@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Wednesday, March 30, 2005

Immortal Technique இன் காதல் பாடல் ஒன்று



உண்மையை Hip-hop வடிவில் கொணருகிறோம் என்கிற கோசத்துடன்
வெளிவருகிற Immortal Technique இன் சுயவரலாறு சுருக்கமாக, (வரப்போகிற மொழியைப் ‘பெயர்ப்பு’ பிடிக்காவிட்டால் இங்கு சென்று அசலை படித்துக்கொள்ளுங்கள்!) இணையத்தளத்திலிருந்து:
80களில் பேருவில் (Peru) உள்நாட்டுயுத்தம் வெடித்தபோது, அமெரிக்காவிற்கு கொண்டுவரப்படடவர் இமோட்டல் ரெக்னீக். மூன்றாமுலகத்தின் ஏழ்மையிலிருந்தும் நாட்டுப் பிரச்சனைகளிலிருந்தும் தப்பினாலும், இவர் வாழ வந்த நியூ யோர்க் நகரம் இன்னொருவிதமான பிரச்சினைக்குரியதாய் இருக்கிறது (குழு வன்முறை). இங்கு இளம் ரெக்னீக் ஹிப் ஹொப் கலாச்சாரத்தால் கவரப்படுகிறார். பள்ளி வகுப்புகளை கட் பண்ணிவிட்டு வன்முறையான நடத்தைகளிற்காக பலமுறை கைதுசெய்யப்படுவதில் முடிந்தாலும், உயர்பாடசாலை படிப்பு முடித்து மாகாணப் பல்கலைக்கழகத்தில் படிக்க ஏற்றுக்கொள்ளப்படுகிறார். துரதிர்ஸ்டவசமாக, நியூ யோர்க் நகரத்தில் சாதாரணமான விடயமான வன்முறைச் சூழல், பள்ளியில் அவரை பிற கறுப்பு சகோரர்களுடனோ ...இனவாதமான மத்திய அமெரிக்காவின் பின்நோக்கான மக்கள் தொகையோடோ மேலும் வன்முறையான மோதல்களுக்கு இட்டுச்சென்றது.
... multiple assault charges இல் பிடிக்கப்பட்டு, சிறையிருப்பை தவிர்க்கப்படமுடியாததென உணர்ந்தபோது, தனது அதுவரையான வாழ்வின் வன்முறையான அனுபவங்கள் குறித்ததும், தாய்பூமிக்குத் தான் திரும்பிச்சென்றபோதுகளில் கண்ட அங்குள்ள போராட்டத்தையும் பற்றியதுமான தனது எண்ணங்களை எழுத ஆரம்பிக்கிறார். தனது பாட்டனாரிடமிருந்து வந்த ஆபிரிக்க பின்புலவேர்களையும் உள்வாங்கிக்கொள்கிறார். அதனூடாக இனவாதத்தின் மூலகத்தையும் அது குறித்த லற்றினோ கலாசாரத்தின் அறியாமையை/அலட்சியத்தையும்; -அது அடக்கப்படுகிற மக்களை பிரிப்பதூடாக அவர்களைப் பிளவுபடுத்திவைத்திருப்பதை (separating oppressed people and keeping them divided)- விளங்கிக்கொள்கிறார்.
…தீர்ப்பாய் 1 - 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, நகரத்திலிருந்து ஆறு மணி நேரங்கள் தொலைவேயான பகுதியில் வைக்கப்டுகிறார். அங்கே படித்தும், ..., தனது எழுத்துக்களை ஒழுங்குபடுத்தியும் அவற்றை பாடல்களாய் உருவாக்கத் தொடங்குகிறார்.
parole இல் 1999 இல் வெளிவந்தவர் ...... வேகமாக நிழல்உலகமெங்கும் அறியப்படுகிறார்.
...மக்களை தன் பாடல்களால் கட்டிப்போடசெய்யக்கூடிய, அவர்கள் மீண்டும் பார்க்க விரும்புகிற, ஒருவராய் தன்னை வளர்த்துக்கொள்கிறார். அப்போதுதான் (வன்முறை) மோதல்கள் எப்போதும் மோதல்கள் மட்டும்தான் எந்தவிதத்திலும் இசையை உருவாக்குவதிலுள்ள வெற்றியுடன் தொடர்புடையவையல்ல என்றுணர்கிறார். தனது ஆர்வத்தை தயாரிப்புத்துறையில் திருப்பியவர், சிறையில் எழுதிய சில பாடல்களில் திருத்தங்கள் செய்து, அதை ஒரு ஆல்பமாக்குவதில் முனைப்பாகிறார்.
...ஆனால் பேர்போன இசைநிறுவனங்கள் வெகுசனரீதியாக ‘நட்பார்த்தமான’ நல்ல பிம்பமுடைய ஒருவரையே வேண்டுகின்றன. அரசியல் கருத்துக்களால் நிறைந்த இவரது hardcore street style உம் மரியாதையின்மையும் கடுமையும் நிறைந்த இவரது பாணியும் அவர்களுக்கு அசௌகரியமாய் இருந்தது. ரெக்னீக் battle circuit இலிருந்து விலகி தனது முதல் ஆல்பத்தை வெளியிட்டார்
…In the post 911 climate, as the music industry crumbled, Immortal Technique built on the truth with a hardcore brand of street politics.
இவரது இரு இசைத் தட்டுக்கள்: Revolutionary Vol.1 மற்றும் Revolutionary Vol.2.


பாடல்: You never know

இந்தப் பாடலை நான் எழுதுவதாகச்சொல்கிறபோது, அறையிலுள்ள வால் II, நீ தேர்ந்தெடுக்கிற பாடல், அவருடைய பாடல்களுக்குள்ளேயே ‘the most non-political song‘ எனுகிறான்.

சில மாதங்களுக்கு முன் இவர்கள் எனக்கு அறிமுகப்படுத்திய பாடல் இது, அதுவும், ‘கடைசியில அழுகை வந்தாலும் வரும்’ ‘நீ அழுதாலும் அழுவாய்’ என்ற பலத்த முன்னறிவித்தல்களோடு!
இந்த பாடகன் நேசித்த ஒரு பெண்ணொருத்தியைப் பற்றினது...


[1]
She was on her way to becoming a college graduate
Wouldn't even stop to talk to the average kid
The type of latina I'd sit and contemplate marriage with
Fuck the horse and carriage shit, her love was never for hire
Disciplined, intellectual beauty's what I desire
Flyer than Salma Hayek or Jennifer Lopez

(அவள் ஒரு கல்லூரிப் பட்டதாரியாவதற்கான முயற்சியில் இருந்தாள்
ஒரு சராசரி பையனுடந்தானும் நின்று கதைத்தாள் இல்லை.
சேர்ந்திருந்து, திருமணம் செய்துகொள்வது பற்றி நான் யோசிக்கக்கூடிய வகை லற்றினோ இவள்தான்
...அவளுடைய காதல் ஒரு போதும் விலைக்கிருந்ததில்லை
ஒழுங்குமிகுந்த, புத்திஜீவித அழகிதான் நான் வேண்டுவது-
சல்மா ஹயேக் யெனிபர் லோபிளஸ் போன்றோரைவிடவும்)

Everyone told me, kickin' it to her was hopeless
At first I just thought, she didn't mess with broke kids
The thug niggaz always talking about, how they smoke kids
But the rich-sniff-coke kids got no play
"I'm not even interested" is what her body language would say
Everyone around the way, gave up trying to get in it
It didn't matter how good your game was, she wasn't with it

(எல்லோரும் சொன்னார்கள் அதை அவளை நோக்கி நகர்த்துவது அர்த்தமற்றதென
முதலில் நான் நினைத்தேன் அவள் ஏழைப் பையன்களுடன் மெனக்கெடுவதில்லை என
...”எனக்கு ஆர்வம் இல்லை” என்பதே அவள் தோரணையாய் இருக்கும்
எல்லோரும் ‘அதற்குள்’ செல்லும் தம் முயற்சிகளைக் கைவிட்டார்கள்
உங்கள் நாடகம் எவ்வளவு சிறப்பானதாய் இருந்தாலும், அவள் அதனுடன் இல்லை)

On the block, bitches was jealous, but wouldn't admit it
Talk shit, and deny to everyone that they did it
'Cause they regreted the long list of niggaz that they let hit it
And no one ever gave them shit except McDonald's and did-dick
Smoking weed with thoughts of envy, whenever they lit it
She smoked intelligently and they bit it, always trying to copy
But when they tried to use her vocab, they sounded sloppy
She had a style, all her own, respectful and pure
I was sick in the head for her, and there wasn't a cure

(குடியிருப்பில் எல்லா வேசைகளும் பொறாமையுற்றார்கள், ஆனால் அதை ஒத்துகொள்ளவில்லை
கண்டதையும் கதைத்தபடி, தாங்கள் ‘அதை’ செய்தவர்கள் என்பதை எல்லோருக்கும் மறுத்தபடி... ஏனெனில்
தாங்கள் ‘அடிக்க விட்ட’ கறுப்பர்களின் நீண்ட பட்டியலையிட்டு அவர்கள் விசனமுற்றார்கள்
ஒருதரும் அவர்களை சட்டை பண்ணியதில்லை மக்டோனால்ஸ்ஐயும் அதைச் செய்த ‘குறி’யையும் தவிர.
பொறாமை எண்ணங்களுடன் கஞ்சா புகைத்தபடி...
அவளை கொப்பி பண்ண முயன்றார்கள், அதவர்களுக்குப் பொருந்தவில்லை

அவளுக்கென்றொரு பாணி இருந்தது
சுயமானதும் மரியாதைக்குரியதும் தூய்மையானதுமாய்…
அவளை எண்ணி என் தலைக்குள் காய்ச்சல் அடித்தது
அதற்கொரு மருந்துமும் இல்லை)

[பின்னணிப் பெண் குரல்- Jean Grae]

Don't you know that, time waits for no man
Not fate, it's all planned
I'm blessed just to know you
I've loved and I've lost just to hold you all night
Can't find, a reason why
God came, to you and I
If I had the chance again, I'd never let you go
Hold tight to your love, 'cause you never know

உனக்குத் தெரியாதா, காலம் யாருக்காவும் காத்திருப்பதில்லை
விதியென்றில்லை; எல்லாம் திட்டமிடப்பட்டுவிட்டது
உன்னை தெரிந்துகொண்ட மட்டுமேனும் நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்
...
எனக்காய் மறுபடி ஓர் வாய்ப்பிருக்குமானால்
உன்னைப் போக விடமாட்டேன்
உங்களுடைய காதலை இறுகப் பிடித்துக்கொளுங்கள் -
உங்களுக்கு ஒருபோதும் தெரியாது –பின் என்ன ஆகுமென்று

[2]
Her eyes are brown and beautiful, yet empty and sad
I used to talk to her occasionally, and she was glad
That I wasn't just another nigga trying to get in it
So every now and then we'd stop and talk for a minute
I didn't have a gimmick so the minutes turned to hours
On her birthday, I gave her a poem with flowers
Then I took her out to dinner after her cousin's baby shower
We talked about, power to the people and such
We spent more time together but it was never enough

(அவளுடைய கண்கள் மண் நிறமானைவை- அழகானவை
வெறுமை மிக்கதும் துயரம் நிறைந்ததுங் கூட
இருந் திருந் திற்றே அவளுடன் கதைத்திருக்கிறேன்
‘அதனுள்’ பூர விரும்புற
இன்னொரு கறுப்பன் நான் அல்ல
என்பதில் அவளும் நிம்மதியாய் இருந்தாள்
எப்பவாவது நேரங்கிடைக்கையில் அங்கிங்கு நின்று சில நிமிடங்கள் பேசிக் கொள்வோம்
என்னிடம் தந்திரம் இல்லை- ஆகவே அந்த சில நிமிடங்கள் மணித்தியாலங்களாயின
அவளது பிறந்தநாளிறகாய் பூக்களுடன் கவிதை கொடுத்தேன்
நாம் ‘மக்களுக்கான அதிகாரம்’ போன்றன பற்றி பேசினோம்
நிறைய நேரத்தை ஒன்றாக செலவிட்டோம் ஆனால்
ஒருபோதும் அது போதுமாய் இருந்ததில்லை)

I never tried to sneak a touch, or even cop a feel
I was too interested, in keeping it real
Perfectly honest and complete, she would always call me "carino,"
And never Technique, bought me a new book to read every 2 or 3 weeks
Forever changing the expression of my thoughts when I speak

(மறைவான தொடுகைக்கோ களவாகத் தொட்டுணரவே நான் ஒருபோதும் முயன்றதில்லை
அபாரமான நேர்மையும், முழுமையும்ஆய்
அதை இயல்பாய் வைத்திருக்க மிகவும் விரும்பினேன்
அவள் எப்போதும் என்னை "கறீனோ" என அழைத்தாள்
ரெக்னீக் என்று அல்ல.
இரண்டெல்லது மூன்று கிழமைக்கொருக்கால்
நான் படிக்க
புதிய புத்தக்தை வாங்கி வந்தாள்,
என்றென்றைக்குமாய், பேச்சில்
என் எண்ணங்களின் வெளிப்பாட்டை மாற்றியபடிக்கு)

It was because of her, I even deaded all of my freaks
She convinced me, to stop hangin' out on the streets
To stop robbin' and stealin', from people like you
Instead I took her out to the Apollo and the Bronxu
We sailed in Barrio (?) and the Metropolitan too
Got to the point when I was either with her or my crew
So I decided one day, to tell her my feelings was true
I couldn't live without her so I told her, facing my fears
But honey's only response, was a face full of tears
She could only sob hysterically, holding me tight
I tried to speak, but she wouldn't stop until I left sight
I felt like a moth who got himself too close to the light
Except I didn't burn, I turned cold after that night

...அவள் என்னை தெருவில் திரிவதிலிருந்து தடுத்தும்
உங்கள் போன்ற ஆட்களிடமிருந்து திருடுவதையும் நிறுத்தச் செய்தாள்
...
அவளுடன் அல்லது என் நண்பர்களுடன் இருப்பேன்
என்ற நிலையானது, ஆகவே
ஒருநாள் என் உணர்வுகளை சொல்ல முடிவெடுத்தேன்
அவளில்லாமல் என்னால் வாழ முடியவில்லை
என் பயங்களை முகங்கொடுத்தவாறே
அவளிடம் சொன்னேன் அதை - ஆனால்
அவளுடைய ஒரே பதில் கண்ணீராக இருந்தது
என்னை இறுக்கியபடி
அவளால் பயங்கரமாக விம்மத்தான் முடிந்தது,
நான் பேச முயன்றேன், ஆனால் நான் பார்வையிலிருந்து மறைகிறவரையில் அவள் அழுகையை நிறுத்தவேயில்லை
விளக்கிற்கு மிக அருகே போய்விட்ட விட்டிலைப் போல உணர்ந்தேன் - நான் எரியவில்லை என்பது தவிர.
அன்றைய இரவின் பின் நான் கடினமாகவிட்டேன்

[பின்னணிக் குரல்]

