanist), rationalist (http://en.wikipedia.org/wiki/Rationalist), and pacifist (http://en.wikipedia.org/wiki/Pacifist) for about last 3 years (since my graduation), I still/strongly believe that guns cannot achieve anything. This is my personal opinion; please don't get offended.

BTW, I have noticed that, people who support violence are the one who is far away from the scene and who isn't dare to take gun actually. (Sorry, if you're NRT). I have also noticed that anyone who takes the gun really wants to put it down--but because of the circumstances they couldn't. I think, at least you'll accept the fact that your guns didn't help you for 40 years (as you said).

Regarding your remark about Vaiko: yes, he may become a CM. But, I guess people won't vote for him at large. The reason is quite simple, he seems to fight and promote extremist ideas for simple issues that can be solved peacefully.

Peace to you. --R. Rajesh Jeba Anbiah

11/20/2004 12:33:00 p.m.  
Blogger sudarakan said...

Hi Mr Rajes you wrote that "I have noticed that, people who support violence are the one who is far away from the scene and who isn't dare to take gun actually". I agree with one thing that I am living very far from the situation. However, there are some dare people started the war. They succeed on their way. For example, government step down now to talk them (about peace & rights) and treat them equally because of LTTE’s equal or domain military strength over government troops. I just accept that people’s way (factual). If I didn't do this, it means I insult them. That's it. Further more we support them financially.
Then you wrote: “that your guns didn't help you for 40 years (as you said).” I think you didn’t understand clearly what I wrote (sorry to not write clearly). I wrote that since we indipendet from Britice government, our politicians just talk to the government around 40 years. After 40 (may be 30) years, people took the gun against government. Then, they acheved good results as I said on first para.

sudarakan

11/20/2004 06:03:00 p.m.  
Anonymous Anonymous said...

sudarakan, you may be right. But, I understood that guns actually worsened the situation until Norway intervention.

If what you say is true (ie, power of guns), it must be a bad example in the world history. After reading your message, I'd thought of doing something... so I searched for Human Rights related organizations to lodge a complaint. But, to my surprise, when I visited one Human Rights site, the first news I've seen is http://www.hrw.org/english/docs/2004/11/10/slanka9651.htm

I wish to visit those places so that I witness the truth. Peace to you. - R. Rajesh Jeba Anbiah

11/23/2004 09:08:00 a.m.  
Blogger sudarakan said...

This comment has been removed by a blog administrator.

11/23/2004 08:34:00 p.m.  
Blogger sudarakan said...

This comment has been removed by a blog administrator.

11/23/2004 08:42:00 p.m.  
Blogger sudarakan said...

This comment has been removed by a blog administrator.

11/23/2004 08:51:00 p.m.  
Blogger sudarakan said...

Hi Rajes,
Thank you for your reply. I hope you are fine.
I already guessed that which your sources are. Most of the reports like you show me are written by pro government ‘agents’ (money and something else also involve here.) because government can do anything. See U.S.A and Iraq conflict. The fact is 1000s of children are lost their parents and guardians by government forces. They didn't get shelter and food. So tigers opened some children care centers. It offers shelter, food and education. This matter also confused with child recruitment by pro government ‘agents’. I agree with one of your points. At the beginning of the war, no age limits were applied on the people, who voluntarily go to join to librarian movements. Then, uniceb and some other world organizations involved in the scene. Now, age limit applies on joining Ltte. Further more, it is never happened that Ltte recruit members forcibly. It is very hard to identify whether the news is right or wrong. For example, sometime a reports issued by a tamil name organization called Jaffna University Teachers union. Do you know what is the surprise with this. None of the organizations runs by this name in the university. Some of the government 'agents' do this nonsense issues from out of the country. Further more, The Hindu news paper and Thuklack also deliberately do the propaganda against tamils' liberation war because of bramine back round of hindu Ram, and thukluck Sho.. I think medias of theravidar kazhakam release the right news. If you want, see regularly the web sites www.tamilnet.com, www.tamilnatham.com and www muzhakkam.com. Finally, very important information is here that each of the Novembers 27th our national leader honor V.prabakaran gives very important message when he gives memorial speech of the sacrifices made by freedom fighters (Heroes Day.) Whole world is expecting that day. The day is getting closer. You can read that on above websites.

sudarakan

end notes: 1000s of childern killed by government troops in schools, churchs, temple and etc. try to find that on humen righs wepsites. you will understand how hard is finding the truths

sudarakan


THANK YOU PEDDAY(let us to use)

8:42 PM

11/23/2004 08:54:00 p.m.  

Post a Comment

<< Home