[3]
I went on with my life, college and my career
Ended up locked up like an animal for a year
Where the C.O.'s talk to you like they were the overseer
Then I got sent to the hole, when my exit was near
At night in my cell, I'd close my eyes and I'd see her
Hold her close in my dreams, but when I woke she disappeared
Just an empty cell until the state gave me parole in the summer

என் வாழ்க்கையைத் தொடர்ந்தேன்
கல்வி வேலை என.
ஒரு வருடம் ஒரு மிருகத்தைப்போல பூட்டப்படுவதில் முடிந்திருந்தேன்
--
என் சிறையில் இரவில் என் விழிகளை மூடுகையில் அவளைக் காணுவேன்
கனாக்களில் மிகவும் நெருக்கமாக அவளைப் பிடித்திருப்பேன் - ஆனால்
நான் விழிக்கிறபோது அவள் போயிருப்பாள்
ஆக ஒரு வெறுமையான சிறை, அந்தக் கோடையில்
மாகாணம் எனக்கு பறோல் வழங்கும்வரையில்

came back, in tact and on track
But the fact of the matter, is I still felt cold
Even after my mother, hugged me, cryin' at home
My real niggaz would catch me thinkin', out of my zone
Fuckin' lots of different women, but I still felt alone
Relatively well-known around the New York underground
But I kept thinking of her and how we used to be down
The sound of her voice, and the beautiful smell of her hair

மீளத்.. தொடர்ந்தேன்
ஆனால் உண்மையில் இன்னும் நான் கடினமாய் உணர்ந்தேன்
அம்மா என்னை அணைத்துக்கொண்டு வீட்டில் அழத பிற்பாடுங் கூட
...
வேறு வேறு பெண்களை ஓ***படி, நான் அப்போதும் தனிமையை உணர்ந்தேன்
நியூ யோர்க் நகர நிழல் உலகில் நன்கு அறியப்பட்டவனாக

தொடர்ந்து நினைத்துக்கொண்டிருந்தேன் அவளை
அவளது குரலில் ஒலி, அவளது முடியின் அழகான வாசனை

Though gone physically, somehow it was still there
I had to do something, because the shit was too much to bear
So I went and visited the building where she used to live
The world looks a lot different after you do a bid
The way your life done changed
While primitive minds (are) still stuck in the same game
Like her cousin who was on the corner slangin' cocaine
Stepped in the lobby and tapped the button next to her last name
Her mom buzzed me up and hugged me up, like a mother oughta
But her facial expression changed, when I asked about her daughter

நேரே இல்லாமல் இருந்தாலும், எப்படியோ இன்னும் இருந்தது
என்னால் தாங்கமுடியாதிருந்தது
ஏதாவது செய்யத் தோன்றிற்று
அவள் வாழ்ந்த இடத்திற்கு நான் சென்றேன்
...
அவளைய தாய் என்னை அணைத்துக்கொண்டாள்,
ஆனால் அவள் முகம் மாறிப்போனது, மகளைப் பற்றிக் கேட்டபோது

[பின்னணிக் குரல்]

[4]
She told me that there was a note for me, that was left behind
She had left it there waiting, for such a long time
I was inclined to ask about it but she brought it up first
I saw a tear swelling up in her eye, and then she cursed
She told me where the letter was and I started thinking the worst
Reversed my position, stepped over and opened the door
And sure enough there was an envelope with my name on the floor
"Nobody loves you more than me carino" is what the letter said

அவர் சொன்னார், எனக்காய் ஒரு கடிதக்குறிப்பு இருக்கிறது என்று,
அது விடப்பட்டிருக்கிறது,
அவர் அதை மிக நீண்டகாலம் காத்திருக்க விட்டிருக்கிறார்,
அதைப் பற்றி கேட்க விரும்பினேன், ஆனால் அதைத் சொன்னபோது கண்ணீர் பொங்கியது,
...
"என்னைப்போல யாரும் உன்னை விரும்பவில்லை கறீனோ" - இதுதான் அந்தக் கடிதம் சொன்னது

இந்தக் கடிதத்தை நீ படிக்கிறபோது நான் இறந்து போயிருப்பேன்

"By the time you get to read this, I'll probably be dead
But when you left in '97 a part of me went to Heaven
I thank God at least I got to know what love really was
But it hurt me, to see what true love really does
'Cause even though we never made love, you were all that there was
It was because I loved you so much that I had to make you leave
You made me doubt the way I thought, you made me want to believe
And then I slipped up, and I let you get close to me
It was hard to not be openly when people spoke to me
This was not the way I thought my life was supposed to be
Baby don't you see, I had a blood transfusion that left me with HIV
Hoped the end exists for me since late in 1993
I died a virgin, I wish I could've given myself to you
I cried in the hospital because there was no one else but you
Promise that you'll meet me in paradise inevitably
No matter what, I'll keep your love forever with me"

What happened for the rest of the day is still a blur
But I remember wishing that I was dead, instead of her
She was buried on August 3rd
The story ends without a sequel
And now you know why Technique, don't fucking fall in love with people

மீதி நாள் என்ன நடந்ததென்பது இன்னும் தெளிவில்லை
அனால் அவளுக்குப் பதில் நான் இறந்திருக்காம் என நினைத்தது ஞாபகம்
ஆவணி 3 இல் அவள் புதைக்கப்பட்டாள்
ஒரு தொடர்ச்சியற்று கதை முடிகிறது
இப்ப உங்களுக்குத் தெரியும் ஏன் நான் ஓ**காதலில் விழுவதில்லை என!


Hold the person that you love closely if they're next to you
The one you love, not the person that'll simply have sex with you
Appreciate them to the fullest extent, and then beyond
'Cause you never really know what you got, until it's gone

உங்கள் நேசத்துக்குரியவர் அருகில் இருந்தால்
இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்
நீங்கள் நேசிப்பவர் உங்களுடன் உறவுகொள்கிறவராய்
இருக்க வேண்டியதில்லை
அவர்களை முடியுமான வரைக்கும் உணருங்கள், அதற்கும் மேலே..
ஏனெனில், ஒன்று போகுமட்டும், அது உங்களிடம் இருந்தது என்பதை
அறிய மாட்டீர்கள்..
0




பல இந்தியப் படங்களில் கதாநாய(கி)கனுக்கு திடீரென கான்சரோ ரியூமரோ வந்து பழக்கப்பட்டதால் அழுகை வரவில்லைத்தான்; லேசான வருத்தமும் செய்தியும் தந்த வரிகள் பிடித்திருந்தன. இந்தப்பாடலிற் போன்றே, துன்பியலான முடிவுகள் (tragic ending) இவரது பிற பாடல்களிலும் காணக்கூடியதாய் இருக்கிறது, அது இவர்பால் ஈர்க்கும் ஒரு அம்சமாய் இருக்கிறது.

அதில்லையென்றால், இன்னொரு காதல் பாடலாகவே இதுவும் இருந்திருக்கும். பெண் உடல் பற்றி இது எழுப்பாத ஊடகசார் எதிர்பார்ப்பும், பாடல் இடைஇடையே bitch, hot, shake it போன்ற -பாலுறவிற்கான சந்தை உடலைமட்டுமே மையங்கொண்ட- சொற்கள் வராமையும், அவற்றையே மூலதனமாகக்கொண்ட BET பாடல்களிடமிருந்து இதை வேறுபடுத்துகிறது.

இந்த வேறுபாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி பேச முன், கனேடியச் சூழலை முன்வைத்து ஒன்று சொல்லவேண்டும். ஒன்ராறியோவில் கறுப்பர் மட்டும் படிக்கிற பாடசாலைகளை (அவர்களை கல்வியில் மேம்படுத்தும் பொருட்டு) உருவாக்குவது தொடர்பான விவாதம் நடந்தபோது, கனேடியப் பெரும் பத்திரிகை ஒன்றில் கறுத்தப் பத்திரிகையாளர் கல்வி குறித்த கறுப்பர்களின் attitude (போக்கு?) மாறும்வரை அத்தகைய பள்ளிகளால் ஒரு பிரஜோயனமும் வராதென்பதுமாதிரி எழுதியிருந்தார். கறுப்பர்கள்சார் பிரச்சினையொன்றைப்பற்றி ஒரு கறுப்பரே சொல்வதால் அது சரியானதாய் இருக்கவேண்டுமென்பதில்லை ஆனால் இந்த ‘போக்கு’ விவாதிப்பதற்கு சிக்கலானது, அதேநேரம் தவிர்க்கவியலாதது.

கறுப்பர்களின் வெகுசன ஆதிக்கம் மிக அதிகம். உயர்பாடசாலை முழுவதும் மாணவர்கள் பின்தொடருகிற பாஷன் உடைகள், பாடல்கள் கறுப்பர்களுடையதுதான். அதாவது BET போன்ற தொலைக்காட்சி நிறுவனம் தருகிற கறுப்புப் பாடகர்கள் ஆன 50Cent வகையறாக்களின்மீதான ஈர்ப்புத்தான். பெண்களை அப்பட்டமாக பாலியல் கருவிகளாய் மட்டுமே காட்சிப்படுத்திற அனேக பாடல் வரிகள் மாணவ, மாணவிகளால் ‘ஏற்க’ப்படுகின்றன, ஒரு இயல்பாக. ஐரோப்பாவில் இருக்கிற ஒரு தமிழ் சிறுவன் 50Cent இன் பாடல்களை விரும்பிக் கேட்பதாக தோழி சொன்னபோது மிகவும் வருத்தமாக இருந்தது. அமெரிக்க வெகுசன கலாசாரத்திற்கெதிராக ஐரோப்பாவாலையே ஈடுகொடுக்க முடியாதென்பதை ஜீரணிக்க ஏனோ கஸ்ரமகா இருக்கிறது. உலகமயமாதல் என்பது, இறுதியில், அமெரிக்கமயமாதல் என்பதேதான் போலும்.

உலகெங்கும் கறுப்பர்கள் களியாட்டவெளி மட்டும் வெளிச்சப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இமோட்டல் ரெக்னீக் கறுப்பரது பின்னணி கொண்ட, அதுவும் தொலைக்காட்சிகளின் காதல்-காமகளியாட்டங்களிற்குப் பேர்போனதாய் காட்டப்படுகிற லற்றினோ கலாச்சாரத்தை உடைய ஒரு தென்அமெரிக்கர்.
அவரது இந்தப்பாடலில், கறுப்பரில் அறிவார்த்தமான ஆண்களையே பெரிதுபடுத்தாத மேற்கின் உயர்பாடசாலை பொதுப்போக்கில், அறிவார்த்தமான ஒரு கறுப்புப் பெண், அவள் கற்றுத் தந்தவை என அவளிடமிருந்து உடலிற்கு அப்பாலும் (உடலுறவுகொள்ளாமலேயே) கற்கலை ஒரு ஆண் ஏற்றுக்கொள்வதாக வருகிறது.
பொதுவான வெகுஜனஊடகங்களின் கொண்டாடப்படுகிற நபர்களாய் (Celebrities) ஆகாமல் சுதந்திரமான பாடகர்களால் வெளியிடப்படும் இவை அவ் ஊடக இயந்திரங்களிற்கு எதிரான மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பவையாய் இருக்கின்றன. அந்த வகையில் ‘கொண்டாட்டம்’ ‘களிப்பு’ இவை இயல்பென வெகுசனர்களால் புனையப்பட்ட லட்டினோ ஒருவரிடமிருந்து அவர்களது கனவுப்பெண்களான சல்மா ஹயக், யே.லோ போன்ற பெண்களைத் தாண்டி, உடல் பற்றிய சித்தரிப்பே அற்று –முகத்தில் மையங்கொண்டு- ஒருத்தியைப் புனைந்திருப்பது முக்கியமானது. எனினும், இந்த பாடகனுடன் சில புள்ளியில் உடன்பட முடியவில்லை.
உதாரணமாக,

குடியிருப்பில் எல்லா வேசைகளும் பொறாமையுற்றார்கள், ஆனால் அதை ஒத்துகொள்ளவில்லை
கண்டதையும் கதைத்தபடி, தாங்கள் ‘அதை’ செய்தவர்கள் என்பதை எல்லோருக்கும் மறுத்தபடி... ஏனெனில்
தாங்கள் ‘அடிக்க விட்ட’ கறுப்பர்களின் நீண்ட பட்டியலையிட்டு அவர்கள் விசனமுற்றார்கள்
ஒருதரும் அவர்களை சட்டை பண்ணியதில்லை மக்டோனால்ஸ்ஜயும் அதைச் செய்த ‘குறி’யையும் தவிர
...

போன்ற வரிகள், ‘இத்தகைய’ ‘தூய’ ‘அற்புதமான’ பெண்ணின்மீது பொறாமைகொண்ட இன்னொரு சாராரைப் பற்றியது. தனக்குப் பிடித்தமான ஒரு பெண்ணை பற்றிய புகழ்பாடல்கூட இன்னொரு பெண்ணை/பெண்களை வைத்து அவர்களது சலனங்களை 'ஒழுங்கமின்மைகளை' முன்வைத்துத்தான் வைக்கமுடிகிறது. இதில் இவர்கள் ‘வேசிகள்’ என்று குறிப்பிடப்பட்டாலும், இவர்கள் ‘பாலியல்தொழிலாளிகள்’ என்கிற அர்த்தத்தில் இதில் உபயோகிக்கப்படவில்லை. அவர்கள் நிறையப்பேருடன் உறவுகொள்வது சார்ந்தே இது வைக்கப்பட்டிருக்கிறது. ‘உனது பெண்ணை’ ‘அவள் தூய்மையைப்’ பறைசாற்ற, பிற பெண்டிரது பொறாமையின்றி, அவர்கள் யார் யாருக்கு தமது குறியை விட்டார்கள் என்பது பற்றி எல்லாம் உன்னால் கூறாமல் இருக்க முடிவதில்லை. ஆனால் அவள் அல்லாதபோது நீ மட்டும் பல பெண்களைக் கூடியிருப்பாய்/உனது குறியை யார் யாருக்கோ உள்விட்டிருப்பாய், அவைகள்,

“fuckin' lots of different women, but I still felt alone"

என்று பாடுவதோடு போய்விடுகின்றன, அப்பால் பொருட்டில்லை- எதனால்?!
இவை விசனம் தர்ற அம்சங்கள்.

‘நீயும் அழுவாய்’ என்றெல்லாம் முன்எச்சரிக்கையுடன் கேட்க விட்டவர்களிடம், “என்ன உன்னுடைய பாடகன் தான் நிறைய பேருடன் நட்பாக (?!) இருந்துகொண்டு, அப்படி இருக்கிற மற்றப் பெண்களை bitch என்று name call பண்றார், இது சரியா?” என்றொரு கேள்வியை பகிர்ந்தபோது, அவர்கள் தாங்கள்தான் எழுதியதுபோன்ற வெட்கத்துடன் ‘உண்மைதான்’ என ஒத்துக்கொண்டு, அதை தவிர்த்தால், பாடல் நல்லம்தானே பிடித்திருக்கிறதா எனக் கேட்டார்கள்.
உடலையே, அதன்மீதான மயக்கங்களிலும் வீழ்த்தலிலுமே கழிந்துகொள்கிற எதிர்கொள்கிற மனிதக்‘காதல்’உறவுகளுள்,

“The one you love, not the person that'll simply have sex with you
Appreciate them to the fullest extent”

போன்ற வரிகளும் மொத்தப் பாடலூடாக வருகிற உயிர்த்துடிப்பான ஒரு பெண்ணின் முகமும் நேசிப்பும் பிடித்திருக்கிறது. தவிர, BET பார்த்து வளர்கிறவர்களான இந்த மாணவர்கள் மாற்றாய் இந்த பாடல்களையும் கேட்பது, இருவகைப்பட்ட பார்வைகளிற்கு இடங்கொடுக்கிறது. அந்தமாதிரியான சூழலில் இளமனதில் இது ஏற்படுத்துகிற உடைப்பு/மாற்றெண்ணம் வளரப்போகிற அவர்களது பெண்கள் பற்றிய புரிதலுக்கு அவசியமானது.


இவரது ‘அரசியல்’ பாடல்கள் பற்றிப் பிறிதொரு சமயம்.


Friday, March 25, 2005

தாய்


Pic:from

உன்னுடன் துணைவர முடியாது
என் எல்லை முடிகிறது
காரிலிருந்து நீ இறங்குவாய்
இனி என்னுடைய பிள்ளையை வெளியுலகம் எடுத்துக்கொள்ளும்.
நீ இயல்பெனக் கொண்ட உன்னுடைய மௌனத்தை
இனி இவர்கள் என்ன செய்வார்கள்...
மென்மையான இந்த பூக்களின் இதழ்களை
எப்படி நாசம் செய்வார்கள். ..
நீ இறங்கிச் செல்வதை நான் வெறுக்கிறேன்- இத்தோடு
என் உரிமை பறிகிறது
அருகிருந்து, என்னுடைய உடம்பினுள் கை போட்டு,
இதயத்தை இழு...த்துவிட்டு ஏதோ செல்கிறது
இதய அவ்விடத்தில், ஸ்தம்பிக்கிறது என் உலகம்-
நீ நடக்கிறாய்
உன் புதிய பாடசலை, உத்தரவாதங்கள் தாராது
என் வெறித்த விழிகளை திமிருடன் நெரிக்கிறது
இவ் உயர் பாடசாலையில்
சிறுவர்களின் ஆண் குறிகளை
பெண்களின் உதடுகள் உறிஞ்சுமாம்...
நோஞ்சான் பையன்களை
பயில்வான் மாணவர்கள் போட்டு அடிப்பார்களாம்...
கேள்வியுற்றவைகளை நினைத்தபடி
நான் என்ன செய்வேன்
கொஞ்சமும் முதிர்ச்சியற்று,
உன் கரம் பற்றி
உன் வகுப்பறைகளுக்கு கூட வந்து
உன்னுடன் இருந்து, நீ பேசாதபோது 'அவர்களுக்கு' விளக்கம் சொல்லி,
உனக்கு என்னென்ன பிடிக்கும் என்று சொல்லி, நீ நன்றாக வரைவாய் என்று சொல்லி,
உன்னுடன் எல்லோரும் ஏன் நண்பர்களாக வேண்டும் என்று சொல்லி... இன்று முழுதும் இனி ஒவ்வொரு நாளும் உன்னுடன் கூடவர விரும்புகிறேன், உனக்குப் பாதுகாப்பாய், உனது பலமாய்...
கொடியவர்களே! ஏன் என்னைத் தடுக்கிறீர்கள்.
நொடிக்கொருதரம் பாத்துப் பாத்து, பொத்தி பொத்தி வளர்த்த என் மகவை, என்னைப் போல கவனிப்பீர்களா? அவனருகாமையில் செல்கையில் உங்களது வாகனங்களின் வேகத்தை தயவுசெய்து குறைப்பீர்களா? மேலும்,
அவனுடைய ஆண் குறியை, சிறந்த ஓவியனுக்குரிய அவனது கரங்களை, அவனது அலட்சியத்தை
அவனதழகிய விழிகளை தயவு செய்து துவம்சம் செய்யாதிருப்பீர்களா?
அவன் அன்பால் மூடப்பட்ட குழந்தை.
உலகைப் புதிப்பிக்க போகிற இன்னொரு உயிரம். பேராபத்துகளை வெல்கிற வயதை அவன் அடையவில்லையே...
அலட்சியமாக வளர்ந்துவிட்டான்.
*

Wednesday, March 23, 2005

'தழுவி' எழுதுதல்

...‘கவிதைகள் எழுத வேண்டாம்’ என்றால் - அதை
‘யாருடைய மாதிரியும் எழுதவேண்டாம்’ என்றே வாசிக்கவேண்டும்.
சும்மா எழுதப்படுகிற கவிதைகளைப்பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். ஆங்கிலத்தில் கவிதைப் புத்தகங்களிற்கு மதிப்பில்லை என்பார்கள் (விற்பனையில்). தமிழிலோ கவிதை குறித்து நிறைய கிளர்ச்சி இருக்கிறது.
என்னுடைய வாசிப்புக்குட்பட்டளவில், நகுலன், பிரமிள், ஞானக்கூத்தன், கல்யாண்ஜி, கலாப்ரியா, தேவதச்சன், ஆத்மாநாம், வண்ணநிலவன், வ.ஐ.ச. ஜெயபாலன், சுகுமாரன், சமயவேல், மனுஷ்யபுத்திரன், யூமா.வாசுகி, கருணாகரன், குட்டிரேவதி, மாலதி மைத்ரி, சல்மா, நட்சத்திரன் செவ்விந்தியன், சித்தார்த்த 'சே'குவேரா பா.அகிலன், ஆழியாள், நிலாந்தன், என்.டி.ராஜ்குமார், முகுந்த் நாகராஜன், சுகிர்தராணி ஆகியவர்களது கவிதைப்பாணிகள் மற்றவர்களை பிரதிபண்ணாததாக தனித்து நிற்கின்றன (இதில் சில நல்ல கவிதைகளை எழுதிய கவிஞர்களைச் சேர்க்கவில்லை). சிலர் ஒரே பாணியைக் கொண்டிருந்தாலுங்கூட பேசுகிற பொருளால் கொண்டு செல்கிற கவிதை அனுபவம் வேறுபடுகிறது.
இப் பட்டியலோ தனிப்பட்ட ஒருவரது வாசிப்பின் எல்லைக்களிற்குள்ளிருந்து வருவது, தமிழில் வந்த அனைத்து தொகுதிகளையும் முன்வைத்து ஆராய்ந்தாலும் கவிஞர்களின் தொகைக்கு நியாயம் செய்யாத குறிப்பிட்டளவு கவிஞர்களே தேறலாம். மீதி எல்லாம் எழுதியவருக்குப் பிடித்தமான கவிஞரின் நகல்களே, அதிலும் ‘நவீன’ கவிதை ‘மாதிரி’யுள் அடங்குமாப்போல, இருண்மை/உள்வெளி என பாசாங்கும் அனாவசிய வார்த்தைகளும்கொண்டு சமகாலக் கவிதைகள் 'உருவாக்கப்'படுகின்றன.
(இவற்றிலிருந்து மாறுபட்டு ஒலிக்கிற குரல்களை அது ஏற்றுக்கொள்வதாயும் இல்லை!)

இப்படி ‘உருவாக்கப்’படும் கவிதைகள் கதைகள் இதர வடிவங்களை, பாதிப்பில் எழுதுதல் அல்லது தழுவி எழுதுதல் என்பர்; தழுவுதலிலும் நிறைய விதங்கள் இருக்கின்றன. சும்மா தழுவுதல், ஆரத் தழுவுதல் என்று..... (இது best better worse மாதிரி போய்க்கொண்டே இருக்கும்)



1:
கிழக்கு ஆஸ்திரேலியச் சிறுநகர் ஒன்றில்

மதுக்கடை ஒன்றில்

குளிர்காலம் தொடங்குகிற ஒருநாள் மாலையில்

D. H. Lawrence பிலியட்ஸ் விளையாடக் கண்டேன்

நெடுங்கூரிய நாசி

செம்பட்டைத்தாடி

கன்னிகளின் விரக ஆன்மாவை ஊடுருவும்

அதே 19ம் நூற்றாண்டு கடலோடிகளின் கண்களுமாய்

நெடுவல் ஒல்லி மேனியன்

D. H. Lawrence பிலியட்ஸ் விளையாடக் கண்டேன்

தங்கள் தலைமுறையையே சூதாடும்

தன் வயதொத்த ஆண்களோடு

பிலியட்ஸ் பந்துகள் அடிபடுகிற படுக்கைக்கும்

மதுக்கிண்ணம் இருக்கிற மேசைக்குமாய்

நீண்ட கோலோடு போய்க்கொண்டிருக்கக் கண்டேன்

என் மதுக்கிண்ணம் காலியாகும்வரை

D. H. Lawrence பிலியட்ஸ் விளையாடக் கண்டேன்.


(
1997)

/நட்சத்திரன் செவ்விந்தியன்
( 'எப்போதாவது ஒருநாள்' கவிதைத் தொகுப்பு)


2:
பசியோடிருக்கும் மீனவன்



காற்றில் அலைந்து திரிந்த போது
ஒருநாள்
பசியோடிருக்கும் மீனவனைக் கண்டேன்
சாதாழை எற்றுண்டு கிடந்த மணலில்
குந்தி இருந்தான்
கடலோரம் கவிழ்ந்திருந்தது சிறு தோணி
அதன் சுவட்டைக்
கடலில் தேடிக் கொண்டிருந்தான் அவன்
மழிக்கப்படாத அவன் முகத்தில்
உப்புக் காற்று மோதியது
இடுகாட்டின் கூக்குரல்களுக்கு நடுவே
அவனுடைய குடிசை இருந்த இடத்தை
யாரோ தோண்டிக் கொண்டிருந்தார்கள்
வலியில் முனகியது நிலம்.
கடலோடிகள் பறித்துச் சென்றது போக
எஞ்சிய வாழ்க்கையில்
உதிர நெடி.
பசியோடிருக்கும் மீனவனைக் கண்டேன்
எனது முகமும் எனது குரலும்
அவனிடம் இருந்தன.

(1999)

/சேரன்
( காலச்சுவடு 27)


3:
காலப் பெரு வெளியில்



கோடையிலோர் நாள்
குளிரூட்டியின் மூச்சுக் காற்றும் சுடுகின்ற அதிவெப்ப நடுப்பகல் வெய்யிலில்
டொன் பள்ளத்தாக்கிடை விரிந்த
பூங்கா மரக்குடை நீழலில் ஒதுங்கிய காலை
முதியதோர் காதல் இணையைக் கண்டேன்
ஒரு யுகத்தின் மூப்பொடு
கிளையொடுங்கிச் சுருங்கி
எலும்புந்தோலுமாய் நிழலுதிர்த்து நின்ற
பெருமரத்தடியில்
மூச்சிரைக்க ஓய்வுகண்டனர்
ஆண்டாண்டுகாலமாய் ஆழ வேர்பரப்பி
அகலக் கிளை விரித்த
முதுமருதின் கிளையொன்றில்
கூடும் குதூகலமுமாய் வாழ்வோச்சிய கால
செழிப்பின் சுவடும்பின்தொடர்ந்த பிரளய இழப்பிலும் பெயர்விலும்
கப்பிய துயரும்
இறக்கை முளைத்த குஞ்சுகள்
இணையுடன் சேர்ந்து
கொத்தித் துரத்திவிட்ட
நெடுஞ்சோகப் பெருமூச்சும் பறிய
அதைமறுத்து
உலர்ந்த புல்லுக் கீற்றொன்றை
கோதி அலகில் சுமந்து
புதிதாய்
கூடிணக்க விழையும் உலர்வலையக் குருவியின்
உற்சாகப்பெருக்கில்
தன் இணையை
கைலாகு கொடுத்து
தூக்கி
அணைத்து எட்டிநடந்தபடி
டொன் பள்ளத்தாக்கிடைப் பூங்காவில்
முதியதோர்
காதல் இணையைக் கண்டேன்


(2000)

/திருமாவளவன்
('அஃதே இரவு அஃதே பகல்' கவிதைத் தொகுப்பு)


இந்தக் கவிதைகளில் எழுதப்பட்ட ஆண்டுகள் எவரை எவர் தழுவியிருக்கலாம் என்பதை ஊகிக்க தரப்பட்டிருக்கிறது. முதலாவதை 'அசல்' என்ற வைத்துக்கொண்டு, அதனுடைய 'சாயலில்' உள்ள இரண்டாவதைப் பார்த்தால்... இது உண்மையில் சேரனுடைய நல்ல கவிதைகளில் ஒன்று. அப்போ முதலாவது கவிதையிலிருந்து இவர் பெற்றிருக்கக்கூடிய பாதிப்பை 'ஆரோக்கியமான' பாதிப்பென்று கொள்ளலாம். இது பாதிப்பாய் இருக்கவேண்டியதில்லை என்றுங்கூட வாதிடலாம். இங்கே பாதிப்பு இருக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளதென்பதை உணர்ந்தாலே போதுமானது. அதற்கு முதலாமவர் உபயோகித்த கடலோடி போன்ற சொற்களை பின்னவரும் தொடர்ந்திருப்பதை ஆதாரமாகக் கொள்ளலாம்.
மூன்றாமவதைப் பார்த்தால், நிறைய பாசாங்குடன், தலைப்பிலேயே தத்துவார்த்தமாகத் தொடங்குவதால் 'சுமார்' வகைப்பாட்டுக்குள் அடங்குகிறது.

இவை மூன்றும் ‘தீவிர’ தளத்தில் எழுதப்பட்டிருக்கிறது, அதிலும் ஒரே புலத்தைச் சேர்ந்தவர்களால் (ஈழம்); மூவருமே அறியப்பட்ட கவிஞர்கள் வேறு! இங்கே இவற்றை வாசிப்புக்குட்படுத்துவதூடாக இவர்களுக்குள்ளேயே இது சாத்தியமென்றால் ஒருநாளில் ஒருவருடையதுபோலோ அல்லது பலருடையதைப்போல எத்தனை கவிதைகள் படைக்கப்படும் என யோசித்துப் பார்த்தலே நோக்கம். அவை இந்தக் கவிதைகள் அளவு தம்மளவில் தனித்தன்மையுடையனவாய் இருந்தால் அதில் குறையில்லை.

Thursday, March 17, 2005

வெங்கட் இற்கான பதிலும்...

..மேலும் சிலவும்


வெங்கட்!
நான் ''மிகவும் முற்போக்கான பார்ப்பனர்களே இந்த 'திட்டுதலில்' sensitive ஆய் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது..." என எழுதியது, திட்டமிட்டு, வெங்கட் மீது 'வன்மங்' கொண்டு, எங்கடா அதைப் போட்டு உடைக்கலாம் எனக் காத்திருந்து, ரோசாவசந்த் கா.பிலிம்ஸ் இற்கு எதிர்வினையாற்ற, அப்பாடா என்று வந்த வாய்ப்பைக் கெட்டியாய்ப் பிடித்து அல்ல, இதை முதலே 'தெளிவாக' சொல்லிவிடுகிறேன்.
நான் நனவற்று இயல்பாகத்தான் அதை எழுதினேன், எனக்கு குறிப்பிட்டளவு அந்த வகைப்பிரிப்புக்குள் அடங்குகிற நபர்களைத் தெரியுமென்கிறபடியால். . . உங்களை என்று குறிப்பிட்டு நினைத்து எழுதவில்லை. இதை 'திட்டமிட்டு' செய்திருந்தால் நிச்சயம் எனது பதிவிலோ உங்களது பதிவிலோ மறுமொழி இட்டிருப்பேன். அது ரோ.வசந்தின் பதிவில் அவரது பதிவைப் படித்தபிற்பாடு உணர்ந்ததை எழுதியது மட்டுமே, no strings attached to it, at all.
அதற்காக நீங்கள் 'தவறாக' எண்ணி எனக்கு பதிலளித்ததாயும் நினைக்க வேண்டியதில்லை. அத்துடன் எதன் பொருட்டும் "நீங்கள் சொல்லுகிற கருத்து முட்டாள்த்தனமானது" என்று நான் நினைக்கவில்லை.குறிப்பாக நாரயணன் பதிவு பார்த்து பின் உங்களிற்கு பதிலாய் நான் எழுதவில்லை.
இவற்றை கூறிவிட்டு உங்களது கருத்துகள் தொடர்பான எனது கருத்துகளை எழுதுவது உசிதமென நினைக்கிறேன்.

"பாப்பார நாயே என்று திட்டப்படும்பொழுது "நறுமணமும், அழகும் பொருந்திய மலர்களைக் கரங்களால் எடுத்துப் பூசிப்பவனே" என்பதாகச் சொல்வதன் அபத்தம் புலப்படுகிறதா? உண்மையில் அதற்குப் "பூசை செய்பவனே" என்றுதான் அர்த்தமா? இந்த அணுகுமுறை வியப்பளிக்கிறது. "
-வெங்கட்

இந்தியாவில் பிராமணர்களை பார்ப்பான் என்பது தவிர வேறெப்படி வசைபாடப்படுவார்கள் என்பது எனக்குத் தெரியாது (தெரியாமல் ஏன் எழுதினாய் என்கிற ஒரு கருத்தை வாசிக்கிறவர்கள் யாரும் தயவுசெய்து பின்னூட்டமிட மெனக்கெடாதீர்கள்). அதனால்தான், அந்த இடத்தில் பூஜை செய்பவன் என வைவது அவமானமா அல்லது மலம் அள்ளுபவன் என வைவது அவமானமா என எழுதினேன், தவிர அதற்கு வேறொரு 'கற்பனையும்' என்னிடம் இல்லை. இரண்டும் இரண்டு சமூகத்தினரது 'தொழில்'கள். பிறப்பினால் ஒருவன்(ள்) கீழிறைக்கப்படக்கூடாது 'உங்கள் பிறப்பிற்காக நீங்கள் வருந்தவேண்டும்" என்கிற கருத்துக்கள் இல்லாத நான், மலம் அள்ளுபவர்களாக 'பிறப்பினால்' ஒரு சமூகம் கீழிறைக்கப்படுகிறது என்பதை -அந்த வித்தியாசத்தை சொல்ல மட்டுமே- அதை எழுதினேன். நீங்கள் பூஜை செய்பவன் எனுகிற வசைக்கான விளக்கத்தைக் கூறி வசையென்றமட்டில் அதுவும் இதுவும் ஒன்றுதானே எனக் கேட்டிருக்கிறீர்கள். (பின்னூட்டத்தில் ரெண்டு வலிக்குமான மாறுபாடு தெரியும் என எழுதியுள்ளீர்கள்).
வசைகள் மனதை துன்புறுத்தவும் ஒருவரை உதாசீனம் செய்யவும் எய்யப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் எல்லா வசையும் ஒன்றல்ல. எத்தனையோ வேறுபாடுகளை வைத்துக்கொண்டு 'நானும் நீயும் ஒன்று' என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது, 'சமமாக' ஆகியபிறகு சொல்லவேண்டிய வசனம் அது.
ரோ.வசந்தின் பதிவில், அவரது பதிவிற்கான இத்தகைய எனது கருத்துக்களைத்தான் எழுதியிருந்தேன்.
குறிப்பிட்ட சில விடயங்களில் சென்சிற்றிவ் ஆய் இருப்பதற்கான -உங்களுடையவோ யாருடையவோ- உரிமையையும் நான் மறுக்கவில்லை.

"கொலை பயத்தை ஈழத்திலிருந்து வருபவர்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை. ஒரு கோடை நாளில் வெளியில் கட்டிலில் படுத்திருந்தவரின் பூணுல் அறுக்கப்பட்டது. அடுத்த வாரம் திண்ணையில் தூங்கியவரின் வலதுகரம் வெட்டப்பட்டது.
...கொலை நடந்தது! என் அடுத்த வீட்டில் வசித்த, எறும்புக்கும் தீங்கு நினைக்காத ஒரு சரித்திரப் பேராசிரியர் மதிய வேளையில் மிதிவண்டியிலிருந்து கீழே தள்ளப்பட்டு நெஞ்சில் குத்தப்பட்டு இரண்டு நாட்கள் அவதிக்குப் பிறகு மரித்துப் போனார். அந்தக் குடும்பம் சிதைவதை என் கண்ணால் கண்டிருக்கிறேன்.ஒரு அப்பாவியின் நெஞ்சில் கத்தியைச் செருகுமளவிற்கு வன்மம் இருந்தால் அது உருவாகக் காரணமாக என்ன தவறிழைக்கப்பட்டது என்று எனக்குப் புரியவேண்டுமென்பது அவர் எண்ணம். "...

புரிந்தது. கோபங்கொள்ள அவர்களுக்கு இருக்கும் தார்மீக உரிமை விளங்கியது. விளைவு - என் முன்னோர்கள் தவறுகளைச் செய்திருக்கச் சாத்தியமிருப்பதாக நான் முழுமனதாக நம்புவது. அந்த எண்ணம் எனக்குள் விளைவிக்கும் அருவருப்பும் அவமானமும். அதற்காக நான் செய்யக்கூடியது மனதார பாதிக்கப்பட்ட என் சகோதரனிடம் நான் மன்னிப்பு விழைவது. அதிலும் முக்கியமாக அவனுக்கு ஆகவேண்டியதைப் பற்றிச் சிந்தித்துச் செயல்படுத்துவது.

ஆமாம், இது ஒரு பெரிய சுழற்சி. இதற்கு ஒரே தீர்வு. இதைவிட்டு வெளியே வருவதான் என்று மனதார நம்புகிறேன். இதில் என்னாலானது கீழே இருப்பவனுக்குக் கைகொடுக்கும் அதே நேரம், மேலே இருப்பவனைக் கீழே தள்ள முயற்சிக்காமல் இருப்பது. எனவே எந்தவிதமான வன்முறையும், கொடுஞ்சொற்களும் எனக்கு ஒப்பானவை அல்ல. எனவேதான், அறிவாளிகளாக நான் நம்பும் ஒருசிலர் பாப்பார நாயே என்று சொன்னாலும், பற நாயே என்று சொன்னாலும் எனக்கு வருத்தமளிக்கிறது. அதேபோலவேதான் செருப்பாலடித்தலும், ஆண்குறி அறுக்க விடுக்கப்படும் அழைப்புகளும். அதையும் விடக் கொடுமையானது இதில் ஈடுபடாதவர்களை எல்லாம் If you are not with us, you are against us என்று புஷ்தனமாகப் பயமுறுத்துவது. "
-வெங்கட்

எனக்கு இந்தக் கருத்தில் உடன்பாடில்லை. காரணம் நீங்கள் பேசப்பட்ட -நீங்கள் முரண்படுகிற - எல்லாவற்றையும் ஒரே இடத்தில் இணைக்கிறீர்கள். ஆண்குறி அறுத்தல் பற்றிய பதிவில் பேசுகிற விடயத்திற்கும் சாதி குறித்த வசையாடல்கள் பற்றிய இவ் விவாதத்திற்கும் தொடர்பில்லை. எனக்கு வெங்கட், ரோசாவசந்த், மதி என ஒவ்வொருவருடைய வெளிப்பாட்டு பாணியும் மொழியும் வெவ்வேறாக இருப்பதில் பிரச்சினை இல்லை என்பதால் அந்த பதிவில் முரண்பட எனக்கொன்றுமில்லை.
அத்துடன் மற்றவர்களிடம் மட்டும்தான் புஷ் தனம் உள்ளதா? அப்படியொரு விவாதத்திற்கு நாங்கள் போனால் உங்களது பகுதியில் இருக்கிற (நீங்கள் அறியாத?) புஷ்தனங்களை மற்றபகுதி பேச வேண்டும். எழுத இருக்காதென்றா நினைக்கிறீர்கள், என்னிடமே நிறைய இருக்கிறது. வன்மமற்று, குழு மனப்பாங்கற்று, நிதானமாக, 'கெட்ட'வார்த்தை அற்று எழுதவும் முடியும்.
பொதுவாகச் சொல்கிறேன் (உங்களுக்கு அல்ல): அப்போதுமட்டும் கருத்துக்களை இலகுவாக, வளர்ந்த, புத்தியுள்ள, ஒருவர் மாற்றிக்கொள்ளமுடியுமா? எனக்குத் தெரியவில்லை.
ஒரு பிரச்சினை தொடர்பாக தம்மிடம் ஒரு முடிவை வைத்துக்கொண்டுஎப்போதும் மாறப்போகாத வாதத்தில் இறங்கும் ஒருவரை 'மாற்றுவதில்' எனக்கு திறமையில்லை.

'வெளியே வருவது' என்பதற்கு அவரவர்க்கு வழிமுறைகள் தெரிந்திருக்கும். விவாதங்களும் தொடர் கருத்துப்பரிமாறல்களுமே எனக்கு புரிதலுக்கான முறைகளாய் இருக்கின்றன. இதனால் இதுவரை இத்தகைய விவாதங்கள் ஊடாக ''என்னுடன் இரு அல்லது எதிரியாக இரு'' என்கிற ஒரு தொனியை உணரவோ, 400 பேர் எழுதும் வலைப்பதிவு சமூகத்தின் ஒற்றுமைக்குலைவு பற்றியோ எனக்கொரு முன்அனுமானமும் தோன்றவில்லை.
----------------------------------
மற்றப்படி இங்கு யாரும் தலித்துகளிற்காக போராடவில்லை. அனேகமாக வெளிநாட்டில் வாழுகிற அல்லது இணையத்தொடர்புள்ள இந்திய,இலங்கை நபர்கள்தான் இங்கு வாதித்துக்கொண்டிருப்பவர்கள். இந்த வலைப்பதிவுகளில் அமெரிக்காவில் புஷ் வருவதுதொடர்பாக கருத்துக்கள் பரிமாறப்படுவதுபோலவே இந்தியாவில்இலங்கையில் நடந்துகொண்டிருக்கிற இத்தகைய அடக்குமுறைகள் பற்றிய புரிதல்களை வளர்த்துக்கொள்ளவே இந்த விவாதங்கள் பயன்படுவதாக நான் நினைக்கிறேன் (சிலவேளை சொன்னதையே சொல்லுவதுபோல இருபுறமும் அயர்ச்சி தோன்றினாலுங்கூட). இந்த மாதிரியான விடயங்களில் முடிந்தளவு தீவிரத்துடன், இருக்கிற நாட்டில் அவை குறித்த தேடல்களுடன், உலகெங்கும் அடக்கப்படுகிற மனிதர்கள் பற்றிய அறிதலும் புரிந்துகொள்ளுதலும்தான் எனது நோக்கமாக இருக்கிறது.
அல்லாமல், கனடாவில் பாதுகாப்பான ஒரு மூலையில் இருந்து ஈழத்திலோ தலித்துகளிற்காகவோ பெண்களிற்காகவோ போராடுகிற கனவும் எண்ணமும் கொண்டு இல்லை.
நீங்கள் 'புஷ்' தனமாக பயமுறுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு மனிதருமே கருத்துக்களால் ஆனவர்கள் என்கிறபோது 'ஒற்றுமை குலைகிறது' என யோசிக்கவும் இல்லை. அது அப்படித்தான் என்றால் பிரச்சினைக்குரியவர்களை இந்த 'தமிழ்மணம்' என்கிற இணைப்பிலிருந்து எடுத்துவிடுகிற 'உரிமை' கூட உரியவர்களுக்கு இருக்கிறது. இதிலெல்லாம் யாருக்கும் (குறிப்பாக எனக்கு) பிரச்சினையுமில்லை.
--------------------------------
" தலித்துக்கள் தலித்தாய் பிறந்தது குற்றமாக்கப்படுவதுபோல் தாங்களும் சிந்திக்கத் தெரிந்த பார்ப்னாகப் பிறந்தது குற்றமே. இந்த வலியைத் தாங்கள் அனுபவித்தே தீரவேண்டும்
...
இப்படியான சமூகத்தை உருவாக்கியது பாப்பன்கள். அவர்களில் ஒரு சிலர் இறந்துதான் தலித்திற்கு விடிவு வருமென்றால் அதில் தவறென்ன?"
இப்படி கறுப்பி கூறியதுடன், எனக்கு ஒரு எளவு உடன்பாடுமில்லை. ஆனால் நீங்களோ 'ஈழம்' = கறுப்பி என வாதத்தைத் தொடரவழிவிட்டு 'காந்தி தேசம் என பதிலைத் முடித்துள்ளீர்க்ள. இப்போது, உடனடியாக உங்களிடமிருந்து இயல்பாக வருகிற இந்த பதில்களின் உளவியலைப் பற்றி விவாதிக்கவேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது.
மரணம் என்பது மரணம்தான் வெங்கட். அதற்கு மதமும் இனமும் எந்த வித்தியாசமுமில்லை. செல்ல நாய் செத்துப் போனால் அழுகிற நாட்டில் வாழ்ந்துகொண்டு ஒரு எறும்புக்கே தீங்கு நினைக்காத ஒருவர் இறப்பதைப்பற்றி நாங்கள் So What என நினைப்போம் என நினைக்காதீர்கள். இறந்துபோனவர்கள் யாருக்கோ ஒரு 'அன்புக்குரிய' தான். இந்தக் கருத்தை, காந்தி பிறக்காத, 'பயங்கரமான' தேசம் எனது பூர்வீகமாக இருக்கிறபோதும் என்னால் வைத்திருக்க முடிகிறது.
அதேநேரம் கலவரம் நடந்துமுடிந்து, தலித்துகள் எண்ணற்று கொல்லப்பட்ட இடத்தில் போய் இதைச் சொன்னால் அவர்கள் 'சாகட்டும், செத்தால் என்ன?' எனக் கேட்டால் அதை, அந்தக் கோபத்தை, அதன் நியாயத்தை, நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதைப் புரிந்துகொள்ள விரும்பாமல், 'படிப்பறியா தாழ்த்தப்பட்ட' சகோதரன்கள் அல்ல இப்போது இங்கே விவாதித்துக்கொண்டிருப்பது, நன்கு 'படிப்பறிவுள்ள' வர்கள்தான்.
பார்ப்பான் என்கிறபோது அதற்கான முழுமையான எதிர்ப்பும், வசையும் இந்தியாவில்/இலங்கையில் அதிகாரங்களில் (அரசியல், பத்திரிகை, etc) இருக்கிற பிராமண/வேளாள ஆதிக்கத்தையும் அவர்களது திட்டமிட்ட சிறுபான்மைமீதான வன்முறையையும் வைத்தே எழுப்பப்படுகிறது.
தவிர,
வறிய, அக்ரகார பிராமணர்களைப் பற்றி பூமணியின் கதைகளிலும் வேறு பல இடங்களிலும் படித்துள்ளேன், எனக்கு அவர்களில் எந்த வெறுப்பும் இல்லை. 'பார்ப்பானையும் பாம்பையும் கண்டால்' யாரை அடிக்கவேண்டுமென்று என்னிடம் சொல்லப்பட்டபோதும் 'நான் யாரை 'அடிக்க'வேண்டுமென்பது எனது பிரச்சினை' என்றுதான் சொல்லியிருக்கிறேன். அந்த அப்பாவிகளிடம் போய் 'பார்ப்பாரப் புத்தி' இத்தியாதி என ஒருவன்(ள்) திட்டினால் அதற்கு நானோ அப் பிராமண ஆதிக்க எதிர்பர்பாளர்களோ 'சபாஸ்' போட்டால் அது எங்களுடைய அறியாமை மாத்திரமே. நிச்சயம் நான் அதை செய்ய மாட்டேன். ஆனால் இந்த விவாதங்கள் படித்த/வெளிஉலகங்களில் வசிக்கிறவர்ககளுடன் இடம்பெறுகிறது என்பதுதான் மிகப் பெரிய வேறுபாடு. அவர்கள் தருகிற கருத்துக்கள் சிறுபான்மையினருக்கு எதிரானதாக இருக்கிறபோத அது 'பார்ப்பன ஆதிக்கப் புத்தி'யின் வெளிப்பாடாய்த்தான் பார்க்கப்படும்.
********************************************
கொலைபயத்தைப் பற்றி ஈழத்தவர்களிற்குச் சொல்லத் தேவையில்லை என்றுவிட்டு உங்களுடைய இளம்பருவ மரணபயத்தை எழுதியிருந்தீர்கள்.
நான் ஈழத்திலிருந்து வந்தாலும்
மரணத்தைப் பற்றி அறிந்திருந்தாலும்
நான் சார்ந்த இனத்தை கீழிறைக்கும் எந்த வசைக்கும் (இலங்கையில் என்ன நடக்கிறது என்பது குறித்து எதுவுமே தெரியாத/தெரிய விரும்பாத இந்தியத் தமிழ் சகோதரர்கள் தமது நாட்டை 'நிலைநிறுத்தும்' (இதை இந்தியாவை அமெரிக்காவாய்ப் போட்டு, இலங்கையை வறிய நாடுகளாய்ப்போட்டு, இலங்கை மீதான 'புஷ்'தனம் என நான் சொல்லுவேன்) ஒரே உயர் நோக்கோடு எப்படி சாடினாலும்) சென்சிற்றிவ் ஆனதில்லை, ஆனால் 'ஈழத்தவராய் இருந்தாலும்' தங்கள்தங்கள் நலனுக்காக 'அரசியல் தெரியாதவர்கள் அரசியல் பேசுகிறபோது" கோபம் வருகிறது. ஆனால் கொஞ்சமும் வருத்தமில்லை.

உங்களைவிட எவ்வளவோ காரணங்களுக்காக எனது 'அடையாளங்களை' நான் காவலாம் என்றாலும்,
எனது இன, சாதி, நாடு போன்றை 'நிலைநிறுத்தும்' பொருட்டு நான் ஒருபோதும் பேசப்போவதில்லை (அதற்கு நிறையப் பேர் இருக்கிறார்கள்). என்னிடம் வந்து, எனது நாட்டில் வசிக்கிற, என்னுடைய மொழியே பேசுகிற வேறு மத சகோதரன் வசைபாடி, 'உனது நலனுக்கான எங்களை உனது இடம் விட்டுத் திரத்தினியே' என்று கேட்டால், சென்சிற்றிவ் ஆய் இராமல் தான் இருப்பேன், அவன் வெளிநாட்டில் வசிக்கிற, படித்தவனாய் இருந்தால்கூட.

அதே பக்குவத்தை 'முற்போக்கான' பிராமணர்களிடம்தானே எதிர்பார்க்க முடியும்? 60, 80 வயது காலமாக தமது ஜாதீயில் ஊறி, கடவுளிடம் சரணடைந்தவர்களிடம் போய் கடவுள் கல்லு என்று சொல்லி எனது அறிவை நிலைநாட்டிக்கொள்ளவேண்டிய வக்கிரம் எனக்கில்லை. ஆதலால் உங்களைப்போன்றவர்களிடம் இதை (கல்லு என்பதை அல்ல) எதிர்பார்க்கிறேன், அதனால்தான் அவர்களிடம் (முற்போக்கான பார்ப்பனர்களிடம்) சென்சிற்றிவ்வான பதிலைக் காண நேர்கிறபோது ஆச்சரியமாயிருக்கிறது. அதை எழுதினேன்.
அதன் அர்த்தம் அப்பாவிகளிடம் போய் வசைபாடுவதை ஆதரிப்பது அல்ல. ரோ.வசந்த் உங்களுடைய பதிவில் அவசியமற்று வந்து உங்களை உங்களது ஜாதியை முன்வைத்து வசைபாடியிருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.

நீங்கள் எழுதியதாகக்கூட இருக்கலாம். பிராமண பையன்களை ஹறாஸ் செய்வது பற்றி. மீன் சாப்பிடச் சொல்லி, இத்தியாதி. பெண்கள்மீதான குழந்தைகள் மீதான வன்முறைகள் எல்லாவற்றையும் பேசுகிறவர்கள் இப்படியான திணிப்புக்களை ஆதரிப்பார்கள் என எனக்குத் தோணவில்லை. ஆக, 'பெரிய அளவில்' நடக்கிற விடயங்களை எழுதுகிறபோது இந்த மாதிரி விசயங்கள் அவற்றின் அவசியமின்மை கருதியே விடுபடுகின்றன, வசதி கருதி இல்லை.

யாரையும் தனிமைப்படுத்துவது, அந்நியப்படுத்துவது தவறுதான்.

யாரையும் துன்புறுத்த வசை சொல்வது தவறுதான்.

இவையெல்லாம் பெரியளவில் பலமற்ற, ஒடுக்கப்படுகிற, சிறுபான்மையினர்மீது நடக்கிறது.

அதை வைத்து நடக்கிற வாதத்தில் உங்களை தொந்தரவு செய்கிற விடயம் எனக்கு ஆச்சர்யம், உங்களுக்கு வியப்பு! அவ்வளவே.


என்னால் முடிந்த அடியெடுத்துத் தருகிறேன். இன்னும் இருபது, ஏன் ஐம்பது வருடங்களில் சாதியற்ற சமூகத்தை நாம் நம்மில் காணவேண்டுமென்றால் அதற்கான வழிமுறைகளாக உங்கள் மனதில் தோன்றுவதை எழுதுங்கள்
-வெங்கட்

உங்களது முன்னெடுத்தலில் எனக்குத் தெரிந்தவை: குறிப்பிட்ட ('படிப்பறிவற்ற' சகோதரர்களின்) பாடல்கள் (அவை 'பழமை'யைப் பாடினாலும்) எழுத்துக்கள், அந்த மக்களின் கலாசாரம் இவை பற்றி எமது புரிதல்கள் விரிவடையவேண்டும். அது நேர விவாதங்களும் வாசிப்பும்தான் முக்கியமாக கல்விக்கூடங்களில் சொல்லித்தந்தார்கள்.
நான் முடிந்தவரையில் அவற்றைப் படித்து வருகிறேன். மூதாதையர்கள் ஒரே மொழி பேசிய மனிதர்களை பிறப்பால் பிரித்து 'பீமட்டை தோய்த்து அடித்த' வரலாற்றை வாசிப்பதை என்னை மனிதராக வைத்திருக்க நான் அறிய வேண்டிய விசயங்கள் என்பதில் எனக்கொரு சந்தேகமுமில்லை, எனது பிள்ளைகள், பிள்ளைகளின்பிள்ளைகள் கூட இவைகளை அறியவேண்டும், இது திரும்ப நிகழாமல் இருக்க இதுவும் ஒரு வழிதான். இந்தமுறைதான் எனக்குத் தெரிந்த முறை.


இதை எழுதிக்கொண்டிருக்கிறபோது மாலனின் பின்னூட்டம் இப்படி முடிகிறது "
வலைப்பதிவுகளில் பதிவர்கள் தாங்களே வரித்துக் கொண்ட அடையாளங்களின் பேரில் மற்றவர்களின் பேரில் கக்குகிற கசப்புகள் அதிகமாகத்தான் இருக்கின்றன. ஒரு universal outlookகை பெறாதவரையில் அவர்கள் இதிலிருந்து மீண்டு வர முடியாது. அந்தப் பார்வையைப் பெற முடியாமல் அவர்களது 'அடையாளங்களே' அவர்களைத் தடுக்கின்றன.

universal outlook என்றால் என்ன? எங்களுடைய நாட்டில் இருக்கிறதை விட்டுவிட்டு அமெரிக்க ஆதிக்கத்தைப் பற்றி சொல்வதா?
எனக்குத் தெரியவேண்டும். யூதர்கள் தமக்கு நடந்த இனப்படுகொலையை சொன்னால் அதை 'பழம் பெருமை' பேசுவதாக நீங்கள் சொல்வீர்களா? வரலாற்றில் வாழவேண்டியதில்லை யாரும். ஆனால் அதைத் தெரிந்து கொண்டு எங்களைப் பக்குவப்படுத்தவும், அதற்கு மனதார/இதயத்தால தயாராகவும் வேண்டும்.
இதயத்தில் 'உயிரேயில்லாத' தமது நாடு/ தமது நாட்டின் நலன்/ தமது நாட்டின் முன்னெடுப்பு இவற்றை வைத்திருப்பவர்கள் 'உயிருள்ள' மனிதர்களைப் பற்றி பேசுவதும், மனித வலிகளைப் பற்றிப் பேசுவதும் முரண்நகை.


ஒவ்வொரு கருத்துக்களையும் கூறுகிறபோது: 'இந்தியாவை' எதிர்த்தால் 'எனக்கு இந்திய நண்பர்கள் இருக்கிறார்கள்' என்றும், பார்ப்பனஆதிக்கத்தை எதிர்த்தால் 'நல்ல பார்ப்பனர்களும் இருக்கிறார்கள்' என்றும் ஆணாதிக்கத்தை எதிர்த்தால் 'நல்ல ஆண்களை எனக்குத் தெரியும்' என்றும் பதாகைகளின் துணையோடு அவற்றை சொல்ல வேண்டியதில்லை என்று நினைத்ததாலையே சுதந்திரமாக எழுதுவது. இதன் அர்த்தம் பார்ப்பானியத்தின் ஒருபக்கத்தை (வசதிப்படி) மட்டும் பார்க்கவிரும்பி அல்ல. அதன் மறுபக்கம் நமது நாடுகளின் ஏனைய வறிய குடிகளுடன் இணைந்ததாவே இருக்கிறது, அதை அவர்களுடன் இணைத்துத்தான் பேசமுடியும் என்பதாலையே.
நன்றி.

Tuesday, March 15, 2005

கவிதை எழுதுவதை நிறுத்துங்கள்

Mission Possible: Boycott Poetry

வெளியே விடாது பெய்யும் மழை... இரவு. தனிமையில், கனத்திருந்தது மனம். அவள்/அவன் நினைவு. வீழ்ந்து. சூழ்ந்தது. உடலுள் என்னையறியாமல் ஏதோ ஒன்று; தீடீரென ஒருபொறி. அப்போது...


என்றைக்காவது நீங்கள் மேற்குறிப்பிட்ட தடிப்பெழுத்தில் உள்ள சூழலுக்கும் உணர்வுகளுக்கும் ஆட்பட்டீர்கள் என்றால், அவ்வளவுதான்! உடனே உசாராகிவிடுங்கள்! உங்களுக்கான பரீட்சை அது! அக் கணம் கட்டவிழும் கவிதையை எப்பாடு பட்டேனும் நிறுத்தி விடுங்கள்!

தொபுகடீர் எனப் பாய்ந்து விழத் தயராய் இருக்கும் கவிதைக்கு தடையிடுவது சிரமம்தான், எனினும் இதை ஒரு சமுதாயக் கடமையாய்ப் பாத்து, ஒத்துழையுங்கள். விளங்கிறது! லௌகீக வாழ்க்கையில் இயந்திரத்தனமான சுழற்சியில் நமக்குள்ளே நாம் சுருங்க, இக் கொடுஞ் சுவர்களுக்குள்ளான அடைப்பு, மூச்சுத் திணற... கவிதை அவற்றிலிருந்து வெளியேற அவகாசம் தருகிறது (தருகிறது?)...
அப்படியும் இப்படியுமாய்
நானும் உங்களைப்போலத்தான். இதுநாள்வரை சுரத்தற்கு இருந்துவிட்டேன். வரலாற்றிலும் சமூகவியலிலும் நித்திரைகொண்டு... (அந்தக் கதை கட்!) அதை ஏன் கேட்பான், 'சொன்னாக் கேடு சொல்லாட்டிச் சங்கேனம்', என் கவித்துவத்தைப் பாத்திட்டு ஒருக்கால் கொஞ்சம் பயிற்சி செய்தால் வரும் கவிதை என்று பரிந்துரைப்புகள் செய்தார்கள் (எங்கயும் இதுதான் வேலை). கனடாவின் மிக நீளமான வீதியான யங்வீதியால் நடந்து போனால் எத்தனை கவிதைகள் வருமென்று தெரியுமா உனக்கு சொன்னார் ஒருவர். காசா பணமா, சரி என்றுட்டு நீண்ட நெடும் தூரம் நடந்ததில்... பாத்ரூம்தான் வந்தது (அதற்கொன்றும் செய்யமுடியாது, குடித்த போப்கள் அத்தனை! களைப்பு வேறு!) எது எப்படியோ நீங்கள் தப்பினீர்கள்!
சொல்ல வந்தது அதல்ல.
இது கவிதைப் புத்தகங்களின் காலமாகிவிட்டது. முன்பாவது தமிழ்நாடு - இலங்கை என்று முடிந்தவரைக்கும் சிறு வட்டத்துள் கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தன (எங்களாலும் ரோதனையை கொஞ்சமேனும் தாங்கமுடிந்தது). இப்போது சிங்கப்பூர், மலேசியா ஐரோப்பா அமெரிக்கா என தமிழர் சென்ற புலங்களெல்லாம் கவித்திருப்பே எனப் பல்திசையுமிருந்து வருகிறது கவிதைகள், “ஏவுகணைகளைப்போல்” என்றால் மிகையில்லை. பதிப்பு நிறுவனங்கள் பெண் கவிகளையும் பிற கவிகளையும் போட்டோ போட்டி போட்டுப் பதிப்பிக்கின்றன. இதனால் மகிழ்ச்சி? தமிழ் இலக்கியந்தானும் வளர்கிறது?
கவிதைகளாலும் கவிஞர்களாலும் தமிழ் வளர்ந்ததென நம்புபவர்கள் என்றால் இதைத் தொடர்ந்து வாசிக்காதீர்கள். இத்தோடு நிறுத்திவிட்டு இன்னொரு கவிதையை எழுதீ... அதை மறக்காமல் *** க்கு அனுப்பி விட்டுத் தொலைந்து போங்கள்!!!
அல்லாதவர்கள் வாருங்கள். இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லத் தேவை ஒத்துழைப்பு, செயற்பாடோ மிகச் சுலபம். கொஞ்சம் வினயமாக இருத்தல் சிறு எதிர்பார்ப்பு, அவ்வளவே. மற்றப்படி வேலை இதுதான்: காணுகிற ‘கவிஞர்’களிடமெல்லாம் கீழ்வரும் கோரிக்கையை முன் வையுங்கள்-
பிளீஸ். தயவுசெய்து. வேறென்ன மொழியில் கெஞ்சுவது. சாஷ்டாங்கமாய் காலில் விழுந்தானாலும் கேட்கிறேன். நிப்பாட்டுங்கப்பா! நீங்களும்தான் பாடினிகளே! கொஞ்சக் காலம் ஓய்வெடுக்கலாமா? றூட்டை மாத்துவமா?

உடன, நீங்க நினைக்கக்கூடாது உனக்குக் கவிதை எழுதத் தெரியாததால நீ இப்படிச் சொல்ல வெளிக்கிடுறது சரியில்லை என... அது உண்மையில்லை. எதற்கும், ஒருமுறை, கமலாதாஸ், "அரசியல் எனக்குத் தெரியாது – ஆனால் அதிகாரங்களில் இருப்பவர்களின் பெயர்கள் தெரியும். நேருவிலிருந்து அவற்றை மாதங்களின் பெயர்கள்போல பருவங்களின் பெயர்கள் போல அடுக்க முடியும் என்னால்…" என்று சொன்னதை, அப்படியே மாற்றி, "கவிதை எனக்குத் தெரியாது. எல்லாக் கவிஞர்களது ‘மாதிரிகளும்’ தெரியும். ஆம் ஆரம்பத்திலிருந்து அவற்றை ஒரு மணி(த்தியாலத்திற்)க்கு பத்தாக எழுதிவிட முடியும் என்னால்” என்று தோளை நிமிர்த்தி உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், ஆமா!!!
வாழ்நாளில் நேசிக்கிற கவிஞர்களைவிட மொழிபெயர்ப்பாளர்களையும் புதிய ‘தகவல் தருவாளர்களையும்’ மிகவாய் நேசிக்கிறேன் - அவர்கள் தாக்கம் செலுத்துகிறார்கள், எம்மிடமிருந்து பிறிதொரு ‘செயற்பாட்டை’ குறைந்தபட்சமாயேனும் வாங்கத் தலைப்படுகிறார்கள். எல்லாவற்றிலும் மேலாக, அவர்கள் தருகிறவற்றில் இரண்டு உயிர்களது உழைப்பு இருக்கிறது தெரியுமா... அற்புதமானவர்கள் அவர்கள்!!
இது மிகையா?
நீங்கள் போயேயறியாத இடங்களில் எல்லாம் உங்களை உலவவிட்டு, பார்த்தேயறியாத மனிதர்களது வாழ்விற்கு மீள்உயிர் கொடுத்தவர்கள் பற்றி உங்களுக்கென்ன எண்ணம்? உங்களை ஆகர்ஷித்த ரஷ்யப் படைப்புக்கள் (மன்னிக்கவும், மொழிபெயர்ப்பாளர் பெயர்கள் தெரியவில்லை), ஜி.குப்புசாமி, அகமத்தோவாவின் ஈரத்தை உங்களுள் சுரத்த வ.கீதா, எஸ்.வி.ஆர், குட்டி இளவரசனை அறிமுகப்படுத்தி, அவனைப் பிரிந்த துயரத்தில் ஆழ்த்திய வெ.சிறீராம், இந்தியாவின் பிற மாநிலங்களின் தலித் படைப்புகளைத் பகிர்ந்துகொண்டிருக்கிற பாவண்ணன்... ரவிக்குமார்... விமர்சனங்கள் இருந்தாலும் முக்கிய பல பெண் படைப்பாளிகளை அறிமுகம் செய்த யமுனா ராஜேந்திரன்... --------- வேறு பெயர்கள் எனக்குத் தெரியவில்லை எனினும் உங்களுக்குத்தெரிந்தவர்களை எல்லாம் இங்கே குறிப்பிட்டு ஞாபகம் கொள்ளுங்கள்.
தமிழில் பாதிப்பு செலுத்திய பல, இலக்கியம் + அரசியல் மொழிபெயர்ப்புகள். ருஷ்யவீழ்ச்சிக்கு முன்பான வரவுகள்... இன்று தலித் இலக்கியம். மொழிபெயர்ப்பு மொழிக்குப் புத்துணர்ச்சி; மொழியைச் செழுமைப்படுத்திற முக்கிய பங்காளி. அதை செய்கிறவர்களில் உங்களுக்கு ஒரு இதாய் வரவில்லையா?!?
ஒரு சின்னப் புத்தகம் நீங்கள் நெஞ்சோடு காவிக்கொண்டு திரிவீர்கள், அது எத்தனை கதவுகளை உங்களுக்காய் திறக்கிறது; உங்களை மீண்டும் குழந்தையாக்கிறது, அது இன்னொரு மொழியிலிருந்து மீள உங்களது மொழியில் பிறக்கிறது.
ஆனால் அவர்களுக்கெல்லாம் தரப்படாத முக்கியத்துவம் ஏன் இந்தக் கவிஞர்களுக்கு?
அதுவும் ஜீவனேயற்று கிடைக்கிற நேரத்தில் கிறுக்கப்படுகிற கவிதைகளிற்கு?
அந்தக்காலத்தில் (எங்கட காலம்) ஒரு நகைச்சுவை நடிகன் (அப்படிச் சொன்னால் என்ன ஆனால் தேங்காப்பூ தலையா, இடியப்பத் தலையா வகை தான் அவரின்ர நகைச்சுவை) ஏதோ படத்தின்ர இடையில தேய்ச்சல்! தேய்ச்சல்! தேய்ச்சல்! எண்டு தலையைப் போட்டு ஆட்டோ ஆட்டெண்டு ஆட்டுவான். அதுபோல ஆயிற்று இப்ப எல்லாத்தையும் பாக்க.
வெறுங் கவிதைகள் குவிகின்றன. முன்அனுமானிக்கக்கூடிய வடிவங்களில் கவிதை ‘ஆக்கல்’ கள்... அதற்கு சர்ச்சையும் சர்ச்சைக்குள்ள புகைச்சலும். ஐயோ!!!!!!!!!!!!!!!!!!!!!!! ‘தோசையிட திறத்துக்கு ஆட்டுக்கல்லுக்கு மாலைபோட்டிருக்கு’ எண்ட கதைதான் மூளைக்குள்ள தொடர்ந்து ஒலிக்குது.
கவிதைகள்/கவிதைப் புத்தகங்கள் ‘கவிஞர்’களை மட்டுமே உருவாக்குகிறது. ஒரு பார்வையும் இல்லாமல், வெறுங் கவிஞர்களை. அவர்களது முகங்களையே பார்த்துக்கொண்டிருந்தால் அவர்கள் கக்குவதை தாங்கவே முடியவில்லை.
இம்முறை காலச்சுவடு ‘நீரோட்டம்’ பகுதியில் கவிஞை லதா, தான் கர்நாடகாவின் சிமோகாவில் உள்ள குவெம்பு பல்கலைக்கழகத்தில் ‘கவிதையும் சமூகமும்” என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு போனது தொடர்பாக எழுதிக்கொண்டுபொகையில், ‘...குஜராத்தியரான மூத்த எழுத்தாளர் பேராசிரியர் கஞ்சி பட்டேல் ஹிந்தியிலும் வல்லமை பெற்றவர்...ஆழ்ந்து யோசித்துத் தீவிரமாகப் பேசும் சமயங்களில் தன்னை அறியாமல் ஹிந்தியில் பேசத் தொடங்கிவிடுவார்...’ என்ற தகவலை தந்துவிட்டு சொல்கிறார்:
“...இந்தியாவின் பல மாநிலங்களையும் சோந்த மூத்த கவிஞர்கள் அந்த கருத்தரங்கில் பங்கேற்றனர். எனக்கு ஒரு வார்த்தைகூட ஹிந்தி தெரியாதது மிக வருத்தமாக இருந்தது. அனைத்து இந்தியர்களும் பேசக்கூடிய மொழியாகத் தமிழ் ஆகப்போவதில்லை. அப்படி இருக்க இந்தியர்கள்(!) அனைவரும் ஹிந்தி பேசக் கற்றுக்கொள்ளவது நல்லது என்று தோன்றுகிறது. ஆங்கிலத்தில் பேசும்போது ஏற்படாத நெருக்கத்தையும் பிணைப்பையும் ஹிந்தி ஏற்படுத்தும் எனத் தோன்றுகிறது. இதைச் சொன்னால் தமிழ்நாட்டு ‘மொழிப்பற்றாளர்கள்” சண்டைக்கு வருகிறார்களோ இல்லையோ, சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் என்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள்”
(காலச்சுவடு. மார்ச் 2005 இதழ்)

இதைப்பற்றி, அவர் குறிப்பிட்ட, சிங்கப்பூரர்களும் தமிழக மொழிப்பற்றாளர்களும் கொதிப்பது ஒருபுறமிருக்கட்டும்.
வேறு புலத்தில் இருக்கிற தமிழக நண்பர்கள் ஹிந்தி என்றால் ‘பிணைப்பு’ என்று சொல்லிக் கேட்டதே இல்லை, அது தெரிந்தால் ‘வசதி’ என்பர்களே ஒழிய, பிணைப்பு? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிணைப்பு. மலையாளம்? ஆங்கிலம்? ஏன் கூடாது?
தமிழ்நாட்டுக் கிராமங்களில் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற கிராமவாசிக்கு ஹிந்தி தெரியாது, இலங்கையின் இன்னொரு மூலையில் இருக்கிற பாமரத் தமிழருக்கு சிங்களம் தெரியாது, தெரியாதபோது பிணைப்பு எங்கிருந்துவரும்? மொழிகுறித்த இந்த குருட்டாம்போக்கான ‘சும்மா’ அபிப்பிராயங்களைப் பார்க்கிறபோது இலங்கைச் சூழலை முன்வைத்த ஒன்றையும் குறிப்பிடவேண்டும். இலங்கையில் சிங்கள புத்திஜீவிகள் (உதாரணம்: றெஜி சிறிவர்த்தன) ரஷ்ய, பிரெஞ்சு என பல் மொழி புலமை உடையவர்களாக இருக்க தமிழர்களோ சிங்களத்தோடையே நின்று மல்லுக்கட்டவேண்டிவந்தது! சிங்களம் கற்பதில் ஒரு நஸ்ரமுமில்லை, கூட இருக்கிற மனிதர்களது மொழியை அறிதலில் என்ன தீமை விளையும்? ஆனால் அதிலுள்ள ஒரே பிரச்சினை ஒரு சாரார் ‘கட்டாயமாக’ அல்லது 'பெரும்பான்மையோடு ஒத்தோடுவதற்காக (ஜோதியில் கலக்க!)' அதை செய்யவேண்டி இருப்பதுதான். அன்றி வேறென்ன?
உலகம் பரந்தது. பார்த்தால், இந்தியா போன்ற ஒரு நாட்டிலிருக்கிற பெரும்பான்மை மொழியைவிட உலகின் பிற பல மொழிகளிற்கு முக்கியத்துவமும் 'பிரயோஜனமும்' உண்டு. எல்லா மாநிலங்களிலும் ஆங்கிலம் இரண்டாம் மொழியாய் இருக்கிறபோது, வேறு உலக மொழிகளைப் படிப்பது, இன்னொரு இந்திய மொழியைவிட சிறப்பான தேர்வாக இருக்கும், முக்கியமாக இலக்கியத்திற்கு.
அதைவிட்டுட்டு
நான் மொன்றியலிற்கு ஒரு கருத்தரங்கிற்குப் போனால், அங்கே ஒரு பேராசிரியர் தான் உணர்ச்சிவசப்படுகையில் எல்லாம் பிரெஞ்ச் கதைத்தால், அவர் மொழி ‘தெரிந்தால் நல்லாய் இருக்கும்’ என நான் நினைக்கிறேனென்றால் பொத்தாம்பொதுவாய் கனேடியர்கள் அனைவரும் பிரெஞ்ச் கற்றுக்கொள்வது பற்றி ஒரு அவசியமற்ற தனிப்பட்ட ஏக்கத்தை கருத்தாக உதிர்ப்பதன் தேவை என்ன? அந்த மொன்றியல் பிரான்ங்கிளிக்கனிடம்(!) ‘பார்டன் மீ’ என்றுவிட்டு அதை ஆங்கிலத்தில் சொல்லக் கேட்டுவிட்டால் விசயம் முடியுது. கூடவே, நான் உணர்ச்சிவசப்படுகையில் செந்தமிழ் கதைக்கிறேனென்றால் அவர் அதில் மூழ்கி முத்தெடுக்கப் போதில்லை பாருங்கள்...
நிலமை இவ்வாறிருக்க, லதாவின் இந்த ‘சும்மா’ கருத்தை முன்வைத்து (எனக்குத் தெரிந்த ஹிந்தியிலையே சொன்னா, Baஸ்!) தமிழக மொ.பற்றாளர்கள் ஒருபுறம், கூடவே சிங்கப்பூரர்கள் மறுபுறம் ஒரு விவாதம் ஆரம்பித்து, லதாவை ‘உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள்’ என்றால்... கடவுளே தமிழ் சூழல் இத்தகு கவிஞர்களால் இத்தகு கருத்துக்களால் இவற்றைத் தொடர்கிற ‘விவாதங்களால்’ தான் இனிவரும் பத்தாண்டுகளுக்கு எடுத்துச் செல்லப்படப் போகிறதா? இதைப் படித்து வருகிற தமிழக இளம் தலைமுறையினர் (கண்ணன் போன்றவர்கள் ‘மெய்சிலிர்த்திருக்கிற’ புத்தகக்கண்காட்சிக்கு வர ஆரம்பித்திருக்கிற ‘சிற்றிதழ் ஈர்ப்புடை’ அதிக எண்ணிக்கையான இளம் தலைமுறையினர்) இந்தக் கருத்துக்களிலிருந்து என்னத்தை எடுத்துக்கொள்ளப் போகிறார்கள்? சரியோ தவறோ பொன்னான 10, 15 ஆண்டுகளுக்கு முன் குறைந்தபட்சம் புரட்சிகரமான கருத்துப் பகிர்வுகள், வாசிப்பு முயற்சிகள் ஆவது இருந்ததே.. செயற்பாடு மற்றும் இயக்கம் (எத்தகையதென்றாலும்) இல்லாத ஒரு சமூகமும் ஒரு சமூகமா. பின்னர் ‘அறிவியக்கம்’ என்பதுதான் என்ன?
‘எமது வரட்சியான காலத்தைத்தானே நாமும் பிரதிபலிக்க முடியும்’ என்று இந்தக் கவிஞர்கள் சொன்னால் - அது நியாயமான எதிர்வினைதான். ‘எமது காலம் வரட்சியானது’ ‘அது கவிதையிலும் பிரதிபலிக்கும்’ ‘பிரதிபலிக்கக்கூடாதெண்டு எப்படி நினைக்கலாம்’ இவ்வாறெல்லாம் சொல்லலாம். சரிதான்! ஆனால் நான் இங்க குறிப்பிடுகிற கவிஞர்கள் அசலான (Original) கவிஞர்கள் அல்லர். தமிழகத்தின் ஏலவே இருக்கிற பேர்போன கவிஞர் பெருமக்களின் சாயலை பிரதிபண்ணி எழுதப்படுகிற இவை பதிப்பிக்கப்படுகிற அழகிலும், முன்னுரையின் தாங்கலிலும் எவ்வளவு காலம் நிற்க முடியும்?
கனிமொழியின் கவிதைப் புத்தகத்தைத் திறந்தால் முன்னுரையில் நஞ்சுண்டன் அவவின் கவிதைகள் பற்றி ‘இல்லாததும் பொல்லாததும்’ சொல்கிறார். வாசிக்கிறவர்களிற்குப் புரியாதா தரம்? இடைத்தரகர் ஒருவர் நின்று சொன்னால்தான் அவை ‘தேறுமா’? லதாவின் கவிதைகள் படிக்கிற நேரம் டவுண்ரவுனில் தலையில துண்டப் போட்டெண்டு பிச்சை எடுக்கலாமோ என்று தோன்றுகிறது.
ஆண்கவிஞர்களோ எனில்... (பிறகொருக்கா தனிய கவனிப்பம்)
எப்பையோ பார்த்த அனிமேஸன்படம்தான் ஞாபகம் வருது. கவிதையளப் பாக்க. விந்துகள் பிறந்து பிறந்து இறக்கிறத குதிச்சு தற்கொலை செய்து இறக்கிறதா (????) அதில எடுத்திருந்தது. அதுமாதிரி படிக்கிற அவங்கட கவிதையெல்லாம் கண்முன்னால தற்கொலைதான் செய்யுது.ரசமா இருக்கு, கண் கொல்லாக் காட்சி.
குடும்ப அமைப்பின் உள்ளே இருக்கிற பெண்களை புரிந்துகொள்ளலாம், ஆனால் வெளியே வந்த 'பத்திரிகை' போன்று துறை சார்ந்து இயங்குகிறவர்கள்
தாங்கள் சார்ந்த துறைகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணமுள்ளன என்கிற தேடல் இன்றி இருப்பதற்கும், கல்விக்கூடங்களில் ஒரே பாடத்திட்டத்தை ஒரு வரி பிசகாம காலாகாலமா 'ஒப்புவித்து'க் கொண்டிருக்கிற இயந்திரத்தனமான ஆசிரியர்களுக்கும் (இவர்களாற்தான் வரலாற்றிலும் சமூகவியலிலும் நான் நித்திரை கொண்டேன், தப்பா?) என்ன வேறுபாடு இருக்கிறது?
கவிதைகளிற்கு அப்பால் லதா போன்றவர்களின் செயற்பாடுகள் என்ன? செயற்பாடு என்றால் தனியே சமூகப் பிரக்ஞை அல்ல. தன்னுடைய படைப்பில் உழைப்பையும் தேடலையும் இணைப்பதுங்கூடத்தான். உள்ளழுந்தி, தனது தனிமையை எதிர்க்க எழுதிய சல்மா என்கிற பிரதியாளரின் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ போன்ற தொகுப்பிலுள்ள பெண்ணினுடைய வாழ்வை பகிராத லதா, ‘சும்மா’ கவிதைகளை எழுதிவிடுவதோடு தனது சமூக பங்களிப்பு முடிந்துவிடுகிறதென நினைப்பதும், ஒரு கருத்தரங்கிற்குப் போகிறவர் இப்படிப்பட்ட ‘அவதானம்’ செய்து அறுப்பதும், இனி அதைப் பார்த்த ஒரு தலைமுறை ‘சும்மா’ கவிதை எழுதவே விருப்பமுறக்கூடும் என்பதும்... பேண்ணோ ஆணோ இன்று ‘கவிஞர்’ களென கட்டமைக்கப்படுகிறவர்களைப் பார்க்கப் பயமாய் இருக்கிறது.
லதாவை இங்கே குறிப்பிடுவது, அவரை அப்படிக் ‘கட்டமைப்பதை’ அவரது ‘தவறாய்’ நினைத்து அல்ல. நான் அப்படி நினைக்கவில்லை. காலச்சுவடிற்கு சிங்கப்பூரில் ஒரு விற்பனை முகவர் என்பது தவிர அவரது எழுத்துக்களில் எனக்கொன்றும் தெரியவில்லை. அந்த ஒரே காரணத்திற்காக ஒருவரை பிரமுகராக்கி புத்தகம் போடுகிறார்கள், ‘நான்கு -சல்மா, கனிமொழி, சுகிர்தாராணி, லதா- முக்கிய கவிஞர்களின் புத்தகவெளியீடு’ என்கிறரீதியில் காலச்சுவடு இதழில் இவர்களது பிரதியை மறைமுகமாக விளம்பரம் செய்யும் பதிவுகள் வருகிறது.
ஒருபுறமென்னெண்டா பெண்கள் தினமும் அதுவுமா (அப்ப மட்டும் என்ன கொம்பா) 'என்னதான் இருந்தாலும் முலைகள் எண்டு பெயர் வச்சிருக்கக்கூடாதுடி' (குட்டி ரேவதிக்கு இப்போதைக்கு விமோச்சனம் கிடையா!) எண்டு பெண்கள விட்டே சொல்ல வைக்கிறார்கள். மறுபுறம், காலச்சுவடு வகை பிம்பங்களை உருவாக்கும் வியாபார தந்திரங்கள்.
இத்தகு அணுகுமுறைகளால் உருப்படியான பெண் படைப்பாளிகள் வருவார்கள் என்று நீங்களும் நம்பினால்-
அம்மாத்தா அரைச்ச அம்மியில தலையை வைக்க.
உரலுக்குள்ள போட்டு மண்டையை இடிக்க.
தலையைப் பிய்த்துக்கொண்டு ஓடலாம் போல இருக்கிறது. ஏற்கனவே இந்த குட்டி முதலாளித்துவ வாழ்க்கை சுவர்களுக்குள் இறுக்கி அழுத்தி வைத்திருக்கிறது. மூளையை கிரைண்டரில் போட்டு அடித்து அடித்து கூழாகிப்போய்க் கிடக்கிறது அதுபாட்டில். வாசிப்பின் தேர்வும் ஆர்வமும் நேரமும் குறுகிக் கொண்டே போகிறது. அந்த நேரத்தை இத்தகைய அர்த்தமற்ற விவாதங்களும் வெறும் கவிதைகளும் பிம்பக் கட்டமைப்புகளும் எடுத்துக்கொள்ள விடலாமோ?
இந்த இடத்தில்தான் கவிதைகளை அழிக்கவேண்டிய வரலாற்றுத் தேவை வருகிறது. இந்தப் புள்ளியில்தான் நாம் சந்திக்கிறோம்!
நாங்கள் அப்படி என்ன பெரிதாய் எதிர்பார்த்தோம்?
தீ.....விரமாய் எழுதுகிறவர்களிடம் குறைந்தபட்சம் தாம் எழுதுகிற விடயங்கள் குறித்த Critical Thinking ஆவது இருக்க வேண்டாமா? அதைக்கேட்பது தவறா? வேறு யாரிடம் போய் இதைக் கேட்க முடியும்?
எங்கள் சிற்றறிவுகளைப் பரத்தி ம்.. அல்லது விரித்து யோசித்துப் பார்த்தால்,
அனுபவமிருக்கா? எந்த இலக்கிய/கல்லூரி/நினைவு மலருக்கோ கட்டுரை எழுதுவதாக சொல்லியிருப்பீர்கள். முடியாமல் போனால் ‘கவிதையாவது எழுதித் தர’க் கேடகிறவர்கள்? ஐந்தே நிமிடத்தில் நாவல் எழுதக் கேட்க முடியுமா? சிறுகதை (சிலவேளை?)?
கவிதை எண்டிற விசச்சாமான் தமிழர்களது எத்தனை சாத்தியங்களை அழித்திருக்கிறது? எழுதிக்குவிகிற கவிதைகளிற்கு முன் சிறுபான்மையாய், நோஞ்சான் குழந்தையாய், கட்டுரை – நாவல் என பரந்த அளவில் கைவைக்காத பிற துறைகள் பற்றாக்குறையாய் நிற்கிறது.
என்ன செய்யலாம்?
FOLLOW ME!
பிற மாற்று பரிசீலனைகள்:
5. நாவல்:
வந்த தேச நினைவுகளுடன், வாழ்ந்த வாழ்க்கையில் மீளப் போய் நின்று வாழ்ந்தபடி நிற்கும் நீங்கள் அனைவதும் ஒரே ஒரு நாவலை எழுதி உங்களைப் காலியாக்கிக்கொள்ளுங்கள். இந்த விடயத்தில் சு.ரா பின்பற்றப்பட வேண்டியவர். பசுவய்யா தன் படைப்புகளை ஒவ்வொன்றாக காலி பண்ணி, கடைசியில் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலில் தன்னை முற்றாகவே காலி பண்ணியதாகக் கூறியிருந்தார். அவர் புனைவுகள் எழுதாத காலத்தில் கவிதை எழுத மெனக்கெடாமல் சிறுசிறு கவிதைகளை மொழிபெயர்க்க முயல்கிற எண்ணம் முக்கியமானது.
4. சிறுகதைகள்:
கண்ணில் விழுந்த செய்தி: இப்போது கவிதைகளில் ‘கதை’ சொல்லும்போக்கு காணக்கூடியதா இருக்கிறது. இது நல்லமா? கூடாதா?
அட! இது கேள்வி, இதுதான் விசயம்! பொங்கி வரும் கவிக் கணத்தில் அதை அமுக்கி திசை மாற்றி விரித்து/விஸ்தரித்து கதையாக்கலாம். மனித உளவியலை-ஏக்கத்தை பொறாமையை – அலசலாம். 'உலகத்தரக் கதைகள் இல்லையே இல்லையே' எனக் கூவுவதை விடுத்து, முயன்றால் முடியாதா?
தட்டைக் கவிதைகளைவிட பலப் பல தேறாதா?
3. விமர்சன முயற்சிகள்
வாசிக்கிற எல்லாத்துக்கும் ஏற்கனவே சொல்லப்பட்டவைகளிலிருந்து அவை எப்படி வேறுபடுகின்றன என ஆரம்பித்து விமர்சிக்கத் தொடங்கலாம்.
முயற்சித்தால் பாவமில்லை! யோசித்துப் பாருங்கள், எங்களில் எத்தனைபேர் கவிதைக்கு விமர்சனம் எழுதத் தெரிந்தவர்கள்? கவிதை வரிகளை எடுத்து கவிஞர் இப்படிச் சொன்னார் அப்படிச் சொன்னார் எண்டு றிபீற் பண்ணாமல்? குறை சொல்லவில்லை, எமது எழுதுகிற சனத்தொகையில், நூத்துக்கு 99.999 வீதம் (சும்மா ஒரு துணைக்கு!) கவிதை எழுதுபவர்களாக இருக்கையில் எம்மால் ஒரு தொகுப்பிற்கு ஒழுங்காய் விமர்சனமே எழுதத் தெரியாமல் இருக்கென்றால், இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
2. மொழிபெயர்ப்பு

**நூற்றாண்டுத் தனிமை (One hundred years of Solitude) பிற இந்திய மொழிகள் அனைத்திலும் வந்திட்டுதாமே, தமிழ்ல இல்லையாமே? உண்மையா?
ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்கப் படிக்க எவ்வளவு ஆசையாயிருக்கு, தமிழில மாத்தோணும் போல கிடக்கு. மொழிப் பாண்டித்தியம் பெற்றவர்கள் இவற்றை கணக்கெடுக்கக்கூடாதா? விடுத்து,
ஆசியா ஐரோப்பா அமெரிக்கா என்று கண்டங்கள் தாவி நின்று மொழி விகசிப்பில் கவிதைகளை மட்டும் எழுதுவது அநியாயம், துரோகம்!
1. வாசிப்பு
எவ்வளவு காலந்தான் எங்களுடையதை நாங்களே படிப்பது? மற்றவர்கள் எழுதுவதையேயயயயயய நாமும் எழுதாமல் இருக்க ஆவது, இதை நாம் செய்வோமாக.

இவற்றைச் செயலாக்க, அதிகாரம் மட்டும் தரப்பட்டிருக்குமானால் அந்தக் காலத்தில சீனாவில குருவிகளை அழித்ததுபோல கவிதைகளிற்குத் தடா போடலாம் (அதால அங்க சீனாவில பிறகென்ன நடந்ததெண்டு இங்க ஒருதரும் அரசியல் வகுப்பெடுக்க வேணாம்). ஒவ்வொரு கவிதையையும் ‘படித்திற்று படித்திற்கு கிழித்தெறி!’ என ஆணையிடலாம். கவிதை அருவிபோலப் பாய காத்திருக்கிற கணம் அப்பிடியே பே(b)ஸினுக்குள்ள கச் பிடிச்சு பேனா பேப்பரோட தயாராகி அதை கதையா நீட்டிக்க உதவிற உதவியாளர்களை கவிஞர்களுக்கு வழங்கலாம். அல்லது விழுந்த கவிதையை ஏந்தி அது எந்த ‘மாதிரி’, யாரின் ‘கொப்பி’ என பார்க்க ஆள் அமர்த்தலாம்.

வேறு ஏதாவது பரிசீலனை(கள்) இருந்தால் எழுதுங்கள்!

"...
எல்லாம் எதற்காக?
பாஸ்டர்நாக் கவிதை ஞாபகம் வந்தது.
'உனக்கு உரியவை அனைத்தையும் கொடுப்பது -
இதுதான் படைப்பு.
அப்படி இல்லாமல்,
காது செவிடாகக் கூக்குரலிட்டு ஆக்கிரமிப்பது
அது இல்லை.
எவ்வளவு கேவலம்
எழுதுவதற்கு ஒன்றும் இல்லாமல் எழுதிக்குவிப்பது,
..."
(நகுலன், பக்.26, கவிதை: கையெழுத்து.நூல்: கொங்குதேர் வாழ்க்கை-2)


இதுதான்
தமிழ் ‘உய்ய’
ஒரு சாமானிய பெட்டையால விட முடிந்த அறிக்கை

கவிதை அழிக!
தமிழ் உய், உய், உய்க!

வெறுத்துப்போய் Stand எடுத்த
Anti-poet
Afsrushka


(மகிழ்ச்சிப் பகர்வு: பாவண்ணனிற்கு மொழிபெயர்ப்பிற்கு சாகித்திய அகடமி விருது)

**'இந்திய மொழிகள் அனைத்திலும்' என்பது உறுதியான தகவல் இல்லை.

Tuesday, March 08, 2005

கவிதை - சிவரமணி

அவமானப்படுத்தப்பட்டவள்



உங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்,
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்
என்னுடைய நாட்களை நீங்கள்
பறித்துக் கொள்ள முடியாது.
கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்
உறுதி பெற்றது.

நிராகரிக்கப்பட முடியாதவள் நான்
இனியும் என்ன
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
நான்
பிரசன்னமாயுள்ளேன்
என்னை
அவமானங்களாலும்
அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்

ஆனால்,
உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஒரு அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை
அசுத்தம் செய்கிறேன்.

என்னுடைய நியாயங்கள்
நிராகரிக்கப்படும் வரை
உங்களின் எல்லாப் பாதைகளும்
அழுக்குப் படிந்தவையே.

(1990)
~சிவரமணி, வயது 22
தற்கொலைக்கு ஒரு வருடம் முன்.

Monday, March 07, 2005

'விடுபடல்'களின் அரசியல்

கொங்குதேர் வாழ்க்கை தொகுதி 2
புதுக் கவிதைகளின் தொகுப்பு
93 கவிஞர்களின் 893 கவிதைகள்
யுனைடெட் ரைட்டர்ஸ் (2004)
தொகுப்பு: ராஜமார்த்தாண்டன்

பெப்ரவரி காலச்சுவடு இதழில், சித்தார்த்தன் என்பரால், இத்தொகுப்பில் ‘விடுபட்ட’ கவிஞர்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது (தி.சோ. வேணுகோபாலன், நாரணோ ஜெயராமன், பிரம்மராஜன், லஷ்மி மணிவண்ணன், என்.டி. ராஜ்குமார்)
“...நீங்கள் குறிப்பிட்டுள்ள கவிஞர்கள் உள்படச் சிலரை நான் சேர்க்கவில்லை. தி.சோ. வேணுகோபாலனைப் பொருத்த வரை பிச்சமூர்த்தியைப் படித்த கவிதை வாசகனுக்கு வேணு கோபாலனைப் படிக்கவேண்டியதில்லை. அதுபோலவே பசுவய்யாவின் அபரிமிதமான பாதிப்புக்கொண்டவர் நாரணோ ஜெயராமன் என்பதாலேயே சேர்க்கப்படவில்லை. பிரம்மராஜன் கவிதைகளைப் பற்றி நான் ஏற்கனவே பலமுறை எழுதியும் பேசியும் உள்ளேன். ... அந்த நவீனத்துவம் தமிழ் மனம் சார்ந்ததாக இல்லாமல் மேலைநாட்டுக் கவிதைப் போக்கின் அதீதத் தாக்கத்தாலும் படிப்பறிவின் மூலமான அனுபவ வெளிப்பாட்டினாலும் உருவானது. சோதனை முயற்சிக்காகவே சோதனை என்றானதாலும் திருகலான மொழி நடையினாலும் மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் படிப்பது போன்ற உணர்வை, அந்நியத் தன்மையை இவரது கவிதைகள் தோற்றுவித்துவிடுகின்றன.”
"இன்றைய கவிஞர்களில் லஷ்மி மணிவண்ணனை ஏன் சேர்க்கவில்லை என்று சிலர் கேட்கின்றனர். அவரது கவிதைகளை முழுமையாகப் படித்த பின்னர்தான் இத்தொகுப்பில் சேர்க்காமல் நிராகரித்துள்ளேன்.
இன்றைய கவிதைக்கான மொழிநடையும் உருவமும் அவரது கவிதைகளில் சாத்தியமாகவில்லை. இதேபோலத் தலித் கவிஞர் எனப் பரவலாக அறியப்படுகிற என்.டி. ராஜ்குமார் கவிதைகள்கூட எதையோ பிரமாதமாகச் சொல்லும் பாவனையில் ஆரம்பித்து எந்த அனுபவத்தையும் தராமல் சிதைந்துபோய்விடுகின்றன.
தமிழில் வெளிவந்துள்ள
அனைத்துக் கவிதைத் தொகுதிகளையும் கவனமாகப் படித்துத்தான் தேர்வுசெய்துள்ளேன். இவ்விடுபடல்களில் எவ்வித அரசியலும் இல்லை.’’
என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து எழுத முன், சில விடயங்களைக் குறிப்பிடவேண்டும். இத் தொகுதியில் கடந்த காலங்கள் போலன்றி, ‘புறக்கணிப்புக்குள்ளாகிற’ அல்லது 'தவிர்க்கப்படுகிற' (19) ஈழத்துக் கவிஞர்கள், (10) பெண் கவிகள் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள். அது அவர்களை தவிர்க்க முடியாத கால மாற்றத்தை காட்டுகிறது. இக் கவிஞர்கள் தமது வாழ்வை அடையாளப்படுத்தினார்களா என்பது ஒருபுறமிருக்க மறுபுறத்தில் தலித் அடையாளங்களை கொண்டதாய் எவ்வொரு படைப்பும் இதில் இல்லையென்பதை -அவர்களது படைப்புகள் புறக்கணிக்கப்படமுடியாதளவு வீர்யமாக வெளிப்படுகிற இந்தக் காலத்தில்- எப்படி எதிர்கொள்வது?

இன்றைய கவிதைகள் குறித்த ராஜமார்த்தாண்டனது -சுரா போன்றவர்களதை ஒத்த- நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை. நவீனக் கவிதையின் ‘வரையறுப்பு’ ஒத்ததொனியிலான (
monotonous) பரந்த அனுபவங்களைத் தராத கவிதைகளையே தந்துகொண்டிருக்கிறது. இந் நூலிலேயே ராஜமார்த்தாண்டன் கூறுகிறார்: "...நல்ல கவிஞன் மொழியிலிருந்து தனக்கேயானதொரு கவிதை மொழியை உருவாக்கிக்கொள்கிறான்.
...கவிதை என்றும் புதியதாக இருக்க வேண்டும். கவிஞ
னின் தனித்துவம், அவனுக்கேயான பார்வை, அவது சிறப்பான மொழியாளுமை, எல்லாவற்றுக்கும் மேலாக அவது அபூர்வமான கற்பனையாற்றல் காரணமாகக் கவிதையில் இந்தப் புதுமை சாத்தியமாகிறது.”

இவற்றினடிப்படையின்படி பார்த்தால், இதில் விடுபட்ட கவிஞர்கள்தான் இந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்பவர்களாக படுகிறார்கள். ஏனெனில் அவர்களுடைய எழுத்து இன்றைய ‘நவீனக் கவிதையின் வரையறுப்பைத்’ தாண்டியது. அதனால்தான், ராஜமார்த்தாண்டனது பிரம்மராஜன் மற்றும் ஏனையவர்கள் பற்றிய கருத்தோடு உடன்பட முடிகிறபோதும், என்.டி.ராஜ்குமாரை அந்த சட்டகத்துள் அடக்க முடியவில்லை.

என்.டி.ரா வுடன் இக் குறிப்பிட்ட நேர்காணலில் கேட்கப்படாத ‘விடுபட்ட’ இன்னொருவர்: வ..ஐ.ச.ஜெயபாலன்.

ஈழத்தின் ஆதிக்க சமூகமான யாழ்ப்பாணம் அல்லாத, பகுதிகளின் அடையாளம் வ.ஐ.ச.வின் கவிதைகள். அதுமட்டுமல்லாது, அவரது ‘நமக்கென்றொரு புல்வெளி’ யோ பிற பல அரசியற் கவிதைகளோ பாதிப்படையாத தமிழக தீவர வாசகர்கள் குறைவு. ஈழ எழுத்திலேயே, அவரது பாதிப்பிலே இன்னமும் ஒரு தலைமுறையே இருக்கிறது! அப்படி இருக்கிறதுபோது அவரது புத்தகத்திற்கு (நூலின் பெயர்: பெருந்தொகை?) மதிப்புரை எழுதியுள்ள ராஜமார்த்தாண்டன் அவரை இதில் தவிர்த்திருப்பது என்ன அடிப்படையில் என்பது தெரியவில்லை (பிற ஈழத்துக் கவிஞர்களது இதில் சேர்க்கத் தேர்நதெடுத்த கவிதைகளும் அவர்களது ‘சிறந்த’ கவிதைகளல்ல!).
வ.ஐ.ச.ஜெயபாலனின் பிம்பங்கள் உடைந்து வெறும் எழுத்துக்கள் மட்டுமே எஞ்சியிருக்கிற அதுவும் கேள்விக்குட்படுத்தப்படுகிற காலமிது. எனினும், ஈழத்துக் கவிதைகளை பற்றிப் பேசுகிறபோது அதன் அடையாளங்களை அதன் தடங்களைப் பதிய விழைகிறபோது அவர் இல்லாமல் அது சாத்தியமில்லை. அவரை நன்கே படைப்புகள் ஊடாக நேரிலும் அறிந்திருக்கக்கூடிய ஒருவர் அவரைத் தவிர்ப்பதில் அரசியல் இல்லையா?

மதிவண்ணனுடைய (நெரிந்து?) கவிதைத் தொகுதியும் ராஜமார்த்தாண்டன் கவனமாகப் படித்த கவிதைத் தொகுதிகளில் அடங்குமா என்பது தெரியவில்லை. அவருடைய ரசனையில், அவை ‘கவிதைகள்’ இல்லை என்றால்கூட, அந்த வாழ்வியல் ஒலிக்கவேண்டும் என்கிற தேவையின்படியேனும் அவைகள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

இது, தனியே, தனிப்பட்டொருவரின் ரசனை சார்ந்த தேர்வு என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அதில் ஒன்றும் பிரச்சினையில்லை, அதையே ‘அரசியலற்று தேர்கிறேன்’ எனுகிறபோது அது பிரச்சினைக்குரியதாகிறது. Simply, அது சாத்தியமில்லை என்பதால்! உதாரணமாக, அவரைப்போலன்றி, பலருக்கு ராஜ்குமாரது கவிதைகள் ‘பிரமாதமாக’ எதையோ சொல்லத்தான் செய்கின்றன. அதேபோல, வாசகியாய், ‘எனக்கு’ பிரமாதமாய் எதையும் சொல்லாத/எந்த அனுபவத்தையும் தாராத கவிதைகள் இத் தொகுதியில் நிறைய இருக்கின்றன, ஈழக் கவிதைகள் உட்பட. அத்துடன், இந்தத் தொகுதியில் வந்த அனைவரும் ராஜமார்த்தாண்டனதே ‘பிடித்தமாய்’ இருப்பரென்றும் தோன்றவில்லை. அப்படியல்லாதபட்சத்தே என்.டி.ரா வையும் இன்ன பிறரையும் தன்னைப் ‘பிரமாதப்படுத்தாவிட்டாலும்’ வேறு சிலர் பிரமாதப்படுத்துவதாய் நினைக்கிறார்கள் என்கிற அடிப்படையில்கூட போட்டிருக்கவேண்டுமே!

ராஜமார்த்தாண்டனது, தேர்விலும் -எல்லோருடைய தேர்விலும்போலவே- அரசியல் இருக்கிறது. என்.டி.ரா அவரைப் பிரமாதப்படுத்தாததற்கும் அதுவே காரணம். இதை ‘திட்டமிட்டு’ வன்மத்துடன் ராஜமார்த்தாண்டன் செய்தார் என குற்றுஞ்சாட்டவில்லை. இவ் அரசியலை நடைமுறைப்படுத்த, வெளிப்படையான –அவருக்கே தெரியாத- அவரது இதுகால்வரை படித்த, ரசித்த, பழக்கப்பட்ட, ‘நல்ல கவிதை’ ‘பிரமாதமாய் சொல்கிற கவிதை’ குறித்த நிலைப்பாடுகளே போதுமானது. இந்த நிலைப்பாட்டில் பசுவய்யாவின் தத்துவ விசாரக் கவிதைகள் படிப்பதற்கும் ரசிப்பிற்கும் உகந்ததாய் பழக்கப்பட்டிருக்கும் (பசுவய்யாயின் பாதிப்பை ராஜமார்த்தாண்டனது கவிதைகளில் காணலாம், அவர் இத் தொகுதியில் தனது கவிதைகளை உள்ளடக்கவில்லை). பசுவய்யா கவிதைகளை ஒத்த தொனியே ‘நவீனக் கவிதை மாதிரி’ என நினைப்பதும் மற்றவைமீதான ஒவ்வாமையும் ரசனை சார்ந்ததே.

மற்றப்படி, இக் கவிஞர்களின் விடுபடல்கள் குறித்து வருத்தமில்லை! இத்தகைய விடுபடல்கள் இல்லாமல் தொகுப்பொன்று வருவதும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது (என்னுடைய தேர்வுகளில் எனது அரசியல் இல்லாமல் போவதெப்படி? என்னை எதிர்க்கிற ஒன்றை தேர்கிற நான் எனது கருத்தை வலியுறுத்துகிற இன்னொன்றைப் போடாவிட்டால் எனது இருப்பை சமன்செய்ய/காக்க முடியுமா!?).


தவிர, வாசிப்பைப் பொறுத்தவரை, (நிறைய) எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள் பயனுள்ளவை, பள்ளி மாணவர்களுக்கு இது கவிஞர்கள் பற்றிய சிறந்த அறிமுகமாக இருக்கும். இத்தொகுதியில் குறிப்பிட்ட இக் கவிஞர்கள் விடுபட்டுள்ளதால் மாணவர்களுக்குத்தானேயன்றி, கவிஞர்களுக்கு ஒரு இழப்புமில்லை. ஒரு படைப்பாளியுடைய இருப்பு இவற்றில் தங்குவதில்லை.


--------------------------------------
எனக்குத் தெரிந்த தகவற் பிழை:
ஈழக் கவிஞை சிவரமணி தனது 23 ஆம் வயதில் மே 5 -1991 இல் தற்கொலை செயதுகொண்டார். இதில் அவர் 72ம் ஆண்டு பிறந்தவர் எனப் போடப்பட்டிருக்கிறது.